7th Tamil Model Notes of Lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
நாள் - 02-01-2025 - 03-01-2025
2.பருவம்
3
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
நயத்தகு நாகரிகம்
- கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
விருந்தோம்பல்,
வயலும் வாழ்வும்
6.பக்கஎண்
2 - 6
7.கற்றல் விளைவுகள்
T-705 தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாடல்கள் பற்றிக் கலந்துரையாடி அவற்றின் நயம்
பாராட்டுதல்.
T-710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு
ஆராய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக்
கண்டறிதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளுதல்.
எளிய
நாட்டுப்புறப் பாடல்களின் ஓசை நயத்தினையும் அதில் பொதிந்துள்ள சமூகச்
செய்திகளையும் புரிந்து கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
பாணர்களுக்கு உணவு
அளித்த செய்தியை அறிதல்.
நாட்டுபுறப்
பாடல்களில் பொதிந்துள்ள சமூக செய்திகளைப் பெறுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_24.html
https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_84.html
https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1.html
https://tamilthugal.blogspot.com/2022/12/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_21.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-7th-tamil-virunthombal-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-vayalum-vazhvum-short-answers.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-1-vayalum-vazhvum-7th-tamil-song.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த
வள்ளல்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த
உழவுத்தொழில் குறித்த சொற்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
உழவுத்தொழில்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
விருந்தோம்பல்
பாடலை விளக்குதல். வள்ளல்களின் செயலை உணர்தல். தமிழர்களின் கொடையை உணர்த்துதல்.
உழவுத்தொழில் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்தல், வயலும்
வாழ்வும் பாடலைக் கூறுதல். உழவின் சிறப்புகளை மாணவர்களுடன் கலந்துரையாடல். உழவுச்
சொற்களை அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். உழவுச் சொற்களை உணர்தல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பாடல்களை அறியச் செய்தல். தனிப்பாடல்களை அறிதல். உழவுத்தொழில்
குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – மணி என்னும் சொல்லின்
பொருள் ..............................
மாரி என்பதன் பொருள்
....................................
ந.சி.வி – உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
உ.சி.வி – உழவுத்தொழிலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை எழுதுக.
தமிழர்களின் பிற பண்பாட்டுக்
கூறுகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதுக.
விருந்தோம்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.