ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
13-02-2023 முதல் 17-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு ஒழுகு – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
உண்மை ஒளி
6.பக்கஎண்
32 - 37
7.கற்றல் விளைவுகள்
T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்தல்.
8.திறன்கள்
படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்துகொள்ளும் திறன்.
9.நுண்திறன்கள்
பெருந்தன்மை குறித்து அறிதல். ஜென் கதையை அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2020/06/unmai-oli-7th-tamil-th.html
https://tamilthugal.blogspot.com/2020/04/unmai-oli-7th-virivaanam.html
https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-seventh-tamil-unmai-oli-katturai.html
11.ஆயத்தப்படுத்துதல்
உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.
ஜென் தத்துவம் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
உதவி பற்றிய கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
உண்மை ஒளி கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உதவி செய்தல் குறித்து விளக்குதல். மாணவர்களை உண்மை ஒளி கதையைக் கூறச் செய்தல்.
குருவின் செயலையும் திருடனின் செயலையும் ஒப்பிடுதல். மாணவர்களை நல்ல கோட்பாடுகள் குறித்து அறியச் செய்தல். தன்னலம் குறித்து விளக்குதல். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கச் செய்தல்.
வாய்ப்பு கிடைக்கும்போது பிறருக்கு உதவுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். இதே போன்ற பிற கதைகளைக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – ஜென் என்ற சொல்லின் பொருள்................................
MOT – உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.
HOT – நீ அறிந்த ஒரு ஜென் கதையை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உண்மை ஒளி படக்கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.