ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
28-11-2022 முதல் 2-12-2022
2.பருவம்
2
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கூடித் தொழில் செய் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
வளரும் வணிகம்
6.பக்கஎண்
56 - 60
7.கற்றல் விளைவுகள்
T-607 மற்றவர்களின் மொழிகள்,
உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நிலை, அவற்றில் காணப்படும் வேற்றுமைகள், அவை
தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றிப் பேசுதல்.
8.திறன்கள்
வணிகத்தின் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொள்ளும்
திறன்.
9.நுண்திறன்கள்
தமிழரின் வணிக மேன்மையை அறிந்துகொள்ள முயலும்
திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
தமிழ்த்துகள்: வளரும் வணிகம் வகுப்பு 6 QR CODE VIDEO
(tamilthugal.blogspot.com)
11.ஆயத்தப்படுத்துதல்
வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த வணிக வகைகளைக்
கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழரின் பெருமையைக் கூறுதல்.
வணிகம் பற்றிக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
பண்டமாற்று வணிகம், வணிகத்தின் வகைகள் குறித்துக் கூறுதல்.
சிறுவணிகம், பெருவணிகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
ஏற்றுமதி,
இறக்குமதி பற்றிக் கூறுதல். வணிகத்தில் நேர்மை, இணையவழி வணிகம் குறித்து
விளக்குதல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
வணிகத்தின் அவசியத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். இணைய வழி வணிகம் குறித்து
விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – வணிகம் என்றால் என்ன?
சிறுவணிகப்
பொருட்கள் யாவை?
MOT
– சிறுவணிகம், பெருவணிகம் – வேறுபடுத்துக.
பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
HOT
– நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து
எழுதுக.
உங்கள்
பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
வணிகம் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.
ஊரின் சிறப்புப் பொருள்கள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.