கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 26, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

7th tamil model notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

01-07- 2024 முதல் 05-07- 2024

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

அணிநிழல் காடு – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

6.பக்கஎண்

26 - 31

7.கற்றல் விளைவுகள்

T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் (வருணனை , உணர்வு சார்ந்தவை , இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.

8.கற்றல் நோக்கங்கள்

          செய்யுளின் வருணனைப் பகுதிகளைப் படித்துச் சுவைத்தல்.

9.நுந்திரன்கள்

          காடுகளும் காட்டுஉயிர்களும் நாட்டின் உயிர்நாடி என்று புரிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

        https://tamilthugal.blogspot.com/2024/06/blog-post_22.html

          https :// tamilthugal . blogspot . com /2021/07/2-7 th - tamil - worksheet - with - pdf - kaadu . html

          https :// tamilthugal . blogspot . com /2019/08/ வலைப்பதிவு - post_ 59. html

          https :// tamilthugal . blogspot . com /2019/07/7- qr - code - video_ 66. html

          https :// tamilthugal . blogspot . com /2021/06/2-1-7 th - tamil - kaadu - unit -2- term -1. html

          https :// tamilthugal . blogspot . com /2021/07/2-7 th - tamil - worksheet - with - pdf - appadiye . html

          https :// tamilthugal . blogspot . com /2021/06/7 வது - தமிழ் - அப்படியே - நிறுத்தும் - அந்த - மரம் . html

          https :// tamilthugal . blogspot . com /2022/06/ கவிஞர் - ராஜா - மார்த்தாண்டன் . html

11.ஆயத்தப்படுத்துதல்

          காட்டின் மரத்தின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          காடு, மரம் குறித்து மாணவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

                   காடு மலர்கள், நிழல், காய்கனிகள் போன்றவற்றைத் தரும், மயில் நடனமாடும், பன்றி கிழங்கு உண்ணும், பாம்பு கலங்கும், நரி ஊளையிடும், யானை நடைபோடும், குயில் கூவும், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் அலையும் மாணவர்களை விளக்குகின்றன.

          காட்டின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          நாவற்பழ மரம், காக்கை, குருவி, மைனா, கிளிகள், அணில்கள், சுட்ட பழங்கள், பழம் பொறுக்கும் தங்கச்சிகள், வௌவால் கூட்டம், கிளியாந்தட்டின் சுவாரசியம், பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்ட மரம் – கவிதையின் உணர்ச்சிப் பெருக்கை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

          இயற்கையின் மரத்தின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்களின் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          காடு பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          காட்டைக் குறிக்கும் வேறு பெயர்களை அறிதல்.

          கவிதையை உணர்வுடன் மாணவர்களை வாசிக்கச் செய்தல்.

          உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களை அறிதல்.

15.மதிப்பீடு

          LOT விடுதி என்னும் சொல்லின் பொருள் யாது ?

                   காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை ?

MOT – காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை

எழுதுக.

                   பொருள் கூறுக.

                   நச்சரவம், ஈன்று, கொம்பு.

HOT காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன ?

                   பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க வேண்டும் ?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீதிற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          உவமைக் கவிஞர் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          ராஜமார்த்தாண்டன் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          மரத்தின் பெருமைகளைத் தொகுத்தல்.

          ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிலப்பதிகாரம், காணிநிலம் 6th tamil model notes of lesson

 6th tamil model notes of lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

01-07-2024 முதல் 05-07-2024

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

இயற்கை இன்பம் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

சிலப்பதிகாரம், காணிநிலம்

6.பக்கஎண்

26 - 31

7.கற்றல் விளைவுகள்

T-614 புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

இயற்கையின் சிறப்புகளை அறியும் திறன்.

9.நுண்திறன்கள்

இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விவாதித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்





இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/06/blog-post_90.html

https://tamilthugal.blogspot.com/2024/06/blog-post_85.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/6th-tamil-worksheet-with-pdf.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-6th-tamil-silappathikaram-kuruvina.html

          https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_23.html

          https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_22.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/2-6th-tamil-worksheet-with-pdf.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த இயற்கையின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.

          வீடு குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          இயற்கை, நிலா, கதிரவன், மழை குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த வீட்டின், இயற்கையின் சிறப்பைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சோழ மன்னன் வெண்கொற்றக் குடை போல வெண்ணிலா உலகுக்கு இன்பம் அளிக்கிறது, சோழனுடைய ஆணைச் சக்கரம் போல கதிரவன் இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது, உலகிற்கு மன்னன் அருள் செய்வது போல மழை மக்களைக் காக்கிறது என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          காணி அளவு நிலத்தில் தூண்கள், மாடங்களுடன் அழகிய மாளிகை கட்டி, கிணறும் இளநீர் தரும் தென்னையும் நிலவொளியும் குயிலின் ஓசையும் இளந்தென்றலும் வேண்டும் என பாரதியார் விரும்புவதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          இயற்கையின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிலப்பதிகாரப் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          இயற்கையின் சிறப்புகளை முக்கியத்துவத்தை அறிந்து வரல்.

          காணிநிலம் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          வீட்டின் இன்றியமையாமையைப் பட்டியலிடுதல்.

15.மதிப்பீடு

          LOT கிணறு என்பதைக் குறிக்கும் சொல் ......................

இயற்கை போற்றத்தக்கது ஏன்?

          MOT சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

                   பொருள் கூறுக.

                   திங்கள், அலர், திகிரி, அளி, காணி, மாடங்கள், சித்தம்.

HOT இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணம் என்ன?

                   நீ விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          இளங்கோவடிகள், பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          இயற்கையின் பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.

          நிலா என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.

          வீடு என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.

தேன்சிட்டு ஜூன் 16-30, 2023 இதழ் வினாடி வினா 115 வினா விடை pdf then chittu June 16-30 paper quiz questions and answers

 பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, June 25, 2023

புயலிலே ஒரு தோணி, தொகைநிலைத்தொடர்கள் தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 Puyalile oru thoni, thokainilaithodarkal 10th tamil question slip test

 பதிவிறக்கு/DOWNLOAD

முல்லைப்பாட்டு தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 Mullaipattu 10th tamil question slip test

பதிவிறக்கு /DOWNLOAD

காற்றே வா தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 Kaatrey vaa 10th tamil question slip test

 பதிவிறக்கு/DOWNLOAD

கேட்கிறதா என் குரல் தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 Ketkiratha en kural 10th tamil question slip test

 பதிவிறக்கு/DOWNLOAD

தேன்சிட்டு ஜூன் 1-15 மாத இதழ் வினாடி வினா 115 வினாவிடை then chittu June 1-15 paper quiz questions answers

தேன்சிட்டு ஜூன் 1-15, 2023 இதழ் வினாடி வினா 115 வினா விடை pdf then chittu June 1-15 paper quiz questions and answers

 பதிவிறக்கு/DOWNLOAD

Thursday, June 22, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 விரிவானம் சொலவடைகள் துணைக்கருவி 7th tamil Teaching aid solavadaikal


பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 கேட்கிறதா என் குரல் துணைக்கருவி 10th tamil Teaching aid ketkiratha en kural 2


பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 கேட்கிறதா என் குரல் துணைக்கருவி 10th tamil Teaching aid ketkiratha en kural 1


எழுத்து சொல் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் 10th tamil ppt power point presentation unit 1

Monday, June 19, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு உரைநடையின் அணிநலன்கள், எழுத்து, சொல் 10th tamil model notes of lesson

 10th tamil model notes of lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

26-06-2023 முதல் 30-06-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

உரைநடையின் அணிநலன்கள், எழுத்து, சொல்

6.பக்கஎண்

11 - 18

7.கற்றல் விளைவுகள்

T-1003 உரைநடையிலுள்ள அணிநலன்களை உள்வாங்கிக்கொண்டு நயமிகு தொடர்களை உருவாக்கி வெளிப்படுத்துதல்.

T-1004 மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல்.

8.திறன்கள்

தமிழ் மொழியின் நயங்களையும் அழகினையும் அறிதல்.

9.நுண்திறன்கள்

அளபெடை, மொழி, தொழிற்பெயர் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/10th-tamil-online-test-urainadaiyin.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-tenth-tamil.html

https://tamilthugal.blogspot.com/2023/06/1-10th-tamil-mind-map-urainadaiyin.html

https://tamilthugal.blogspot.com/2020/10/1-urainadaiyin-aninalankal.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-1-urainadaiyin-a.html

https://tamilthugal.blogspot.com/2023/06/pdf-1-eluthu-sol-10th-tamil-question.html

https://tamilthugal.blogspot.com/2021/10/1-1-10th-tamil-eluthu-sol-one-word.html

https://tamilthugal.blogspot.com/2023/06/1-10th-tamil-mind-map-moovakai-moli.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-eluthu-mozhi-tholirpeyar-10th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10th-tamil-ilakkanam-moovagai-mozhi.html

https://tamilthugal.blogspot.com/2020/05/tholil-peyar-tamil-ilakkanam.html




11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த உவமைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

எழில்முதல்வன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

அளபெடை, மூவகை மொழி, தொழிற்பெயர் வகைகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          உரைநடையின் அணிநலன்கள் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          உவமை, உருவகம், இணை ஒப்பு, இலக்கணை, முரண்படு மெய்ம்மை, சொல்முரண், எதிரிணை இசைவு, உச்சநிலை குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். எழில்முதல்வன் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

          சார்பெழுத்து, உயிரளபெடை வகைகள், ஒற்றளபெடை, மூவகை மொழி, தொழிற்பெயர் வகைகள் போன்றவற்றை உதாரணங்கள் மூலம் விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ் இலக்கிய நயங்களின் சிறப்புகளை அறிந்து வரல்.

          வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குதல்.

15.மதிப்பீடு

          LOT மூவகை மொழிகளை எழுதுக.

          MOT – தொழிற்பெயர் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

HOT ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

சூழல் - வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் படித்தவற்றுள் நினைவில் நீங்கா இடம்பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக.

இலக்கணத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வருதல்.

தமிழ்த்துகள்

Blog Archive