எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
5-12-2022 முதல் 9-12-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே
இன்பம் – கவிதைப்பேழை, உரைநடை உலகம், விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
ஒன்றே குலம்,
மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசர் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம்.
6.பக்கஎண்
168 - 183
7.கற்றல் விளைவுகள்
T-808 ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள்
குறித்துக் கலந்துரையாடல், சில வினாக்களுக்கு விடை காண
முற்படல் (எ.கா) தனது சுற்றுப்புறத்தில் வாழும் குடும்பங்கள் பற்றிச் சிந்தித்தல்.
இதன்தொடர்ச்சியாக, ராமுமாமாவின் பெண் குழந்தை ஏன்
பள்ளிக்குச் செல்லவில்லை? என்ற வினாவை எழுப்புதல்.
8.திறன்கள்
அறநெறிகளைக்
கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.
அயோத்திதாசரின்
சிந்தனைகள் வழியாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உணர்தல்.
நவீனச்
சிறுகதைகளைப் படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன்பெறுதல்.
யாப்பிலக்கணச்
செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்துகொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
அயோத்திதாசர்
குறித்து அறியும் திறன்.
திருமூலர்,
புதுமைப்பித்தன் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_28.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_6.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_87.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_80.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_37.html
https://tamilthugal.blogspot.com/2022/01/8-8th-tamil-ilakkanam-yappu-question.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-3-2.html
https://tamilthugal.blogspot.com/2021/02/8-ayothithasar-sinthanaikal-8th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2021/01/8-meyngnana-oli-8th-tamil-kuru-vina.html
https://tamilthugal.blogspot.com/2021/01/7-ondre-kulam-8th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2020/01/ondre-kulam.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
புலவர்கள் குறித்து கூறச்செய்தல்.
அயோத்திதாசர்
குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
யாப்பு இலக்கணத்தை
அறிமுகப்படுத்துதல்.
புதுமைப்பித்தனை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மனித யந்திரம் கதை
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். அயோத்திதாசரை உணரச் செய்தல். யாப்பு
இலக்கணங்களை உதாரணங்களுடன் விளக்குதல். ஒன்றேகுலம், மெய்ஞ்ஞான ஒளி பாடல் குறித்து
விளக்குதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அயோத்திதாசர் குறித்துக் கூறுதல். தமிழ்ப்புலவர்கள்
குறித்துக் கூறுதல். யாப்பு குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – நமன் என்பதன் பொருள்
..............................
அயோத்திதாசர் நடத்திய இதழ் .....................................
MOT
– அந்தாதி என்றால் என்ன?
மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.
HOT
– சமூகம் உயர்வடைய மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகளை எழுதுக.
பிறருக்கு நீங்கள் செய்த
உதவிகள் 5 எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
புதுமைப்பித்தனின் கதைகளைப் பட்டியலிடுக.
அயோத்திதாசர் குறித்து இணையம் மூலம் அறிதல்.