கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 02, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தண்ணீர், துணைவினைகள்

9th Tamil Model Notes Of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-07-2024 முதல் 13-07-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிருக்கு வேர் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

தண்ணீர், துணைவினைகள்

6.பக்கஎண்

47 – 54

7.கற்றல் விளைவுகள்

T-9008 கட்டுரைகள், கதைகளைப் படித்துக் கருத்துகளைச் சுருக்கியும் விரித்தும் எழுதுதல்.

T-9010 துணைவினைகளை முறையாகப் பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

நீர் நெருக்கடியை உணர்தல்.

9.நுண்திறன்கள்

முதல்வினை, துணைவினையை அறிதல்.

நீர் மேலாண்மை, இயற்கை வளங்கள் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்





இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/06/3_38.html

 https://tamilthugal.blogspot.com/2020/09/9th-virivaanam-tamil-k.html

https://tamilthugal.blogspot.com/2020/08/9-2-thanneer-viri.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-thunai.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-2-thunai-vinaigal-9th-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2023/03/im-water-speaking-tamil-speech-water-day.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த நீர்நிலைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

கந்தர்வனை அறிமுகப்படுத்துதல்.

நீரின் இன்றியமையாமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தண்ணீர் கதையின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். தண்ணீர் பயன்பாடு குறித்து அறியச் செய்தல்.

          கிராமத்தின் நீர் நெருக்கடி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          முதல்வினை, துணைவினை குறித்து விளக்குதல்.

நீரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிறுகதை நடையை மாணவர்கள் அறியச் செய்தல்.

          நீர் குறித்த கதைகளைப் படைத்தல்.

15.மதிப்பீடு

          LOT பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக .................................

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ....................................

அ. வந்தான், வருகிறான்                                          

ஆ. வந்துவிட்டான், வரவில்லை

இ. வந்தான், வருவான்                                             

ஈ. வருவான், வரமாட்டான்

          MOT – அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

HOT – தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          நீர்நிலைகளின் பெயர்களைத் தொகுத்தல்.

தண்ணீர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive