10th tamil model notes of lesson
lesson plan October 22
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-10-2025 முதல் 25-10-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
நிலாமுற்றம் – கற்கண்டு, வாழ்வியல் இலக்கியம்.
5.உட்பாடத்தலைப்பு
அகப்பொருள் இலக்கணம், திருக்குறள்.
6.பக்கஎண்
106 - 119
7.கற்றல் விளைவுகள்
T-1022 அறஇலக்கியத்தைப் படித்துணர்ந்து வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதலின் வாயிலாக இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்துகொள்ளுதல்.
திருக்குறளின் வாழ்வியல் கருத்துகளை உணர்தல்.
9.நுண்திறன்கள்
எளிமையான அற இலக்கியத்தைப் படித்தல்.
திணைக்குரிய கருப்பொருள்கள் மற்றும் உரிப்பொருள்கள் அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_85.html
https://tamilthugal.blogspot.com/2021/07/5-10th-tamil-online-test-akaporul.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_546.html
https://tamilthugal.blogspot.com/2025/05/10-5-50_30.html
https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_53.html
https://tamilthugal.blogspot.com/2023/08/pdf-6_37.html
https://tamilthugal.blogspot.com/2023/08/10th-tamil-ppt-power-point-presentation_26.html
https://tamilthugal.blogspot.com/2021/06/12-puraporul-ilakkanam-12-pura-thinaikal.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-memo.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-memory-poem-thiru.html
11.ஆயத்தப்படுத்துதல்
நிலவகைகளைக் கூறச் செய்தல்.
வேடக் கலைஞர்கள் பற்றிக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
அகப்பொருள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
அகப்பொருள் இலக்கணத்தை விளக்குதல். பொழுதுகள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். கருப்பொருள்கள் குறித்து அறியச் செய்தல்.
திருக்குறளின் அறக்கருத்துகளை விளக்குதல்.
அமைச்சு, பொருள்செயல்வகை, கூடாநட்பு, பகை மாட்சி, குடிசெயல்வகை, நல்குரவு,இரவு, கயமை அதிகாரங்களில் பாடப்பொருளில் உள்ள குறள்களை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அறக்கருத்துகளை அறிந்து வாழ்வில் நடைமுறைப்படுத்துதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட காலங்கள் ..............
ந.சி.வி – அமைச்சு அதிகாரத்தில் திருக்குறள் கூறும் கருத்துகளை விளக்குக.
உ.சி.வி – வஞ்சப்புகழ்ச்சி அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
குறளில் உள்ள அணிநயங்களை அறிதல்.

