மேற்கோள்கள்
Successful student
1. கடிகாரத்தைப் பார்க்காதே. அது செய்வதை நீயும் செய் (Do not watch the clock. Do what it does. Keep going) : சோர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து விடாமல் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இரு.
2. அறிவே பலம் (Knowledge is Power): கல்வி, உனக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொணர உதவும் மாபெரும் சக்தி.
3. வெற்றியாளர்கள் வெளியேறுவதில்லை; வெளியேறுபவர்கள் வெற்றியடைவதில்லை (Winners never quit and quitters never win): வெற்றி அடைய விடா முயற்சி தேவை. விட்டு ஓடினால் வெற்றி கிட்டாது.
4. கல்விக்காக செய்யும் முதலீடு சிறந்த வட்டியைப் பெற்றுத் தரும் (An investment in knowledge pays the best interest): கல்வி எனும் முதலீடு வாழ்க்கையில் நிச்சயமாக சிறந்த பலனைப் பெற்றுத் தரும்.
5. சந்தர்ப்பங்கள் தானா வருவதில்லை, நாமே உருவாக்குவது (Opportunities don't happen, you create them): முன் கூட்டியே செயல்பட்டு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்.
6. சந்தேகம் கனவுகளைக் கொல்வது போல் தோல்வி கொல்வதில்லை (Doubts kill more dreams than failure ever will): இலக்கை அடைய தன்னம்பிக்கையே ஆதாரம். தோல்விகளை விட சந்தேகங்கள் கொடியவை.
7. சத்தமின்றி கடின உழைப்பைக் கொடு, வெற்றி ஆர்ப்பரிக்கட்டும் (Work hard in silence, let success make noise): நீ அமைதியாய் இரு. உன் சாதனைகள் பேசட்டும்.
8. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை (Rome was not built in a day): பெரிய சாதனைகளை அடைய அதிக நேரமும் பொறுமையும் தேவை.
9. அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்க உதவாது (A smooth sea never made a skilled sailor): கஷ்டமான சூழ்நிலைகள் நமக்கு விலை மதிப்புள்ள திறமைகளையும் சோதனைகளைக் கடந்து மீண்டு வரவும் கற்றுத் தருகின்றன.