கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, June 03, 2023

தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MOLIGAL & Best Lines in tamil part 2


26.கம்பீரமாக அவன்
உட்கார்ந்து கொண்டிருந்தான்.
எல்லோரிடமும்
கை நீட்டிச் சென்றது
யானை.

-எஸ்.நடராஜன்


27.வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது.

இரண்டாம் பகுதி 
முதற் பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது...!!

-ரமேஷ்


28.நம்பிக்கையைத் தன்னுள்
தேட முயலாமல்,
வெளியில் தேடுவதுதான்
பலர் செய்யும்
மிகப்பெரிய தவறு

-ஆர்தர் மில்லர்


29.தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவர்களை விட,
கற்றதைக் கொண்டு தவறு செய்தவர்களே அதிகம்.


30.வாழ்க்கையை
சிலர் மட்டுமே வாழ்கிறார்கள்.
பலர் அதை 
நகர்த்துகிறார்கள்.

-இறையன்பு


31.வண்ணத்துப் பூச்சிகளைத்
துரத்திப் பிடிப்பதில்
நேரத்தை வீணடிக்காதீர்கள்...
*தோட்டத்தை சீராக*
*பராமரியுங்கள்,*
வண்ணத்துப்பூச்சிகள் தானாக வந்து சேரும்.

- *மரியோ குவிண்டனா* 


32.அசிங்கப்பட்ட பின்பு காட்டப்படும் அன்பானது பகலில் ஏற்றப்படும் விளக்கிற்கு சமம்.

இருந்தும் பயனில்லை
எரிந்தும் பயனில்லை...!!

~ யாசகன் ~


33.தன்னுடைய தைரியம்,
சுயமரியாதை, தன்னம்பிக்கையை
இழக்காமல் இருப்பவனுக்குத்
*தோல்வி என்ற ஒன்று*
இருக்க முடியாது.

-ஓரிசன் ஸ்வெட்

34.கையசைத்துக் கூப்பிட
மரங்கள் இல்லாததால்
வராமல் போனது மழை!

35.தூண்டிலில் சிக்கிய மீனுக்கு உயிர் பிரிவதை விட கடலைப் பிரிவது தான் அதிகமாய் வலித்திருக்கும்.

-சுபா

36.ஒரு கனத்த மௌனத்தில்
கையசைத்து விடைதரும் போது
ஒரே ஆறுதல் 
கை விரல்களுக்கு
கண் இல்லாமல் போனது தான்

-பாலாஜி


37.முட்டையிடாமல்
கொக்கரிக்கும் கோழிகள் -
விமர்சகர்கள்.


38.கொடியில் காயும்
குழந்தையின் துணிகளை
வெயில் படாமல்
சிரத்தையுடனே
பார்த்துக்கொள்கிறது
அருகில் காயும்
அம்மாவின் புடவை.

- ராமதுரை ஜெயராமன் ~

39.யார் மீதும் ஏறாமலிருக்க
எலுமிச்சைப் பழத்தின்
மீது ஏறிச்சென்றது லாரி

40.மல்லீப்பூ மொளம் பத்து ருவா’

சிறுகையால் சரமளந்து
கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த
பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:
‘இந்த முழத்துக்கா பத்து ரூபாய்?’

சரத்தை வாங்கி
நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி
முறித்து வாங்கினார்,

நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்
இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்
மல்லிகைகள்
வாடியிருந்தன சோகம் தாளாமல்.

-சுகுமாரன்


41.எறும்புகளின் மீதான வன்முறைக்கு
பெரிதாக என்ன காரணம்
இருந்துவிடப்போகிறது...
அவை எளிது என்பதன்றி.

42."இல்லை" என்று சொன்ன அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களால், நானே அதைச் செய்தேன்.

43.எனது வெற்றிகள் மூலம் என்னை யாரும் மதிப்பிடாதீர்கள் , நான் எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள்
- நெல்சன் மண்டேலா

44.ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும். 
விளக்கம் பெற / தர 
ஒரு யுகம் தேவைப்படுகிறது.

-ஈரோடு கதிர்

45.வாங்குவது குழந்தை
என்றால்
முதல் விற்பனையின்
கைராசிகளை பார்ப்பதில்லை
கடைக்காரர்கள்!

46.காகம் கரைந்தது விருந்தாளிகள் வருகை என்று...
சேவல் பதறியது விருந்தாகப்போகிறோம் என்று...

47.உனக்கு தேவைப்படாத
எனது பிரியங்களை
இலைகளைப் போல
உதிர்த்துப் போட்டேன்
அள்ளவியலாத சருகுகளால்
அடைந்து கிடக்கிறது என் வனம்
-ரோஸ்லின்

48.தாமதமாக வருவோர்களை நனைப்பதெற்கென்றே மழையை சேமித்து வைக்கின்றன மரக்கிளைகள்!!"-பாமரன்

49.உறங்கும் குழந்தைக்கு
அப்பா தரும் முத்தம்
அழகானது
உறங்கியபடியே
குழந்தைக் கேட்கும்
அடுத்த முத்தம்
அற்புதமானது

-ராஜா சந்திரசேகர்

50.வெற்றியடையச் சிறந்த வழி... 'மற்றவர்கள் பார்வையில்' முட்டாளாகத் தெரிய வேண்டும், ஆனால் உண்மையில் புத்திசாலியாக இருக்கவேண்டும்

தமிழ்த்துகள்

Blog Archive