கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, February 04, 2023

மாதிரி பாடக்குறிப்பு எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil model notes of lesson march 20

 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

நாள்

20-03-2023 முதல் 24-03-2023

திருப்புதல் வினாக்கள்


1. தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக. 

2. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை? 

3. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை? 

4. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை? 

5. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை? 

6. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. 

7. நீதிநெறி விளக்கப் பாடல் கூறும் கருத்தகளைத் தொகுத்து எழுதுக. 

8. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை? 

9. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்? 

10. நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக. 

11. உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை? 

12. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது? 

13. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக. 

14. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது? 

15. சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை? 

16. இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்? 

17. மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது? 

18. குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை? 

19. மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை? 

20. பூமி எப்போது பாதையாகும்?


தமிழ்த்துகள்

Blog Archive