6th Tamil Model Notes Of Lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
08-07-2024 முதல் 13-07-2024
2.பருவம்
1
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
இயற்கை இன்பம் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
சிறகின் ஓசை
6.பக்கஎண்
32 - 36
7.கற்றல் விளைவுகள்
T-613 வெவ்வேறு வகையான கட்டுரைகளைப் படித்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
மனிதர்களைப் போலவே
பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன என்பதை அறிதல்.
9.நுண்திறன்கள்
பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
இடையேயான தொடர்பை அறியும் திறன் பெறுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/07/1-6th-tamil-mind-map-sirakin-osai.html
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-sirakin-osai-term-1.html
https://tamilthugal.blogspot.com/2021/08/6-2-6th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2021/08/6th-tamil-siragin-osai.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_6.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த பறவைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
மாணவர்கள்
அறிந்த பறவையின் சிறப்பைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
வலசை போதல்
குறித்து விளக்குதல். சத்திமுத்தப்புலவர் பாடலைக்கூறுதல். சிட்டுக்குருவியில் ஆண்
பெண் வேறுபாடு அறிதல் குறித்து விளக்குதல். சிட்டுக்குருவியின் அழிவுக்குக் காரணங்களை அறிதல். பறவையினங்களைக் காப்பாற்ற
நாம் செய்ய வேண்டியவை குறித்து அறிதல். சலீம் அலி குறித்து அறிதல்.
பறவையின் பெருமைகளையும் சிறப்புகளையும்
மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பறவையின் சிறப்புகளைக் கூறுதல்.
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற
வாழ்க்கை வரலாற்று நூலைப் பற்றி விளக்குதல்.
சரணாலயங்கள் குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – பறவை பற்றிய
படிப்பு ......................
பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
MOT
– நீ விரும்பும் பறவைகளின் பெயர்களை
எழுதுக.
சொற்றொடர்
அமைத்து எழுதுக.
வாழ்நாள்,
செயற்கை.
HOT – வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
பறவை
இனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியன பற்றிச் சிந்தித்து எழுதுக.
சலீம்
அலி குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.
பறவையின்
பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.
குருவி
என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.