கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 12, 2020

நற்றிணை - NATRINAI

நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. 

இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். 

எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். 

நல் என்ற அடைமொழி பெற்றது. 

இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். 

இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது. 

இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. 

தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். 

நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம். 

நற்றிணையில் 7அடி முதல் 13 அடிகள் வரை பாடல் உள்ளன.

7 அடி பாடல்கள் - 1

8 அடி பாடல்கள் - 1

9 அடி பாடல்கள் - 106

10 அடி பாடல்கள் - 96

11 அடி பாடல்கள் - 110

12 அடி பாடல்கள் - 77

13 அடி பாடல்கள் - 8

234ஆவது பாடல் கிடைக்கவில்லை.

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர்.

குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். 

அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். 

மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. 

இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. 

திணை அடிப்படையில் பார்க்கும்போது 

குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130, 

பாலைப் பாடல்கள் 107, 

நெய்தல் படல்கள் 101, 

மருதப் பாடல்கள் 33, 

முல்லைப் பாடல்கள் 28 அமைந்துள்ளன.

நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். 

தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. 

மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. 

பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். 

மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.

தமிழ்த்துகள்

Blog Archive