கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 02, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தண்ணீர், துணைவினைகள்

9th Tamil Model Notes Of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-07-2024 முதல் 13-07-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிருக்கு வேர் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

தண்ணீர், துணைவினைகள்

6.பக்கஎண்

47 – 54

7.கற்றல் விளைவுகள்

T-9008 கட்டுரைகள், கதைகளைப் படித்துக் கருத்துகளைச் சுருக்கியும் விரித்தும் எழுதுதல்.

T-9010 துணைவினைகளை முறையாகப் பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

நீர் நெருக்கடியை உணர்தல்.

9.நுண்திறன்கள்

முதல்வினை, துணைவினையை அறிதல்.

நீர் மேலாண்மை, இயற்கை வளங்கள் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்





இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/06/3_38.html

 https://tamilthugal.blogspot.com/2020/09/9th-virivaanam-tamil-k.html

https://tamilthugal.blogspot.com/2020/08/9-2-thanneer-viri.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-thunai.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-2-thunai-vinaigal-9th-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2023/03/im-water-speaking-tamil-speech-water-day.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த நீர்நிலைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

கந்தர்வனை அறிமுகப்படுத்துதல்.

நீரின் இன்றியமையாமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தண்ணீர் கதையின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். தண்ணீர் பயன்பாடு குறித்து அறியச் செய்தல்.

          கிராமத்தின் நீர் நெருக்கடி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          முதல்வினை, துணைவினை குறித்து விளக்குதல்.

நீரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிறுகதை நடையை மாணவர்கள் அறியச் செய்தல்.

          நீர் குறித்த கதைகளைப் படைத்தல்.

15.மதிப்பீடு

          LOT பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக .................................

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ....................................

அ. வந்தான், வருகிறான்                                          

ஆ. வந்துவிட்டான், வரவில்லை

இ. வந்தான், வருவான்                                             

ஈ. வருவான், வரமாட்டான்

          MOT – அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

HOT – தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          நீர்நிலைகளின் பெயர்களைத் தொகுத்தல்.

தண்ணீர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நிலம் பொது Model Notes Of Lesson 8th Tamil

  Model Notes Of Lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-07-2024 முதல் 13-07-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஈடில்லா இயற்கை – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

நிலம் பொது

6.பக்கஎண்

30 - 33

7.கற்றல் விளைவுகள்

T-818 தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

          இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை உணரும் திறன்.

9.நுண்திறன்கள்

          பழங்குடியினரின் நாட்டுப்பற்றை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-nilam-pothu.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/8-2-8th-tamil-worksheet-with-pdf-nilam.html

          https://tamilthugal.blogspot.com/2021/04/8th-tamil-urainadai-ulagam-nilam-pothu.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-nilam-pothu.html

          https://tamilthugal.blogspot.com/2021/03/96-land-names-in-tamil.html

 11.ஆயத்தப்படுத்துதல்

          பழங்குடியினர் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          இயற்கை வளங்கள் குறித்துத் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.

          நிலத்தின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நிலம் மிகவும் புனிதமானது. இயற்கை வளங்கள் அனைத்தும் பழங்குடியினரின் உறவுகள். விலங்குகளை வேட்டையாடக் கூடாது. நிலத்தை நேசிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல். இயற்கையின் அவசியம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல். நிலமாசு குறித்து விவாதித்தல்.

         


மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          நிலத்தின் இன்றியமையாமையை மாணவர்களுக்குக் கூறுதல்.

          இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

          LOT நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

          MOT – தொடரில் அமைத்து எழுதுக.

                   வேடிக்கை, உடன்பிறந்தார்

                   நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

          HOT நிலவளத்தினைக் காக்க மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீ கருதுவன யாவை?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          நிலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.

          நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்தல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விலங்குகள் உலகம்

 7th Tamil Model Notes Of Lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-07-2024 முதல் 13-07-2024

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

அணிநிழல் காடு – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

விலங்குகள் உலகம்

6.பக்கஎண்

32 - 37

7.கற்றல் விளைவுகள்

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின்மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

          பல்லுயிர்களின் வாழிடமான காடு குறித்தும் காட்டு விலங்குகள் குறித்தும் புலிகள் காப்பகம் வழி அறியும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          முண்டன்துறை புலிகள் காப்பகம் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்


          
இணைய வளங்கள்
    https://tamilthugal.blogspot.com/2023/07/1-2-7th-tamil-mind-map-vilankukal-ulakam.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/7-2-7th-tamil-worksheet-with-pdf.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-7th-tamil-vilangukal-ulakam-kuruvina.html

          https://tamilthugal.blogspot.com/2020/04/vandalur-zoo-animals-watch-online-camera.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்களுக்குப் பிடித்த விலங்குகள் குறித்து அவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          காட்டின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          யானைகளின் வகைகள், தந்த அமைப்பு, உணவு, நீர், பண்புகள் பற்றியும், கரடி ஓர் அனைத்துண்ணி என்பதையும் அதன் உணவுகள் குறித்தும், எடை 160 கிலோ என்பதையும் அறிதல். புலி குறித்த தகவல்களையும் புலி பண்புள்ள விலங்கு என்பதையும் அதற்கான காரணங்களையும் அறிதல். மான்களின் வகைகள் குறித்தும் அதன் அழகையும் உணர்தல்.

          விலங்குகளின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          விலங்குகள் காப்பகம் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          காட்டின் சிறப்புகளை அறிந்து வரல்.

          உங்கள் பகுதிகளில் உள்ள விலங்குகளின் பெயர்களை அறிதல்.

          சரணாலயங்கள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          LOT கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ....................

MOT யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

HOT காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.

                   உனக்குப் பிடித்த விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          காட்டுவிலங்குகளின் படங்களைத் திரட்டுதல்.

          ஏதேனும் ஒரு விலங்கு குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.

          விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டுதல்.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிறகின் ஓசை

6th Tamil Model Notes Of Lesson 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-07-2024 முதல் 13-07-2024

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

இயற்கை இன்பம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

சிறகின் ஓசை

6.பக்கஎண்

32 - 36

7.கற்றல் விளைவுகள்

T-613 வெவ்வேறு வகையான கட்டுரைகளைப் படித்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

          மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன என்பதை அறிதல்.

9.நுண்திறன்கள்

          பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பை அறியும் திறன் பெறுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

            https://tamilthugal.blogspot.com/2023/07/1-6th-tamil-mind-map-sirakin-osai.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-sirakin-osai-term-1.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/6-2-6th-tamil-worksheet-with-pdf.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/6th-tamil-siragin-osai.html

          https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_6.html

11.ஆயத்தப்படுத்துதல்

          பிடித்த பறவைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          மாணவர்கள் அறிந்த பறவையின் சிறப்பைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வலசை போதல் குறித்து விளக்குதல். சத்திமுத்தப்புலவர் பாடலைக்கூறுதல். சிட்டுக்குருவியில் ஆண் பெண் வேறுபாடு அறிதல் குறித்து விளக்குதல். சிட்டுக்குருவியின் அழிவுக்குக்  காரணங்களை அறிதல். பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை குறித்து அறிதல். சலீம் அலி குறித்து அறிதல்.

          பறவையின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பறவையின் சிறப்புகளைக் கூறுதல்.

          சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற வாழ்க்கை வரலாற்று நூலைப் பற்றி விளக்குதல்.

          சரணாலயங்கள் குறித்து விளக்குதல்.      

15.மதிப்பீடு

          LOT பறவை பற்றிய படிப்பு ......................

பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

          MOT நீ விரும்பும் பறவைகளின் பெயர்களை எழுதுக.

                   சொற்றொடர் அமைத்து எழுதுக.

                   வாழ்நாள், செயற்கை.

HOT வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

                   பறவை இனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியன பற்றிச் சிந்தித்து எழுதுக.

                   சலீம் அலி குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.

          பறவையின் பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.

          குருவி என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.


Saturday, July 01, 2023

பாடத் தலைப்புகள் கற்றல் விளைவுகள் எண்களுடன் pdf ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 First Term 7th Tamil Headings LO with Numbers

 பதிவிறக்கு/DOWNLOAD

பாடத் தலைப்புகள் கற்றல் விளைவுகள் எண்களுடன் pdf ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 First Term 6th Tamil Headings LO with Numbers

 பதிவிறக்கு/Download

விருந்து போற்றுதும் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் 10th tamil ppt power point presentation

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 மலைபடுகடாம் துணைக்கருவி 10th tamil Teaching aid malaipadukadam

 


பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 விருந்து போற்றுதும் துணைக்கருவி 10th tamil Teaching aid virunthu potruthum


தமிழ்த்துகள்

Blog Archive