12-12-2024. வியாழன்.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : நட்பியல் ;
அதிகாரம் : சூது ;
குறள் எண் : 933.
குறள் :
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.
பொருள்
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
பழமொழி :
கரையை அடைவதற்கு முன் துடுப்பை எறியக்கூடாது.
Never cast a clout till may be out.
இரண்டொழுக்க பண்புகள்:
1) நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.
2) என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.
பொன்மொழி :
* என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் . - ஜவஹர்லால் நேரு.
பொது அறிவு :
1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி
சோனார்.
2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
நீர் ஆற்றல்
English words & meanings:
Worry
கவலை
Jealous
பொறாமை
வேளாண்மையும் வாழ்வும் :
கரிம முறைமைகளுக்கு அதிக அளவில் ஆட்கள், ஏறக்குறைய 29 பேர் தேவைப்படுவார்கள். இதனால் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; ஆனால், நகர்ப்புற நுகர்வோருக்கு விலைகள் அதிகரிக்கும்.
நீதிக்கதை சிறுவனின் செயல்
அரசர் ஒருவருக்கு திடீரென்று தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை. யானையின் எடையை அளந்து பார்க்கக்கூடிய பெரிய தராசுகளும் இல்லை. எனவே அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யானையின் எடையை எவ்வாறு அறிவது என்று குழம்பினார். அப்போது ஒரு அமைச்சரின் மகனான ஒரு சிறுவன், " நான் இதன் எடையை சரியாக கணித்துச் சொல்கிறேன்"என்று கூறினான். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். ஆனால் அரசர், அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம் என்று விரும்பி சம்மதித்தார்.
அந்தச் சிறுவன் அந்த யானையை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான். பிறகு அங்கே இருந்த பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன் உயர்ந்த தண்ணீர் மட்டத்தை குறித்துக் கொண்டான். பிறகு யானையை படகிலிருந்து இறக்கிவிட்டு, பெரிய பெரிய கற்களை கொண்டு படகை நிரப்பச் செய்தான். முன்பு குறித்த குறியீடு அளவிற்கு தண்ணீரில் படகு மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்பட்டது பின்பு அரசர் இடம் அந்த கற்களை காட்டி, "இந்த கற்களின் எடைதான் யானையின் எடை" என்று கூறினான் சிறுவன்.
அனைவரும் வியந்தனர்.அவனது புத்திசாலித்தனத்தை போற்றி புகழ்ந்தனர். எல்லோரும் யானையின் எடையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தனர். அதனால் அதனுடைய எடையை கணிக்க முடியாது என்று நினைத்தனர். ஆனால் அந்த சிறுவன் யானையின் எடையைப் பல எடைகளின் கூட்டுத்தொகையாகப் பார்த்ததால் அவனால் செய்ய முடிந்தது.
இன்றைய செய்திகள்
12.12.2024
திண்டிவனத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிய டாபர் நிறுவனம். இதன் மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி காலை வரை கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிப்பு.
நாளை (டிச.12) வைக்கம் போராட்டம் துவங்கிய தந்தை பெரியார் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் பங்கேற்கிறார்.
புதியதாக தினமும் 2 லட்சம் வாகனங்களுக்கு இடமளிக்கக்கூடிய அளவுக்கு பெங்களூருவில் மாபெரும் பறக்கும் பாலம் ஒன்று கட்டப்படவிருக்கிறது. இது பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஸ் உடனான ஆட்டத்தை 13வது சுற்றில் டிங் டிரா செய்தார்.
Today's Headlines 12.12.2024
Dabur has started construction of a new factory in Tindivanam. This will provide employment to 750 people.
Announcement of a diversion route for heavy vehicles until the morning of the 15th in Tiruvannamalai on the occasion of the Karthigai Deepa festival.
Tomorrow (Dec. 12), Vaikom will hold a protest to mark Father Periyar's centenary. The Chief Minister will participate!
A new giant flying bridge will be built in Bengaluru to accommodate 2 lakh vehicles daily. This is expected to help reduce traffic congestion in Bengaluru.
7 planes are circling in the sky at Chennai airport, unable to land. Heavy rains accompanied by gale-force winds have affected flight services at Chennai airport.
World chess championship: Ding holds Gukesh to draw in Game 13, retains advantage.