கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, April 13, 2026

தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் பற்றிய விளக்கம்

தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் பற்றிய விளக்கம்

🔵முகவர்கள்

வாக்கு பதிவிற்கு முந்தைய நாள் Form 10-ஐ ஒரு வேட்பாளருக்கு 2 ஏஜெண்டுகள் தனித்தனியே பெற்று PO-விடம் கொடுக்க வேண்டும்.

PO முகவர்களுக்கு தனித்தனியே அடையாள அட்டை வழங்குவார்.

Ballot Unit-ல் உள்ள வேட்பாளர் வரிசையின் படி முகவர்கள் அமர வேண்டும்.

முகவர்கள் கட்டாயம் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். (முகவர் அந்த வாக்குசாவடிகுரிய வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்)

கரை வேட்டி கட்டலாம், ஆனால் சின்னம் இருக்கக்கூடாது.

1 வேட்பாளருக்கு 1 முகவர் மட்டுமே வாக்கு சாவடிக்குள் இருக்க வேண்டும்.

காலை 5.15-க்கு வாக்கு சாவடிக்கு வர வேண்டும்.

முகவரிடம் உள்ள வாக்காளர் பட்டியலை வாக்குசாவடிக்கு வெளியே எடுத்த செல்ல கூடாது.

தேர்தல் முடியும் கடைசி 2 மணி நேரத்திற்கு முகவர் வாக்குசாவடிக்கு வெளியே செல்ல அல்லது வாக்குசாவடிக்குள் வரவோ கூடாது.

வாக்குசாவடிக்குள் அரசியல் பேச கூடாது.

தமிழ்த்துகள்

Blog Archive