தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, July 28, 2020
Monday, July 27, 2020
Sunday, July 26, 2020
Wednesday, July 22, 2020
Tuesday, July 21, 2020
Monday, July 20, 2020
Sunday, July 19, 2020
Saturday, July 18, 2020
Friday, July 17, 2020
Thursday, July 16, 2020
Wednesday, July 15, 2020
Tuesday, July 14, 2020
Sunday, July 12, 2020
புறநானூறு PURANAANOORU
அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.
அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.
பாடல்:
- வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
- வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
- தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
- அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
- பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
- செருவென் றதுவாகை யாம்.
இப்புற ஒழுக்கங்களை
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,
வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன.
இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.
புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.
அகநானூறு AKANAANOORU
இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை
- களிற்றியானை நிரை(1-120)
- மணி மிடை பவளம் (121-300)
- நித்திலக் கோவை (301-400)
என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.
ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன.
இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை.
யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன.
இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன.
மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன.
இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டுகூறா தவைகுறிஞ்சிக் கூற்று.
பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) - பாலைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (4, 14, 24 இப்படி) - முல்லைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26 இப்படி) - மருதத் திணை
பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள் (10, 20, 30 இப்படி) - நெய்தல் திணை
பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை
அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன.
தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.
அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகநானூறு வழி தெரிகிறது.
யவனர்கள் வாசனைப் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை
- "யவனர் தந்தவினைமாண் நன்கலம்
- பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"
என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.
கலித்தொகை KALITHOGAI
கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது என் கீழ் வரும் இரு பாடல்களின் உதவியுடன் அறியலாம்.
இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்கலவிவலார் கண்ட கலி.
கலித்தொகை நூலில் உள்ள
- பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவன் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ
- குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவன் கபிலன்
- மருதத்திணைப் பாடல்களைப் பாடியவன் மருதன் இளநாகன்
- முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன்
- நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவன் நல்லந்துவன்
இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.
ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்
போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சிஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றிஇல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்புல்லும் கலிமுறைக் கோப்பு.
பாடல் தொகைகள்
கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள்,
பாலைக்கலியில் 35
குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும்,
மருதக்கலியில் 35 பாடல்களும்,
முல்லைக்கலியில் 17 பாடல்களும்,
நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.
குறிஞ்சிக்கலி
முல்லைக்கலி
முல்லைக்கலிப் பாடல்கள், நோக்கம் ஒன்றுபட்டு இல்லிருக்கும் தலைவி ஆற்றியிருத்தலைக் கூறுகின்றன.
கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன.
ஆடவர் ஏறுதழுவுதலைச் சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
மருதக்கலி
பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும்,
அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும்,
தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.
நெய்தற்கலி
பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும்
பாலைக்கலி
பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும், தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கியக் கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும்.
கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்
'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைபண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்அன்பு எனப்படுவது தன்கிளை செறாமைஅறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமைமுறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்(கலி ,133)
கலித்தொகை காட்டும் சமூகம்
களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும்,
நீராடல் பற்றிய செய்தியும்,
மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன.
மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றிய செய்திகள் அதிகம் உள்ளன.
மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.
வரலாற்று, புராணச் செய்திகள்
கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.
பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன.
பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.
முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
பரிபாடல் PARIPAADAL
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
பரிபாடலின் தொகுப்பைப் பின்வரும் வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்:
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்பசெய்யபரி பாடற் றிறம்.
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்,
செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்,
காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல்,
படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)
- தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.
- நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
- வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
- வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
- கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.
- சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.
- 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
- பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
பதிற்றுப்பத்து PATHITRUPATHU
பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன.
இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
இப்பதிகங்களுக்கு கட்டமைப்புச் சிறப்பு உண்டு.
பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் உள்ளன.
கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரிய நடையில் உள்ளது.
இந்த பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.
பதிற்றுப்பத்துப் பதிகங்களை கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது.
இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது.
ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை,
ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார்.
10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது.
கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன.
அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம்.
பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.
நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.
ஒரு பாட்டின் கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாக வருவதே அந்தாதியாகும்.
எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி வரி போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.
இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32 வது பாடல் முதல் வரி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ.
மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.
ஐங்குறுநூறு AINKURUNOORU
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.
இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்:
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனேநூலையோ தைங்குறு நூறு.
- மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
- குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
- பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
- முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
ஆகியோர் பாடியுள்ளனர்.
இதனைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்".
தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை".
எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும்.
நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன.
வேட்கைப்பத்து, வேழப்பத்து, நெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும்,
பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்தப்பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன.
மேலும் தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது.
அன்னாய் பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது.
விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன.
குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன.
உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன.
குறுந்தொகை KURUNTHOKAI
குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.
'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி,
தருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலாற்றுச் சான்றாகும்.
- நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
- நீரினும் ஆரளவின்றே சாரல்
- கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
- பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே
என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.
"வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.
நற்றிணை - NATRINAI
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.
இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும்.
நல் என்ற அடைமொழி பெற்றது.
இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது.
இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை.
தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான்.
நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
நற்றிணையில் 7அடி முதல் 13 அடிகள் வரை பாடல் உள்ளன.
7 அடி பாடல்கள் - 1
8 அடி பாடல்கள் - 1
9 அடி பாடல்கள் - 106
10 அடி பாடல்கள் - 96
11 அடி பாடல்கள் - 110
12 அடி பாடல்கள் - 77
13 அடி பாடல்கள் - 8
234ஆவது பாடல் கிடைக்கவில்லை.
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர்.
குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர்.
அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர்.
மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை.
இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
திணை அடிப்படையில் பார்க்கும்போது
குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130,
பாலைப் பாடல்கள் 107,
நெய்தல் படல்கள் 101,
மருதப் பாடல்கள் 33,
முல்லைப் பாடல்கள் 28 அமைந்துள்ளன.
நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம்.
தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.
மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது.
பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம்.
மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
தமிழ்த்துகள்
-
Downloading and Uploading of Rural Aptitude Test Applications
-
Tamilar thirunal Village Pongal festival colour drawing picture competition உழவர் திருநாள் Uzhavar thirunal
-
VIII 8TH MATHS FIRST MID TERM EXAM QUESTION PAPER TAMIL MEDIUM VIRUDHUNAGAR DISTRICT 2024
-
KALAI THIRUVILA STATE COMPETITION DETAILS 2024
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
10th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 25-11-2024 முதல் 29-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
8th Tamil model notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 25-11-2024 முதல் 29-11-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
Blog Archive
-
▼
2020
(1294)
-
▼
July
(179)
- வகுப்பு 9 இயல் 3 ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் த...
- வகுப்பு 8 இயல் 2 பலவுள் தெரிக ஆன்லைன் தேர்வு 8TH T...
- மரபுத்தொடர்கள் - திறனறித்தேர்வு - ஆன்லைன் சான்றிதழ...
- 63 நாயன்மார்கள் வரலாறு - சுருக்கமாக... SHORT HISTO...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - உரைநடை - சிற்றக...
- பத்தாம் தமிழ் - விரிவானம் - இயல் 6 - பாய்ச்சல்
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - விரிவானம் - கோப...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - விரிவானம் - இயல் 2 - புய...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - விரிவானம் - ஒரு...
- பத்தாம் வகுப்பு - தமிழ்.- இயல் 8 - விரிவானம் - இரா...
- பத்தாம் வகுப்பு - தமிழ்.- இயல் 7 - விரிவானம் - மங்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - விரிவானம் - மங்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - விரிவானம் - மங்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - விரிவானம் - விண...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - பாடப்பகுதி ஒரு மதிப்பெண்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - பாடப்பகுதி ஒரு மதிப்பெண்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - கற்பவை கற்றபின் - ஒரு மத...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - பா நயம் பாராட்டல் - இனிய...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 முதல் 9 வரை - பாட...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 முதல் 9 வரையிலான ...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - பகுபத உறுப்பிலக்கணம் - எ...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இன்றியமையாத இ...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 , இலக்கணம் - அலகி...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 , இலக்கணம் - பா வ...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 இலக்கணம் - பா வகை...
- இலக்கணக் குறிப்பு இனி எளிமைதான் - இன்றியமையாத இலக்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - இலக்கணம் - புறப...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இலக்கணம் - அகப்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , இலக்கணம் - பொரு...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - மணற்கேணி - இலக்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - இலக்கணம் - பொது...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - இலக்கணம் - பொது...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - இலக்கணம் - தொகா...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இயல் 3 - தொகா...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - இலக்கணம் - தொகா...
- தமிழ் இலக்கணத்தை இப்படிப் படித்தால் மிகவும் எளிது ...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இலக்கணக்குறிப்பு - மாஅல்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இலக்கணக் குறிப்பு - பரூஉ...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இயல் 2 - தொகை...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , இலக்கணம் - தொகை...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - புதிய பாடத்திட்டம் - இயல...
- பத்தாம் வகுப்பு - தமிழ் -புதிய பாடத்திட்டம் - இலக...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இலக்கணம் - தொகை...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - இலக்கணம் - சொல்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - புதிய பாடத்திட்டம் - இலக...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - இலக்கணம் - சொல்...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - எழுத்து - உயி...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - புதிய பாடத்திட்டம் - இயல...
- பத்தாம் வகுப்பு - தமிழ் - புதிய பாடத்திட்டம் - இயல...
- பெரியபுராணம் - திறனறித்தேர்வு மின்சான்றிதழுடன் PER...
- அப்துல் கலாம் தமிழ்க்கட்டுரை ABDUL KALAM TAMIL KAT...
- கற்பவை கற்ற பின் 3 பத்தாம் வகுப்பு தமிழ் KARPAVAI ...
- கற்பவை கற்ற பின் 2 பத்தாம் வகுப்பு தமிழ் KARPAVAI ...
- கற்பவை கற்ற பின் 1 பத்தாம் வகுப்பு தமிழ் KARPAVAI ...
- தமிழ்ச் சொல் வளம் பத்தாம் வகுப்பு உரைநடை நெல் வகைக...
- ஜெயகாந்தம் பத்தாம் வகுப்பு உரைநடை இயல் 9 JAYAKANTHAM
- சங்க இலக்கியத்தில் அறம் பத்தாம் வகுப்பு உரைநடை இயல...
- நிகழ்கலை பத்தாம் வகுப்பு உரைநடை இயல் 6 பகுதி 2 NIK...
- நிகழ்கலை பத்தாம் வகுப்பு உரைநடை இயல் 6 பகுதி 1 NIK...
- மொழிபெயர்ப்புக் கல்வி பத்தாம் வகுப்பு உரைநடை இயல் ...
- செயற்கை நுண்ணறிவு பத்தாம் வகுப்பு உரைநடை இயல் 4 SE...
- விருந்து போற்றுதும் பத்தாம் வகுப்பு உரைநடை இயல் 3 ...
- கேட்கிறதா என் குரல் பத்தாம் வகுப்பு உரைநடை இயல் 2 ...
- தமிழ்ச்சொல்வளம் இளங்குமரனார் பத்தாம் வகுப்பு உரைநட...
- தமிழ்ச் சொல் வளம் பத்தாம் வகுப்பு உரைநடை TAMIL CHO...
- கவிதைகளும் கவிஞர்களும் - வினாடிவினா சான்றிதழ்த் தே...
- பிறந்தநாள் பரிசு தந்த மாமாவுக்கு நன்றி மடல் ஆறாம் ...
- பிறந்தநாள் அழைப்பு மடல் ஆறாம் வகுப்பு கடிதம் 6TH T...
- தேசிய ஒருமைப்பாடு ஆறாம் வகுப்பு தமிழ்க்கட்டுரை THE...
- பத்தாம் வகுப்பு பா வகை பகுதி 4 PAA VAGAI 4
- பத்தாம் வகுப்பு பா வகை பகுதி 3 PAA VAGAI 3
- பத்தாம் வகுப்பு பா வகை பகுதி 2 PAA VAGAI 2
- பத்தாம் வகுப்பு பா வகை பகுதி 1 PAA VAGAI 1
- தேம்பாவணி பத்தாம் வகுப்பு தமிழ் THEMBAVANI
- சித்தாளு பத்தாம் வகுப்பு தமிழ் SITHAALU
- .காலக்கணிதம் பத்தாம் வகுப்பு தமிழ் KAALAKANITHAM
- ஞானம் பத்தாம் வகுப்பு தமிழ் GNANAM
- சிலப்பதிகாரம் பத்தாம் வகுப்பு தமிழ் SILAPPATHIKARAM
- மெய்க்கீர்த்தி பத்தாம் வகுப்பு தமிழ் MEYKEERTHI
- ஏர் புதிதா ? பத்தாம் வகுப்பு தமிழ் YER PUTHITHA ?
- கம்பராமாயணம் பத்தாம் வகுப்பு தமிழ் KAMBA RAMAYANAM
- கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம் பத்தாம் வகுப்ப...
- கம்பராமாயணம் நாட்டுப்படலம் பத்தாம் வகுப்பு தமிழ் K...
- கம்பராமாயணம் பால காண்டம் பத்தாம் வகுப்பு தமிழ் KAM...
- பூத்தொடுத்தல் பத்தாம் வகுப்பு தமிழ் POOTHODUTHAL
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பத்தாம் வகுப்பு MU...
- திருவிளையாடல் புராணம் பகுதி 3 பத்தாம் வகுப்பு தமிழ...
- திருவிளையாடல் புராணம் பகுதி 2 பத்தாம் வகுப்பு தமிழ...
- திருவிளையாடல் புராணம் பகுதி 1 பத்தாம் வகுப்பு தமிழ...
- நீதிவெண்பா பத்தாம் வகுப்பு தமிழ் NEETHI VENBA
- பரிபாடல் பத்தாம் வகுப்பு தமிழ் PARIPAADAL
- பெருமாள் திருமொழி பத்தாம் வகுப்பு தமிழ் PERUMAL TH...
- மலைபடுகடாம் பத்தாம் வகுப்பு தமிழ் MALAIPADUKADAAM ...
- மலைபடுகடாம் பத்தாம் வகுப்பு தமிழ் MALAIPADUKADAAM
- காசிக்காண்டம் பத்தாம் வகுப்பு தமிழ் KAASIKAANDAM
- முல்லைப்பாட்டு பத்தாம் வகுப்பு தமிழ் MULLAIPAATTU
- காற்றே வா பத்தாம் வகுப்பு தமிழ் KAATREY VAA SONG
- இரட்டுறமொழிதல் பத்தாம் வகுப்பு தமிழ் IRATTURAMOZHI...
- அன்னை மொழியே பத்தாம் வகுப்பு தமிழ் ANNAI MOLIYE SONG
- அன்னை மொழியே பத்தாம் வகுப்பு பாடல் ANNAI MOZHIYE SONG
-
▼
July
(179)