கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 01, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிற்பக்கலை நவம்பர் 10

9th tamil model notes of lesson

lesson plan November 10

 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-11-2025 முதல் 14-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

கலை பல வளர்த்தல் – உரைநடை உலகம்.

5.உட்பாடத்தலைப்பு

சிற்பக்கலை.

6.பக்கஎண்

106 - 110

7.கற்றல் விளைவுகள்

T-9021 தமிழர் சிற்பக்கலையின் வரலாற்றுச் சிறப்பைக் கட்டுரை வாயிலாகப் படித்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர் சிற்பக்கலையின் வரலாற்றுச் சிறப்பைப் போற்றுதல்.

9.நுண்திறன்கள்

அழகிய சூழலைக்கண்டு மனதில் தோன்றும் கருத்துகளை எழுதுதல்.

ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/01/9-6-9th-tamil-online-test-sirpakalai.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-unit-6-sirpa.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_47.html

11.ஆயத்தப்படுத்துதல்

          கலைகளின் அவசியம் பற்றிக் கூறச் செய்தல்.

          மாமல்லபுரம் குறித்துக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

சிற்பக்கலையை அறிமுகப்படுத்துதல்.

தமிழர் அழகியலை அறிதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சிற்பம் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          சிற்பங்களின் வகைகள் குறித்து விளக்குதல்.

பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர மன்னர், நாயக்கர், பௌத்த, சமணச் சிற்பங்கள்  குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக இன்றைய சிற்பக்கலையைப் பற்றி உரைத்தல்.

தமிழகச் சிற்பக் கலையின் தனிச்சிறப்புகள் குறித்து விளக்குதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கலையின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிற்பக்கலையை மாணவர்களை அறியச் செய்தல்.

          தமிழர்களின்  கலை நுட்பங்களை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று .............................

          ந.சி.வி – நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

உ.சி.வி –      தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கதாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த கலைகளை எழுதுக.

சிற்பக்கலை குறித்த தகவல்களைத் திரட்டுக.

களிமண்ணில் உருவங்களை உருவாக்கிப் பழகுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive