PDF LINK கீழே👇
10th tamil quarterly exam answer key 2024 virudhunagar district
பத்தாம்
வகுப்பு தமிழ்
காலாண்டுத்
தேர்வு செப்டம்பர் 2024
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. அ. வேற்றுமை உருபு
1
2. ஆ. மலேசியா 1
3. இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் 1
4. ஈ. இலா 1
5. அ. ஏவல் விடை 1
6. ஈ. மன்னன், இறைவன் 1
7. இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும்
நூல் 1 தமிழ்த்துகள்
8. ஆ. குமரகுருபரர் 1
9. அ. சங்க
காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது 1
10. ஆ.
ஜூன் 15 1
11. ஈ. பாடல், கேட்டவர் 1
12. அ.
யானை 1
13. இ.
தோழமை – ஏழமை 1
14. இ. நெடுமை + திரை 1
15. ஈ. கம்பராமாயணம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. அ. பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்? 1
ஆ. இளமைப்பருவத்திலேயே யாருடைய பகுத்தறிவுக் கருத்துகள் கலைஞரை
ஈர்த்தன? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17. ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல்
2
18. 1.“அருளைப் பெருக்கு, அறிவைச் சீராக்கு”
2.“மயக்கம் அகற்று, அறிவைத் தெளிவாக்கு”
3.“துணையே துணையே கல்வி துணையே”
4.“பெருக்கு பெருக்கு அருளைப் பெருக்கு” 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
19. 1.செயற்கை நுண்ணறிவால்
இயங்கும் போக்குவரத்து ஊர்திகள். 1
2.மனித இனத்தை
இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளிலிருந்து காப்பாற்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கும்
இயந்திர மனிதர்கள். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
20. 1.பெருங்கதை 2.சீவக சிந்தாமணி
3.கம்பராமாயணம்
4.வில்லிபாரதம் 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டாய
வினா
21. பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22.
அ. இன்சொல் - பண்புத்தொகை - இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு. 1
ஆ. முத்துப்பல் - உவமைத்தொகை
- சிறுமி முத்துப் போன்ற பல் வரிசை தெரிய சிரித்தாள். 1
23. கிளர்ந்த
- கிளர் + த்(ந்) + த் +அ
கிளர்
- பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி 2
24. வகை:
இக்குறளில் அமைந்துள்ள
அளபெடை இன்னிசை அளபெடை ஆகும்.
எ.கா.
உடுப்பதூஉம், உண்பதூஉம் 1
இலக்கணம்:
செய்யுளில் ஓசை குறையாத
இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்தாக அளபெடுப்பது இன்னிசை அளபெடை
ஆகும். 1
25. அ. வளி வீசியதால்
வாளி கீழே விழுந்தது. 1
ஆ. பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன. 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
26. பாரதியார்
கவிஞர் - பெயர்ப் பயனிலை
நூலகம் சென்றார் -
வினைப் பயனிலை
அவர் யார்? - வினாப் பயனிலை. 2
27. ஒரு செய்யுளில்
பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப்
பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள். 2
28.கலைச்சொற்கள்
அ. திரைக்கதை 1
ஆ. கலந்துரையாடல் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. சோலைக்காற்று -
என்னைத்தேடி வருபவர்களுக்கு உயிர்வளி மிகுந்த காற்றைத் தருகிறேன்.
மின்விசிறிக்காற்று -
இயலாதவர்களுக்கும் கூட இதமான காற்றைத் தருபவன் நான்.
சோலைக்காற்று -
என்னைத் தூது விட்டன தமிழ் இலக்கியங்கள்.
மின்விசிறிக்காற்று –
என்னை மேம்படுத்தி விற்பனைப் பொருளாக்கிவிட்டனர்.
சோலைக்காற்று -
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடப்பதாகக் கவிஞர் எனைப் பாடியிருக்கிறார்.
மின்விசிறிக்காற்று –
என்னால் மின்சாரம் இல்லாமல் இயங்கமுடியாது, உன்போல் விடுதலைப் பறவையாய் வீதிஉலா
வர முடியாது.
சோலைக்காற்று -
புலம்பாதே, நாம் இணைந்தே இம்மனிதர்களை மகிழ்விக்கிறோம், அவர்கள் பதிலுக்கு நம்மை மாசாக்குகிறார்கள், காசாக்குகிறார்கள்.
மின்விசிறிக்காற்று –
ஆம் நண்பா. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. 1.செயற்கை
நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.
2.மனித இனத்தை இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளிலிருந்து காப்பாற்ற
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதர்கள். 3
31. அ. மாணவ
நேசன் 1
ஆ. அண்ணா 1
இ. கலைஞர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. 1. பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.
2. கடல்கொண்ட குமரிக்கண்டத்தில்
நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.
3. தென்னவனாம் பாண்டிய
மன்னனின் மகள்.
4. உலகப்பொதுமறையாம் திருக்குறளின்
பெரும் பெருமை.
5. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என விரிந்தமை.
6. நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று
விளங்குவது.
7. பொங்கியெழும் நினைவுகளால்
தலைபணிந்து வாழ்த்துகிறார் பாவலரேறு. 3
33. 1.தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.
2.உழவர் ஒருவர் உழவுத் தொழிலுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, கூடை, கடப்பாரை முதலிய கருவிகளைத் தயார் நிலையில்
வைப்பார்.
3.ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப நேர்த்தி செய்யப்பட்ட விதைகள்
இருக்கும், அகல உழுவதைவிட ஆழ உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் நடுவார், பராமரிப்பார், அதிக விளைச்சல் காண்பார்.
4.இது பல்வேறு தொழில்களுக்கும் நம் செயல்களுக்கும் பொருந்தும். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
34. கட்டாய வினா.
அ.பெருமாள் திருமொழி
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
-
குலசேகராழ்வார். 3
அல்லது
ஆ.திருவிளையாடற்புராணம்
புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா. - பரஞ்சோதி முனிவர். 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35.வினா ஆறு வகைப்படும். அவை
1.அறிவினா 2.அறியாவினா 3.ஐயவினா
4.கொளல் வினா 5.கொடை வினா 6.ஏவல் வினா. 3
36. 1. குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி.
2. உவமை ஒரு தொடராகவும்
உவமேயம் ஒரு தொடராகவும் வந்து இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி.
3. உவமேயம் - தன் கைப்பொருளைக்
கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது.
4. உவமை - மலைமேல் பாதுகாப்பாக
நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது.
5. உவமஉருபு - அற்று
6. தன் கைப்பொருளைக் கொண்டு
ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். 3
37. 1.கண்ணே கண்ணுறங்கு
- விளித்தொடர்
2.காலையில் நீ எழும்பு
- வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
3.மாமழை பெய்கையிலே - உரிச்சொற்றொடர்
4.மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்
5.பாடினேன் தாலாட்டு
- வினைமுற்றுத்தொடர்
6.ஆடி ஆடி -
அடுக்குத்தொடர்
7.ஓய்ந்துறங்கு
- வினையெச்சத்தொடர். 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. பாநயம் பாராட்டல்
மையக்கருத்து
தமிழ்மொழியின்
பெருமைகள், சிறப்புகளைக் கூறி புகழ்கிறார் புலவர்.
தொடைநயம்
தொடையற்ற பாடல் நடையற்றுப்
போகும்
மோனை, எதுகை, இயைபு இவற்றால் தொடுக்கப்படுவது தொடை.
மோனைத்தொடை
குயவனின் கைவண்ணம் பானையிலே
புலவனின் கைவண்ணம் மோனையிலே
செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
தேனினும் - தென்னாடு
ஊனினும் - உணர்வின்
வானினும் – வண்டமிழ்
தானனி - தழைத்தினி
எதுகைத்தொடை
மதுரைக்கு
அழகு வைகை
பாடலுக்கு
அழகு எதுகை
செய்யுளில்
இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
தேனினும்
ஊனினும்
வானினும்
தானனி
இயைபுத்தொடை
செய்யுளில் இறுதி எழுத்து, அசை, சீர் ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
மொழியே
- மொழியே
அணி நயம்
மனிதனுக்கு
அழகு பணி
பாடலுக்கு
அழகு அணி
இப்பாடலில்
வானினும் ஓங்கிய என்று உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது.
சந்த நயம்
யானைக்கு
அழகு தந்தம்
பாடலுக்கு
அழகு சந்தம்
இப்பாடலில்
இனிய அழகிய சந்த நயம் பயின்று வந்துள்ளது.
தலைப்பு
தமிழின் சிறப்பு
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. குலேச பாண்டியன்
என்னும் மன்னன் கபிலரின் நண்பரான இடைக்காடனார் இயற்றிய கவிதையினைப் பொருட்படுத்தாமல்
புலவரை அவமதித்தான். மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் பின்வருமாறு முறையிட்டார்.
பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும்
பார்வதிதேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்.
இதைக்கேட்ட இறைவன் புலவருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மன மகிழ்ச்சி
உண்டாக்க நினைத்தார். உமாதேவியாரோடு திருக்கோவிலை விட்டு வெளியேறி நேர் வடக்கே வையை
ஆற்றின் தென் பக்கத்தே சென்று இருந்தார்.
தானமும் தவமும் சுருங்கியதோ? மறையவர் நல்லொழுக்கத்தில் குறைந்தனரோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியிலிருந்து
தவறினவோ? என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டு விலங்குகளால், தமிழ்நாட்டில் தங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா? எமது தந்தையே யான் அறியேன் என்று இறைவனிடம்
வேண்டினான் மன்னன்.
கடம்ப வனத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டோம், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம்
தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை, அவர் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம் என இறைவன் கூறினார்.
சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமை அல்லவா? என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்
பாண்டிய மன்னன்.
பூரண கும்ப மரியாதையோடு புலவர்கள் புடைசூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை
செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான். செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள
வேண்டும் என்று பணிந்து வணங்கினான்.
நுண்ணிய கேள்வி அறிவுடைய புலவர்களும் "மன்னா நீ கூறிய அமுதம் போன்ற
குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது" என்றனர். 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
39. தோழனுக்குக்
கடிதம்
அ)நாள், இடம் ½
விளித்தல் ½
கடிதச்செய்தி 2½
இப்படிக்கு ½
உறைமேல்முகவரி 1
என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்
(அல்லது)
ஆ.முறையீட்டு விண்ணப்பம்
அனுப்புநர் ½
பெறுநர் ½
விளித்தல், பொருள் ½
கடிதச்செய்தி 2
இப்படிக்கு ½
நாள், இடம் ½
உறைமேல்முகவரி ½
என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. படிவத்தில் அனைத்து
விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. கலைஞர் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்குத்
தன்னுடைய பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடை நாடகங்கள், உரையாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள்
என அவரின் பங்களிப்புகள் பரந்த அளவில் உள்ளன. அவர் திருக்குறளுக்குக் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் என எழுதியுள்ளார். இலக்கியம்
மட்டுமின்றி கலை மற்றும் கட்டிடக்கலை மூலமாகவும் கருணாநிதி தமிழ் மொழிக்குப் பங்காற்றியுள்ளார்.
திருக்குறளைப் பற்றிக் கலைஞர் குறளோவியம் எழுதியது போல, வள்ளுவர் கோட்டம் கட்டியதன் மூலம் சென்னையில், திருவள்ளுவருக்குக் கட்டிடக்கலை அடையாளத்தையும்
அளித்தார். கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருணாநிதி நிர்மாணித்து அறிஞருக்கு மரியாதை
செய்தார்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. இன்சொல் வழி
பிறர் மனம் மகிழும்
அறம் வளரும்
புகழ் பெருகும்
நல்ல நண்பர்கள் சேருவர்
அன்பு நிறையும்
தீய சொல் வழி
பிறர் மனம் வாடும்
அறம் தேயும்
இகழ் பெருகும்
நல்ல நண்பர்கள் விலகுவர்
பகைமை நிறையும்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. அ. பாராட்டுரை 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. விருந்தோம்பல்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44. அ. புதிய நம்பிக்கை 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. புயலிலே ஒரு தோணி
(கதைப்பகுதியை
ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. சான்றோர் வளர்த்த தமிழ் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்