6th tamil model notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
01-07-2024 முதல் 05-07-2024
2.பருவம்
1
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
இயற்கை இன்பம் –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
சிலப்பதிகாரம்,
காணிநிலம்
6.பக்கஎண்
26 - 31
7.கற்றல் விளைவுகள்
T-614 புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை
வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
இயற்கையின்
சிறப்புகளை அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விவாதித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/blog-post_90.html
https://tamilthugal.blogspot.com/2024/06/blog-post_85.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-6th-tamil-silappathikaram-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_23.html
https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_22.html
https://tamilthugal.blogspot.com/2021/07/2-6th-tamil-worksheet-with-pdf.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த இயற்கையின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.
வீடு குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
இயற்கை, நிலா, கதிரவன், மழை குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த வீட்டின், இயற்கையின் சிறப்பைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
சோழ மன்னன்
வெண்கொற்றக் குடை போல வெண்ணிலா உலகுக்கு இன்பம் அளிக்கிறது, சோழனுடைய ஆணைச்
சக்கரம் போல கதிரவன் இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது, உலகிற்கு மன்னன் அருள்
செய்வது போல மழை மக்களைக் காக்கிறது என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
காணி அளவு
நிலத்தில் தூண்கள், மாடங்களுடன் அழகிய மாளிகை கட்டி, கிணறும் இளநீர் தரும்
தென்னையும் நிலவொளியும் குயிலின் ஓசையும் இளந்தென்றலும் வேண்டும் என பாரதியார்
விரும்புவதை மாணவர்களுக்கு விளக்குதல்.
இயற்கையின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள்
ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
சிலப்பதிகாரப் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
இயற்கையின்
சிறப்புகளை முக்கியத்துவத்தை அறிந்து வரல்.
காணிநிலம் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
வீட்டின்
இன்றியமையாமையைப் பட்டியலிடுதல்.
15.மதிப்பீடு
LOT – கிணறு என்பதைக்
குறிக்கும் சொல் ......................
இயற்கை போற்றத்தக்கது ஏன்?
MOT
– சிலப்பதிகாரக் காப்பியம்
எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
பொருள்
கூறுக.
திங்கள்,
அலர், திகிரி, அளி, காணி, மாடங்கள், சித்தம்.
HOT – இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணம் என்ன?
நீ
விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
இளங்கோவடிகள், பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்.
இயற்கையின்
பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.
நிலா
என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.
வீடு
என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.