கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 06, 2023

12ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கற்றல் கையேடு pdf விழுப்புரம் மாவட்டம் 12th +2 tamil slow learners guide Villupuram hsc

பதிவிறக்கு/DOWNLOAD

11ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கற்றல் கையேடு pdf விழுப்புரம் மாவட்டம் 11th +1 tamil slow learners guide Villupuram

பதிவிறக்கு/DOWNLOAD

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு வினாத்தாள் pdf 12th +2 practical exam questions hsc

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MOLIGAL & Best Lines in tamil part 1

1."அழகான நாட்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகர வேண்டும்!" - ரூமி


2.பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்....
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்.


3.பருக்கையோடு சேர்த்து
கனவையும் ஊட்டுகிறார்கள்.
எதை,மென்று விழுங்குவதென திணறுகிறார்கள் குழந்தைகள்...:-


4._*☘️முடியாதென்று வாதம் செய்பவனிடம் முகம் கொடுத்து பேசாதே.*_
 
_*☘️உன்னையும் சோம்பேறிக்குச் சொந்தக்காரனாக்கி விடுவார்கள்...!*_

_*☘️நடக்காதெனப் பேசுபவர்களிடம் நட்பு வைக்காதே வேதனைக் கடலுக்குள் வீழவைத்து விடுவர்...!*_

_*☘️ஆகாதெனச் சொல்பவர்களின் நிழலையும் கூட மிதிக்காதே தோல்விக்கு உன்னையும் தோழனாக்கி விடுவர்...!*_

_*☘️இயலாதெனப் பேசுபவர்களிடம் நீ எதையும் பேசாதே உன்னிடம் இருக்கும் நம்பிக்கையை நொறுக்கிப் போட்டுவிடுவர்..!*_

_*☘️வெற்றி என்பது வேறெதிலுமில்லை.. உன் உழைப்பிலும் ஓயாத முயற்சியிலும் தான் உள்ளது...!!!*


5.கேள்வி கேட்கப் பயப்படுகிறவர்கள்
எதையுமே 
தெரிந்து கொள்ள முடியாது.


6.விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்.


7.அன்பு மகனே!
எனக்கு எழுதும் கடிதத்தை இனி
பசை தடவி ஒட்டாதே !
உன் வீட்டுச் சோற்றுப் பருக்கையால் ஒட்டி அனுப்பு !
தாயைப் பட்டினி போட்டான் என்ற பழி வராமல் இருக்கட்டும்!
- ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து அபாக்கியவதி தாய்

8.கொடுக்கும் பொருளை விட
கொடுப்பவரின் அன்பே பெரிது.

9.பழகுபவர்கள் தந்துவிட்டு போகும் பரிசு
சிலசமயம் வலியாகவும் இருக்கலாம்..!

ஆனால்

அதுவே உங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வழியாகவும் இருக்கலாம் வருந்தாதீர்கள்...!

10.ஆறுதல் கூட
சொல்லத் தெரியாது
ஆனாலும் நிறைய
கவலைகளை மறக்கச்
செய்கின்றன குழந்தைகள்...!

11.தண்ணீரைப் போல இருங்கள்...

தண்ணீர் அமைதியாகும் போது தூசிகள் தானாகவே அடியில் அடங்கி விடும்..

பிரச்சனைகள் வரும்போது அமைதியாய் இருங்கள்...
தானாகவே அடங்கிவிடும்...

12.வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில் தான் இருக்கிறது

-எஸ்.ரா

13.உண்மையில் கண்ணீரை விட உயர்வானது வியர்வை!
அதனால்தான் அழுவதைப்போல் நடிக்க முடிகிறது
வியர்ப்பதைப் போல்
நடிக்க முடியவில்லை
-நெல்லை ஜெயந்தா

14.எப்பறவையும் 
தட்டுப்படாத பொழுதில்  
வானம் எனக்கொரு
பாழ்கிணறு

-நர்சிம்


15.தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணிக் காகங்கள் எப்போதும் பறக்கின்றன..  பிடித்துக்கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றன... நம்பிக்கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன.

- *இறையன்பு* -



16.யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்

எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்

அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை

-ஜானகிராமன்


17.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைத் தாண்டி ஒரு மனிதன் ஓட வேண்டும். அப்போதுதான் அவன் தன் தொழிலில் நிலைக்க முடியும்

-வின்சென்ட்


18.பக்கத்தில், மரத்தை திடீரென வெட்டிவிட்டார்கள். வெளிச்சத்தை விடவும் வெறுமையே அதிகமாய் இருக்கிறது.

-நர்சிம்


19.கூப்பிட முடியாது என்று தெரிந்தும் கூப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே அவஸ்தை.

-வண்ணதாசன்.


20.தற்காலத்தினர்க்கு எல்லாவற்றின் விலையும் தெரிகிறது, ஆனால் எதன் மதிப்பும் தெரியவில்லை!

- ஆஸ்கார் வைல்ட்.


21.விருப்பப்பட்டா 
அவன் பிச்சைப்பாத்திரம்
 ஏந்தி நிற்கின்றான். 
வெறுப்புடனாவது 
சில காசுகள் போடேன். 
உன் பணப்பையின் 
பாரமாவது கொஞ்சம் 
குறையுமே.

அ.சீனிவாசன்


22.தொழில் நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது..  ஆனால் மிச்சப்படுத்திய நேரங்களை அவையே ஆக்கிரமித்தும் உள்ளது


23.ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்

-ராஜா சந்திரசேகர்


24.ஏதொன்றிலும் தீவிரம் புரியாமல் சிரித்து வைக்க ஆண்களாலும், நகைச்சுவை புரியாமல் அழுது விட பெண்களாலும் முடிகிறது.

-செளம்யா


25.அழுவதற்கான காரணத்தை சொல்லத் தெரியாத வயதில் 
சத்தமாகவும்..

தெரிந்த வயதில்
மனதிற்குள் மௌனமாகவும்
அழுது கொள்கிறோம்..!!

-யாசகன்

பத்தாம் வகுப்பு தமிழ் கூடுதல் குறுவினா விடைகள் இயல் 8 Tenth 10TH TAMIL Inside SHORT Q&A unit 8 sslc

Sunday, February 05, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf 10th tamil one mark questions

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு திருவாரூர் மாவட்டம் pdf 10th tamil first revision exam question paper thiruvarur

பதிவிறக்கு/DOWNLOAD

பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf 12th +2 tamil one mark questions

பதிவிறக்கு/DOWNLOAD

தன்னம்பிக்கை ஜென் கதை Thannambikai jen story tamil short story

ஜென் குரு ஒருவர் தன் சீடர்களுக்குத் தன்னம்பிக்கை பாடத்தை சொல்லிக் கொடுத்தார். 
அதனால் அந்த பாடத்தை தன் சீடர்களுக்குப் புரியும்படியாக கதையின் வாயிலாக சொல்ல ஆரம்பித்தார். 
அந்த கதை என்னவென்றால் "வேடன் ஒருவனுக்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும். 
அதனால் அவன் காட்டில் குழிகள் பலவற்றை வெட்டி, அவற்றில் விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் கட்டிவிடுவான். 
அந்த யானைகளோ அவனிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சிக்கும். இருப்பினும் அவற்றால் முடியாத காரணத்தினால், நாளடைவில் நம்பிக்கையை இழந்துவிடும். 
பின் அந்த யானைகள் பெரிதானவுடன், அதனைக் கயிற்றால் கட்டிவிடுவான்.
 அப்போது ஒரு நாள் வேட்டைக்கு ராஜா அந்த காட்டிற்குத் தன் மகனுடன் வந்தார். 
அப்போது பெரிய யானைகள் கயிற்றிலும், குட்டி யானைகள் இரும்புச்சங்கிலியிலும் கட்டியிருப்பதைப் பார்த்து, அந்த வேடனிடம் "எதற்குக் குட்டி யானைகளை இரும்புச்சங்கிலியிலும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் கட்டியுள்ளாய். 
அவை கயிற்றை அறுத்துக் கொண்டு போய்விடுமல்லவா?" என்று கேட்டார். அதற்கு அந்த வேடன் "மன்னா! பெரிய யானைகள் குட்டியாக இருக்கும் போது இரும்புச்சங்கிலியால் தான் கட்டப்பட்டிருந்தன. 
இவை பெரிதானதும் வேறு இடத்திற்கு போய் என்ன செய்வது என்று நம்பிக்கையை இழந்துவிட்டன. 
ஆகவே தான் கயிற்றில் கட்டியுள்ளேன்." என்றான்." என்ற கதையைச் சொல்லி, எனவே இந்த யானைகளைப் போல் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை நம்பிக்கையை இழக்காமல், ஏற்கனவே மேற்கொள்ளும் முயற்சியை விட அதிக முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி, அன்றைய தன்னம்பிக்கை பாடத்தை முடித்தார்.

பத்தாம் வகுப்பு தமிழ் கூடுதல் குறுவினா விடைகள் இயல் 7 Tenth 10TH TAMIL Inside SHORT Q&A unit 7 sslc

Saturday, February 04, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் கூடுதல் குறுவினா விடைகள் இயல் 6 Tenth 10TH TAMIL Inside SHORT Q&A unit 6 sslc

10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil செப்டம்பர் 11

வகுப்பு 10 

நாள் 11-09-2023 - 15-09-2023

பாடம் - தமிழ்

திருப்புதல் வினாக்கள்


1.‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. ‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!’ - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் 

   வடுக்காண் வற்றாகும் கீழ்’ 

- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

5.‘நமக்கு உயிர் காற்று தமிழ்த்துகள்

காற்றுக்கு வரம் மரம் –மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

6. வசன கவிதை – குறிப்பு வரைக.

7. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக, தொடரில் அமைக்க.

8. மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

9. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக  ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது. 

‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

10.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

11. ‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

12. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

  கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

13. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது உயிரின் ஓம்பப் படும்

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று


14.எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது? 

அ. கூவிளம் தேமா மலர் ஆ. கூவிளம் புளிமா நாள்

இ. தேமா புளிமா காசு ஈ. புளிமா தேமா பிறப்பு

15.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு? தமிழ்த்துகள்

16.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

17. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

18.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

19. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ... இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

20.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.


மாதிரி பாடக்குறிப்பு எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil model notes of lesson march 20

 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

நாள்

20-03-2023 முதல் 24-03-2023

திருப்புதல் வினாக்கள்


1. தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக. 

2. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை? 

3. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை? 

4. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை? 

5. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை? 

6. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. 

7. நீதிநெறி விளக்கப் பாடல் கூறும் கருத்தகளைத் தொகுத்து எழுதுக. 

8. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை? 

9. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்? 

10. நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக. 

11. உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை? 

12. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது? 

13. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக. 

14. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது? 

15. சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை? 

16. இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்? 

17. மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது? 

18. குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை? 

19. மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை? 

20. பூமி எப்போது பாதையாகும்?


மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 2 விரிவானம் model notes of lesson 7th term 3 unit 2

 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-02-2023 முதல் 17-02-2023

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஒப்புரவு ஒழுகு – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

உண்மை ஒளி

6.பக்கஎண்

32 - 37

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்தல்.

8.திறன்கள்

படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்துகொள்ளும் திறன்.

9.நுண்திறன்கள்

பெருந்தன்மை குறித்து அறிதல். ஜென் கதையை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html 

https://tamilthugal.blogspot.com/2020/06/unmai-oli-7th-tamil-th.html 

https://tamilthugal.blogspot.com/2020/04/unmai-oli-7th-virivaanam.html 

https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-seventh-tamil-unmai-oli-katturai.html 

11.ஆயத்தப்படுத்துதல்

உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.

ஜென் தத்துவம் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

உதவி பற்றிய கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

உண்மை ஒளி கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உதவி செய்தல் குறித்து விளக்குதல். மாணவர்களை உண்மை ஒளி கதையைக் கூறச் செய்தல்.

குருவின் செயலையும் திருடனின் செயலையும் ஒப்பிடுதல். மாணவர்களை நல்ல கோட்பாடுகள் குறித்து அறியச் செய்தல். தன்னலம் குறித்து விளக்குதல். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கச் செய்தல்.

வாய்ப்பு கிடைக்கும்போது பிறருக்கு உதவுதல்.

 


மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். இதே போன்ற பிற கதைகளைக் கூறுதல்.

15.மதிப்பீடு

LOT – ஜென் என்ற சொல்லின் பொருள்................................

MOT – உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.

HOT – நீ அறிந்த ஒரு ஜென் கதையை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உண்மை ஒளி படக்கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.

நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.


ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 3 விரிவானம் tamil model notes of lesson 6th unit 2 term 3

 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-02-2023 முதல் 17-02-2023

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

பாதம்

6.பக்கஎண்

28 - 31

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.

8.திறன்கள்

பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதை உணரும் திறன்.

9.நுண்திறன்கள்

விந்தைக் கதைகள் குறித்து அறிதல். 

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/07/paatham-6th-tamil-thunaipa.html 

https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-sixth-tamil-term-3-unit-2-paatham.html 

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html 

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கதைகள் பற்றிக் கூறச்செய்தல்.

சிறுகதை குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

கடமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

பாதம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கதையை விளக்குதல். மாரியின் பண்பு பற்றிக் கூறுதல்.

நேர்மை குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். மாரியின் நேர்மை குறித்து விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். அதிசயக் காலணி குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கூறச் செய்தல்.

 


மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

விந்தைக் கதைகள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

LOT – சிறுமியின் காலணியின் நிறம்..............................

MOT – பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.

HOT – அறச்செயல்களாக நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ செய்த நேர்மையான செயல்களைக் கூறு.

அதிசயக் காலணி உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என எழுதுக.


Friday, February 03, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் பயிற்சிக் கட்டகம் தென்காசி pdf மெல்லக் கற்போர் கையேடு 10th tamil slow learners guide tenkasi

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf Sivagangai 10th tamil 100 one mark questions choose sslc

பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 பாதம் மனவரைபடம் 6th tamil mindmap term 3 unit 2

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 உண்மை ஒளி மனவரைபடம் 7th tamil mindmap term 3 unit 2

 


பத்தாம் வகுப்பு தமிழ் கூடுதல் குறுவினா விடைகள் இயல் 5 Tenth 10TH TAMIL Inside SHORT Q&A unit 5 sslc

பத்தாம் வகுப்பு தமிழ் கற்றல் கையேடு சென்னை pdf tenth tamil material simple guide Chennai

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர் கையேடு pdf 10th tamil very slow learners guide

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்த்துகள்

Blog Archive