கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, December 17, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாரதம் அன்றைய நாற்றங்கால்

  6th Tamil Model Notes of Lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

நாள் - 02-01-2025 - 03-01-2025

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

புதுமைகள் செய்யும் தேசமிது – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பாரதம் அன்றைய நாற்றங்கால்

6.பக்கஎண்

2 - 4

7.கற்றல் விளைவுகள்

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

8.கற்றல் நோக்கங்கள்

இந்திய நாட்டின் சிறப்புகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

பாடல்கள், கதைகள் மற்றும் கட்டுரைகளின் நயம்பாராட்டுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_17.html

https://tamilthugal.blogspot.com/2020/11/6-6th-tamil-memory-poem.html

https://tamilthugal.blogspot.com/2021/01/6th-tamil-baratham-antraiya-natrankal.html

https://tamilthugal.blogspot.com/2019/01/thaaraabarathi.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video-6-3.html

11.ஆயத்தப்படுத்துதல்

தேசிய ஒருமைப்பாடு குறித்துக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

இந்தியாவின் பெருமையைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வேற்றுமையில் ஒற்றுமை குறித்துக் கூறுதல். ஒற்றுமை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          தேசப்பற்று குறித்து விளக்குதல்.

          தாராபாரதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். இந்தியர் குறித்தும் இந்தியா குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.

 


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

இந்தியாவின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். ஒற்றுமையே உயர்வு என்பது குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கலைக்கூடமாகக் காட்சி தருவது ...........................

          ந.சி.வி – தாராபாரதி குறித்து எழுதுக.

          உ.சி.வி – நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றி எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

இந்திய நாடு குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

தாராபாரதி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive