7th Tamil Model Notes of Lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
06-01-2025 முதல் 10-01-2025
2.பருவம்
3
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
நயத்தகு நாகரிகம் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
திக்கெல்லாம்
புகழுறும் திருநெல்வேலி
6.பக்கஎண்
7 - 11
7.கற்றல் விளைவுகள்
T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள்
எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின்
மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
கருத்துகளைத்
தொகுத்துக் கடிதம் எழுதும் திறன் பெறுதல்.
திருநெல்வேலி
மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிந்து கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
திருநெல்வேலி
நகரச் சிறப்புகள் குறித்து அறிதல்.
நண்பனுக்குக்
கடிதம் எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/01/7th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த
நகரங்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த
திருநெல்வேலி நகரம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
திருநெல்வேலி
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
திருநெல்வேலி
நகரச் சிறப்பை விளக்குதல். ஆறுகள் குறித்து அறிதல். தொழில்கள், பழமை குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கடிதத்தின் வடிவமைப்பு அறிதல். கவிஞர்களின்
தகவல்கள் அறிதல்.
திருநெல்வேலி மாவட்டச் சுற்றுலா
இடங்கள் குறித்துப் பேசுதல். கடிதம் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக்
கூறுதல். தங்கள் மாவட்டப் பெருமைகளை மாணவர்கள் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
திருநெல்வேலி பெயர்க்காரணம், ஆதிச்சநல்லூர் கல்வெட்டு,
அகழாய்வு குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – திருநெல்வேலி ..............................
ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
ந.சி.வி – தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
கொற்கை முத்து பற்றி எழுதுக.
உ.சி.வி – மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க
வேண்டும் என எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் பெயர்களை எழுதுக.
திருநெல்வேலி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.