ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
5-12-2022 முதல் 9-12-2022
2.பருவம்
2
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கூடித் தொழில் செய் – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
உழைப்பே மூலதனம், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
6.பக்கஎண்
61 - 69
7.கற்றல் விளைவுகள்
T-606 தங்கள் பகுதிகளில்
காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல்,
அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.
8.திறன்கள்
தொழில் மூலம் அடையும் முன்னேற்றத்தை உணரும்
திறன்.
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகளைப்
பொருத்தமாகப் பயன்படுத்துதல் திறன்.
9.நுண்திறன்கள்
தொழிலின் மேன்மையை அறிந்துகொள்ள முயலும்
திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2018/10/qr-code-video-6.html
https://tamilthugal.blogspot.com/2020/06/8-ulaippey-uyarvu-8th-tamil-kattur.html
https://tamilthugal.blogspot.com/2021/10/2-tamil-ilakkanam-suttu.html
https://tamilthugal.blogspot.com/2020/06/6-2-3-suttu-ezhuthugal-vina-eluthukal.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_27.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_28.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_36.html
11.ஆயத்தப்படுத்துதல்
வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த உழைப்பின் பெருமை பற்றிய
கதையைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வினாச் சொற்களைக் கூறச்செய்தல்.
உழைப்பு பற்றிக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
உழைப்பே மூலதனம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
சுட்டு
எழுத்துகள், வினா எழுத்துகள் குறித்து விளக்குதல்.
கதையின்
கதாப்பாத்திரங்களைப் பற்றி விவாதித்தல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
உழைப்பின் அவசியத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். சுட்டு, வினா எழுத்துகளைப்
பயன்படுத்தித் தொடர்களை அமைத்தல்.
15.மதிப்பீடு
LOT – சுட்டு எழுத்துகள் என்றால் என்ன?
MOT – அகவினா, புறவினா – வேறுபடுத்துக.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
HOT
– நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து
எழுதுக.
உழைப்பே
மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
உழைப்பு குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.
நீங்கள் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.