கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, December 10, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுப் பொதுத்தேர்வு 2024 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 10th tamil half yearly exam Answer Key 2024 virudhunagar district

பத்தாம் வகுப்பு      தமிழ்

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2024

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. இ.எம் + தமிழ் + நா                                                          1

2. ஆ. மோனை, எதுகை                                                     1

3. ஆ.இன்மையிலும் விருந்து                                             1

4. ஆ. பெப்பர்                                                                    1

5. ஈ.மன்னன், இறைவன்                                                   1

6. இ.வலிமையை நிலைநாட்டல்                              1

7. அ. உவமை அணி                                                          1        தமிழ்த்துகள்

8. இ. சுருளி மலை                                                            1

9. அ.அகவற்பா                                                                  1

10. ஆ.பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்                         1

11. ஈ.சிலப்பதிகாரம்                                                             1

12. ஆ)தமிழழகனார்                                                           1

13. ஈ)முத்தமிழ் - மெத்த                                                     1

14. அ)முத்தமிழ் - முச்சங்கம்                                               1

15. இ)முத்தமிழ்                                                                 1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      1.நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்

·        2.முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்

·        3.‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்

·        4.விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல்                                           2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      அ.செயற்கை நுண்ணறிவு என்பது என்ன?                                                1

ஆ.மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?                               1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

18.   'தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்'                                                                                                    2

தமிழ்த்துகள்

19.      வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை,

"பொய்யாச் செந்நா","பொய்படுபறியா வயங்கு

செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்.                                                       2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

20.     1.”இளம் பயிர் வளர்ந்து நெல் மணியாய் முதிர்வதற்கு முன் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்தது போல்” என்பது உவமையின் பொருள்.

2.அதுபோல் கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே, தாயை இழந்து வாடுகிறான் என்பதை உணர்த்த இவ்வுவமை எடுத்தாளப்பட்டுள்ளது                             2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு                                                       2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.                        1

ஆ.     பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.       1

தமிழ்த்துகள்

23. தீவக அணி மூன்று வகைப்படும். அவை

          1.முதல் நிலைத் தீவகம்,     

2.இடைநிலைத் தீவகம்,     

3.கடைநிலைத் தீவகம்                                                                          2

தமிழ்த்துகள்

24. வருக - வா (வரு) +க

வா -  பகுதி

வரு எனக் குறுகியது  விகாரம்

க -  வியங்கோள் வினைமுற்று விகுதி.                                                              2

தமிழ்த்துகள்

25. அ. சிறு பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும்.                                                1

ஆ. வளி வீசியதால் வாளி கீழே விழுந்தது.                                                          1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

26. 1.  தண்ணீரைக் குடி - 

அன்பு தண்ணீரைக் குடித்தான்.

2.       தயிரை உடைய குடம் –

இனியா தயிரை உடைய குடத்தைத் தலையில் சுமந்து வந்தாள்.                              2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

27. அ. புற ஊதாக் கதிர்கள்                                                                    1

ஆ. மறுமலர்ச்சி                                                                                     1

தமிழ்த்துகள்

28.

பேராசிரியர் அன்பழகனார் கலைஞரை, பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் கூறினார்.         1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. இடம் –

மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.

பொருள் -

          தலையைக் கொடுத்தேனும் (உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)

விளக்கம் –        

1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.

2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.

3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட தொடர்.                                                                                 3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ”

என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.                   3

தமிழ்த்துகள்

31. அ. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள்                                     1

ஆ. மொழிபெயர்ப்பு                                                                                         1

இ. மொழிபெயர்ப்பால்                                                                                      1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. 1.எங்கள் ஊர் அரண்மனை மிகவும் அழுக்காகவும் சுவர்களில் ஒட்டடை நிறைந்ததாகவும் காணப்பட்டது.

2.எனவே நானும் என் நண்பர்களும் அதைச் சுத்தமாக வைக்க எண்ணினோம்.

3.வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச் சுத்தம் செய்தோம்.

4.சுவர்களில் இருந்த அழுக்கைப் போக்க குவளையில் சாயம் கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம்.

5.கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள் அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும் கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம்.

6.கட்டைத்தூரிகையை வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம்.                                                                                                       3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

33. 1.  பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

2.       கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய கவிதையை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவரை அவமதித்தான்.

3.       மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்.

4.       மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வட திரு ஆலவாயில் சென்று தங்கினார்.

5.       இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக் காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.

6.       இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.                                                  3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. முல்லைப்பாட்டு

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்.               

- நப்பூதனார்.                                                                              3

தமிழ்த்துகள்

அல்லது

ஆ. தேம்பாவணி

நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.             - வீரமாமுனிவர்.                                   3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. நிரல்நிறை அணி.                                                                                     1

அணி இலக்கணம் :

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.                                                2

தமிழ்த்துகள்

36. 1.  நிறைத்திருந்தது                     நிறைந்திருந்தது

வாழைத்தோப்பில்                        வாழைத்தோட்டத்தில்

குட்டியுடன் நின்றிருந்த மாடு         கன்று

இலச்சுமி கூப்பிடுகிறாள்               பசு கத்துகிறது

இதோ சென்றுவிட்டேன்              இதோ செல்கிறேன்

துள்ளிய குட்டியை                       துள்ளிய கன்றை

என்னடா விளையாட வேண்டுமா   என்ன

அவனை அவிழ்த்துவிட்டேன்       அதனை

நீயும் இவனும் விளையாடுங்கள்     இதுவும்

நீரைக் குடித்தாள்                        குடித்தது                                                      3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

37. சீர் அசை வாய்பாடு

அற/னீ/னும்           - நிரை நேர் நேர்      - புளிமாங்காய்

இன்/பமும்              - நேர் நிரை             - கூவிளம்

ஈ/னும்                    - நேர் நேர்               - தேமா

திற/னறிந்/து           - நிரை நிரை நேர்    - கருவிளங்காய்

தீ/தின்/றி               - நேர் நேர் நேர்        - தேமாங்காய்

வந்/த                    - நேர் நேர்               - தேமா

பொருள்                 - நிரை                   - மலர்

இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது.                         3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. ஆள்வினை உடைமையில் வள்ளுவர் கூறும் அறக்கருத்துகள்

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

தமிழ்த்துகள்

ஆ. அருளப்பரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ஆவார்.

வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டு, தாய் எலிசபெத் மறைந்தபோது அவர்தம் பாடுகளைத் தன் கவிதைகளால் ஒப்பனை செய்துள்ளார்.

பூக்கையைக் குவித்து, வாய்மையே மழைநீராகி, தூவும் துளியலது இளங்கூழ் வாடிக் காய்மணியாகு முன்னர்க் காய்ந்ததென, விரிந்தன கொம்பில் கொய்த வீயென உள்ளம் வாடியது.

எரிந்தன நுதி நச்சு அம்புண்டு இரும்புழைப் புண்போல், பிரிந்தன புள்ளின் கானில் என்று உவமையும் உருவகமும் பின்னிப்பிணையத் தொடுத்து உருகியிருக்கிறார் வீரமாமுனிவர்.

தவமணி மார்பன்சொன்ன இப்புலம்பல் கேட்டு தேன்மலர்கள் பூத்த மரங்கள்தோறும் உள்ள மலர்களும், சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன என்பது கவிதாஞ்சலியின் உச்சம் என்றே கூறவேண்டும்.         5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

39.அ அல்லது

முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர்                                                     ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல்முகவரி                                         ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                       5       

தமிழ்த்துகள்

42. அ. நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகள்.

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.                

சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மருதம் என்பதே நல்ல பண்பட்ட, தகுதி வாய்ந்த நாகரிகமாக இருந்தது. ஏனெனில் அது வளமிக்க நிலங்களைக் கொண்டிருந்தது. உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை, மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இத்தகைய இயற்கைக் கூறுகளின் மத்தியில் சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாததாகக் கருதப்பட்டது

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. விருந்தோம்பல்                                                                                     8

அல்லது                           தமிழ்த்துகள்

. கலைஞர்                              பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. புதிய நம்பிக்கை                                                                          8

அல்லது                           தமிழ்த்துகள்

. மங்கையராய்ப் பிறப்பதற்கே 

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்                                                          8

அல்லது                           தமிழ்த்துகள்

. விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive