1."அழகான நாட்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகர வேண்டும்!" - ரூமி
2.பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்....
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்.
3.பருக்கையோடு சேர்த்து
கனவையும் ஊட்டுகிறார்கள்.
எதை,மென்று விழுங்குவதென திணறுகிறார்கள் குழந்தைகள்...:-
4._*☘️முடியாதென்று வாதம் செய்பவனிடம் முகம் கொடுத்து பேசாதே.*_
_*☘️உன்னையும் சோம்பேறிக்குச் சொந்தக்காரனாக்கி விடுவார்கள்...!*_
_*☘️நடக்காதெனப் பேசுபவர்களிடம் நட்பு வைக்காதே வேதனைக் கடலுக்குள் வீழவைத்து விடுவர்...!*_
_*☘️ஆகாதெனச் சொல்பவர்களின் நிழலையும் கூட மிதிக்காதே தோல்விக்கு உன்னையும் தோழனாக்கி விடுவர்...!*_
_*☘️இயலாதெனப் பேசுபவர்களிடம் நீ எதையும் பேசாதே உன்னிடம் இருக்கும் நம்பிக்கையை நொறுக்கிப் போட்டுவிடுவர்..!*_
_*☘️வெற்றி என்பது வேறெதிலுமில்லை.. உன் உழைப்பிலும் ஓயாத முயற்சியிலும் தான் உள்ளது...!!!*
5.கேள்வி கேட்கப் பயப்படுகிறவர்கள்
எதையுமே
தெரிந்து கொள்ள முடியாது.
6.விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்.
7.அன்பு மகனே!
எனக்கு எழுதும் கடிதத்தை இனி
பசை தடவி ஒட்டாதே !
உன் வீட்டுச் சோற்றுப் பருக்கையால் ஒட்டி அனுப்பு !
தாயைப் பட்டினி போட்டான் என்ற பழி வராமல் இருக்கட்டும்!
- ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து அபாக்கியவதி தாய்
8.கொடுக்கும் பொருளை விட
கொடுப்பவரின் அன்பே பெரிது.
9.பழகுபவர்கள் தந்துவிட்டு போகும் பரிசு
சிலசமயம் வலியாகவும் இருக்கலாம்..!
ஆனால்
அதுவே உங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வழியாகவும் இருக்கலாம் வருந்தாதீர்கள்...!
10.ஆறுதல் கூட
சொல்லத் தெரியாது
ஆனாலும் நிறைய
கவலைகளை மறக்கச்
செய்கின்றன குழந்தைகள்...!
11.தண்ணீரைப் போல இருங்கள்...
தண்ணீர் அமைதியாகும் போது தூசிகள் தானாகவே அடியில் அடங்கி விடும்..
பிரச்சனைகள் வரும்போது அமைதியாய் இருங்கள்...
தானாகவே அடங்கிவிடும்...
12.வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில் தான் இருக்கிறது
-எஸ்.ரா
13.உண்மையில் கண்ணீரை விட உயர்வானது வியர்வை!
அதனால்தான் அழுவதைப்போல் நடிக்க முடிகிறது
வியர்ப்பதைப் போல்
நடிக்க முடியவில்லை
-நெல்லை ஜெயந்தா
14.எப்பறவையும்
தட்டுப்படாத பொழுதில்
வானம் எனக்கொரு
பாழ்கிணறு
-நர்சிம்
15.தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணிக் காகங்கள் எப்போதும் பறக்கின்றன.. பிடித்துக்கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றன... நம்பிக்கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன.
- *இறையன்பு* -
16.யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்
எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்
அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை
-ஜானகிராமன்
17.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைத் தாண்டி ஒரு மனிதன் ஓட வேண்டும். அப்போதுதான் அவன் தன் தொழிலில் நிலைக்க முடியும்
-வின்சென்ட்
18.பக்கத்தில், மரத்தை திடீரென வெட்டிவிட்டார்கள். வெளிச்சத்தை விடவும் வெறுமையே அதிகமாய் இருக்கிறது.
-நர்சிம்
19.கூப்பிட முடியாது என்று தெரிந்தும் கூப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே அவஸ்தை.
-வண்ணதாசன்.
20.தற்காலத்தினர்க்கு எல்லாவற்றின் விலையும் தெரிகிறது, ஆனால் எதன் மதிப்பும் தெரியவில்லை!
- ஆஸ்கார் வைல்ட்.
21.விருப்பப்பட்டா
அவன் பிச்சைப்பாத்திரம்
ஏந்தி நிற்கின்றான்.
வெறுப்புடனாவது
சில காசுகள் போடேன்.
உன் பணப்பையின்
பாரமாவது கொஞ்சம்
குறையுமே.
அ.சீனிவாசன்
22.தொழில் நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது.. ஆனால் மிச்சப்படுத்திய நேரங்களை அவையே ஆக்கிரமித்தும் உள்ளது
23.ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்
-ராஜா சந்திரசேகர்
24.ஏதொன்றிலும் தீவிரம் புரியாமல் சிரித்து வைக்க ஆண்களாலும், நகைச்சுவை புரியாமல் அழுது விட பெண்களாலும் முடிகிறது.
-செளம்யா
25.அழுவதற்கான காரணத்தை சொல்லத் தெரியாத வயதில்
சத்தமாகவும்..
தெரிந்த வயதில்
மனதிற்குள் மௌனமாகவும்
அழுது கொள்கிறோம்..!!
-யாசகன்