கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, February 04, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 3 விரிவானம் tamil model notes of lesson 6th unit 2 term 3

 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-02-2023 முதல் 17-02-2023

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

பாதம்

6.பக்கஎண்

28 - 31

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.

8.திறன்கள்

பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதை உணரும் திறன்.

9.நுண்திறன்கள்

விந்தைக் கதைகள் குறித்து அறிதல். 

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/07/paatham-6th-tamil-thunaipa.html 

https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-sixth-tamil-term-3-unit-2-paatham.html 

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html 

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கதைகள் பற்றிக் கூறச்செய்தல்.

சிறுகதை குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

கடமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

பாதம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கதையை விளக்குதல். மாரியின் பண்பு பற்றிக் கூறுதல்.

நேர்மை குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். மாரியின் நேர்மை குறித்து விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். அதிசயக் காலணி குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கூறச் செய்தல்.

 


மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

விந்தைக் கதைகள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

LOT – சிறுமியின் காலணியின் நிறம்..............................

MOT – பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.

HOT – அறச்செயல்களாக நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ செய்த நேர்மையான செயல்களைக் கூறு.

அதிசயக் காலணி உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive