பிறந்த நாள் - 05.10.1823
ஊர் - மருதூர் - கடலூர் மாவட்டம்
பெற்றோர் - இராமையாபிள்ளை, சின்னம்மையார்.
உடன்பிறந்தவர்கள் - சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள்.
வள்ளலாரின் ஆற்றல்கள்
- அருளாசிரியர்
- இதழாசிரியர்
- இறையன்பர்
- உரையாசிரியர்
- சமூக சீர்திருத்தவாதி
- சித்தமருத்துவர்
- சிறந்த சொற்பொழிவாளர்
- ஞானாசிரியர்
- தீர்க்கதரிசி
- நூலாசிரியர்
- பசிப் பிணி போக்கிய அருளாளர்
- பதிப்பாசிரியர்
- போதகாசிரியர்
- மொழி ஆய்வாளர் (தமிழ்)
- பண்பாளர்
இராமலிங்க அடிகள் கொள்கைகள்
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
- புலால் உணவு உண்ணக்கூடாது
- கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
- மத வெறி கூடாது
வள்ளலாரின் அறிவுரைகள்
- நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
- தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
- மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
- ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
- பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
- பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
- இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
- குருவை வணங்கக் கூசி நிற்காதே
- வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
- தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே
வள்ளலார் பதிப்பித்தவை
- சின்மய தீபிகை
- ஒழிவிலொடுக்கம்
- தொண்டைமண்டல சதகம்
வள்ளலார் இயற்றியவை
- மனுமுறைகண்ட வாசகம்
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
- திருவருட்பா
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர்.
சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
.
23–5–1867 அன்று வடலூரில் தருமசாலையைத் தொடங்கினார்.
அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
அறிவுநெறி விளங்க வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.
இறப்பு - 30-01-1874
இந்திய அரசு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.