கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, December 05, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025. வெள்ளி 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: குடியியல் ;

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 999.

குறள் :

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்

உரை :

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

பழமொழி :

நம்பிக்கை தான் ஒவ்வொரு உறவின் வேர்.

Trust is the root of every strong bond.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

கடவுளைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி எல்லாவற்றிடமும் அன்பு செலுத்துதலே ஆகும். -வின்சென்ட் வான்காக்.

பொது அறிவு :

01."எண்கணித ஏந்தல்" என்று அழைக்கப்படும் இந்திய கணித மேதை யார்?

ஸ்ரீனிவாச ராமானுஜம் 

Srinivasa Ramanujam

02.தமிழ்நாட்டின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் எது?

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

Mother Teresa Women's University

English words :

Startled - felt sudden shock

Vibrant - lively

தமிழ் இலக்கணம்: 

சொல்லின் முதலில் வரா எழுத்துகள்

1. மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வரா

2. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது.

3. ஞ, ய, வ வரிசையில் குறிப்பிட்ட மெய்யெழுத்துகள் தவிர வேறு எதுவும் முதலில் வராது.

அறிவியல் களஞ்சியம் :

உங்கள் டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளி சந்திரனை அடைய 238,000 மைல்கள் அல்லது 384,400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதற்கும் சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில், வளிமண்டலம் என நமக்குத் தெரிந்த ஒன்று உள்ளது, இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கிய காற்றின் ஒரு அடுக்கு ஆகும்.

டிசம்பர் 05 கல்கி அவர்களின் நினைவுநாள்

கல்கி, பிறப்பு 9 செப்டம்பர் 1899 - இறப்பு 5 திசம்பர் 1954.

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.

இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

டிசம்பர் 05 நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்

- Nelson Rolihlahla Mandela,

பிறப்பு 18 சூலை 1918 இறப்பு 5 திசம்பர் 2013

தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.

அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்

நீதிக்கதை எறும்பின் தன்னம்பிக்கை

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

இன்றைய செய்திகள்

05.12.2025

* கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது என்றும், புதிதாக எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

*தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

* இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.

மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விளையாட்டுச் செய்திகள்

ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

Today's Headlines 05.12.2025

* A survey conducted by the Union Health Ministry has revealed that the number of deaths from AIDS has decreased by 81% and the number of new HIV infections has decreased by 49% in the last 15 years.

* At present, 5.7 million electric vehicles are registered in India. And the sales of electric cars increased in 2024-25.

* IndiGo airline cancels flights to 3 major cities on one single day, and 86 flights are cancelled at Mumbai airport.

SPORTS NEWS

This is the 44th time that two Indian players have scored centuries in the same innings in ODIs. This is the 8th time India has lost despite Virat Kohli scoring a century.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive