கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 27, 2023

மாதிரி பாடக்குறிப்பு பத்தாம் வகுப்பு தமிழ் சனவரி 2

 10th tamil model notes of lesson 

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-01-2025 முதல் 03-01-2025

2.திருப்புதல்

1.‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. ‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!’ - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.                   

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

   வடுக்காண் வற்றாகும் கீழ்’

- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

5.‘நமக்கு உயிர் காற்று                                  தமிழ்த்துகள்

காற்றுக்கு வரம் மரம் –மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

6. வசன கவிதை – குறிப்பு வரைக.

7. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக, தொடரில் அமைக்க.

8. மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.                    தமிழ்த்துகள்

9. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக  ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது.

‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

10.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

11. ‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

12. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

  கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

13. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.                      தமிழ்த்துகள்

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது உயிரின் ஓம்பப் படும்

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்    நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

 

14.எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ. கூவிளம் தேமா மலர்                                ஆ. கூவிளம் புளிமா நாள்

இ. தேமா புளிமா காசு                                     ஈ. புளிமா தேமா பிறப்பு

15.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?                

16.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

17. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

18.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

19. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ... இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

20.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.                                    தமிழ்த்துகள்

21. “நேற்று நான் பார்த்த அருச்சுனன்  தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

22.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?                        தமிழ்த்துகள்

23. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

o        உழவர்கள் மலையில் உழுதனர்.

o        முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

24. 'கரப்பிடும்பை இல்லார்' இத்தொடரின் பொருள் கூறுக.

25. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive