8th Tamil Model Notes of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
06-01-2025 முதல் 10-01-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே
இன்பம் – உரைநடை உலகம்.
5.உட்பாடத்தலைப்பு
அயோத்திதாசர்
சிந்தனைகள்.
6.பக்கஎண்
172 - 176
7.கற்றல் விளைவுகள்
T-805 எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத
சூழல்கள் / நிகழ்வுகள்பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும்
சிந்தனைகளையும் உருவாக்கி வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி / சைகை மொழியில்).
8.திறன்கள்
அயோத்திதாசரின்
சிந்தனைகள் வழியாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உணர்தல்.
9.நுண்திறன்கள்
அயோத்திதாசர்
குறித்து அறியும் திறன்.
அயோத்திதாசரின்
சுவையான வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி
எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/02/8-ayothithasar-sinthanaikal-8th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_6.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
புலவர்கள் குறித்து கூறச்செய்தல்.
அயோத்திதாசர்
குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
சிந்தனையாளர்களின்
பெயர்களைக் கூறச் செய்தல்.
அயோத்திதாசரை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அயோத்திதாசரை
உணரச் செய்தல். வாழ்க்கை, இதழ்ப்பணி, கல்விச் சிந்தனைகள் குறித்து விளக்குதல்.
தலைமைத்தகுதி குறித்து மாணவர்கள் பேசுதல். திராவிட மகாஜன சங்கம் குறித்தும்,
சமத்துவம், தனித்தன்மை குறித்தும் கலந்துரையாடுதல். அயோத்திதாசர் எழுதிய நூல்கள்
பற்றிக் கூறுதல். மக்களும் மழையும் குறித்து அயோத்திதாசர் கூறியதை மாணவர்கள்
புரிந்துகொள்ளுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அயோத்திதாசர் குறித்துக் கூறுதல். பிற சிந்தனையாளர்கள் குறித்து
விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – அயோத்திதாசர் நடத்திய இதழ் .....................................
ந.சி.வி –அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?
உ.சி.வி – சமூகம் உயர்வடைய மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
அயோத்திதாசர் குறித்து இணையம் மூலம் அறிதல்.