கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, January 06, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்06-01-2025. திங்கள்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

06-01-2025. திங்கள்.

திருக்குறள் :

குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : நட்பியல் ;

அதிகாரம் : மருந்து; 
குறள் எண்: 944.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

பொருள்:

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறு பாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ண வேண்டும்.

பழமொழி :

> அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.

Face the danger boldly than live in fear.

இரண்டொழுக்க பண்புகள் :

1) எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.

2) பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

+ ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள்.

நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் .-சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. குழந்தைகள் உதவி எண் என்ன?

: 1098.

2. இறந்த பிறகும் உடலில் எந்தப் பகுதி வளரும்?

விடை: விரல் நகம்

English words & meanings :

Climbing.

ஏறுதல்

Cricket.

மட்டைப்பந்து

வேளாண்மையும் வாழ்வும் :

நல்ல நீரில் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிது அதிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனி ஆறுகளில் உறைந்திருக்கும்

ஜனவரி 06

கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்

 Kapil Dev Ram Lal Nikhanj

பிறப்பு : ஜனவரி 6, 1959.

இவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

ஜனவரி 06

கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் நினைவு நாள்

- Gregor Johann Mendel,

பிறப்பு: சூலை 20, 1822 - இறப்பு சனவரி 6, 1884.

மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

நீதிக்கதை பூனையின் புதையல் வேட்டை

முன்னொரு காலத்தில் ஒரு பங்களாவில் பூனை ஒன்று வசித்து வந்தது. அது ஆயிரக்கணக்கான எலிகளை அடிமைத்தனம் செய்து வந்தது. எலிகளை பயன்படுத்தி அந்த கிராமத்திலுள்ள மக்களிடமிருந்து பணம், தங்க காசுகள் ஆகியவற்றை திருட செய்தது. எலிகள் அனைத்தும் பூனையின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். அதனால் இந்த பூனைக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும், என்று எலிகள் அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டனர். அப்போது புஜி என்கிற எலி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லி ஒரு வரைபடத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வந்தது.

புஜி தன் திட்டத்தை மற்ற எலிகளிடம் சொன்னது. மற்ற எலிகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தன. அவர்கள் பூனையிடம் சென்று, "பூனை ராஜா எங்களிடம் ஒரு வரைபடம் உள்ளது. அந்த வரைபடத்தை பின்பற்றினால் நாம் பெரிய புதையலை கண்டுபிடிக்க முடியும்" என்று சொன்னார்கள். அந்தப் பூனை எலிகளிடம் இருந்து அந்த வரைபடத்தை வாங்கிக்கொண்டு, "நானே சென்று இந்த புதையலைக் கண்டு பிடிக்கிறேன். உங்களுடைய உதவி எனக்கு தேவை இல்லை" என்று சொன்னது.

அந்தப் பூனை வரைபடத்தை பின்பற்றி புதையலைத் தேடி சென்றது. நடந்து நடந்து மிகவும் சோர்வுற்றது அந்தப் பூனை. ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தது, இந்த எலிகள் பூனைக்கு தெரியாமல் அதன் பின் சென்றன. சிறிது நேரம் கழித்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது அந்த பூனை. அந்த வரைபடத்தின் படி இடத்தை அடைந்த பூனை, அங்கே குழி தோண்ட ஆரம்பித்தது. எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இருந்தும் அந்தப் பூனை தோண்டிக் கொண்டே சென்றது. அப்போது மிகவும் ஆழமாகத் தோண்டியதால் அந்தப் பூனையால் வெளியே வர முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டது.

உதவிக்காக அந்தப் பூனை சத்தமிட்டு கொண்டு இருந்தது. அப்போது எலிகள் அனைத்தும் அந்த குழியின் மேல் இருந்து எட்டி பார்த்தன. அந்தப் பூனை எலிகளிடம் உதவி கேட்டது. அதற்கு அந்த எலிகள், இது உனக்கு தேவதை கொடுத்த புதையல் இதை விட்டு வெளிய வரவே முடியாது" என்று சொன்னார்கள்.
பின்னர் கிராமத்திற்கு திரும்பி சென்று தாங்கள் திருடிய அனைத்து காசுகள் மற்றும் நகைகளை திருப்பி அந்த கிராம மக்களிடம் கொண்டு ஒப்படைத்தனர். கிராம மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் எலிகளை பாராட்டினார்கள்.

இன்றைய செய்திகள்

06.01.2025

* மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது: மாவட்ட நிர்வாகம் தகவல்.

* விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு.

* மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளி: மாநில கல்வி அமைச்சர் பாராட்டு.

*அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் பிரான்சின் முல்லர்.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா.

Today's Headlines 06.01.2025

Online booking for bulls and athletes participating in the famous Avaniyapuram, Palamedu and Alanganallur jallikattu in Madurai district begins today: District administration information.

Karamani lentil seeds that started sprouting in space: ISRO announces that the experiment is a success.

Tribal village school in Maharashtra that operates 12 hours a day, 365 days a year: State Education Minister praises.

6 people of Indian origin took oath as MPs in the US House of Representatives.

Hong Kong Open tennis tournament; Francine Muller won the champion title.

Brisbane International tennis tournament; Belarusian player Aryna Sabalenka won the champion title.

தமிழ்த்துகள்

Blog Archive