கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 04, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் ஒரு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் pdf

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil slow learner one word work book pdf

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2024. புதன்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

04-12-2024. புதன் 

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல்: நட்பியல் ;

அதிகாரம் : புல்லறிவாண்மை ; 
குறள் எண் : 847

குறள் :

அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.

பொருள்:

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல்

சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்.

பழமொழி :

தலைவன் சொற்கேள், நன்னெறி தவறேல்.

Obey your superior, deviate not from the path of rectitude.

இரண்டொழுக்க பண்புகள்:

1) புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்.

2) பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :

* வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை,வேலையை விரும்பிச் செய்பவன் அரசன் ஓஷோ.

பொது அறிவு :

1. தமிழ்நாட்டில் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறும் இடம் எது?

நீலகிரி

2. பிரம்மபுத்திராவின் பெரும்பகுதி எங்கு பாய்கிறது?

திபெத்

English words & meanings :

Nervous

பதட்டமாக,

Peaceful

அமைதியான

வேளாண்மையும் வாழ்வும் :

பூச்சி மருந்துக்கான எதிர்ப்பைக் குறைப்பதற்கு, பூச்சிக் கொல்லிகளை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.

டிசம்பர் 04 - இந்தியக் கடற்படை தினம்

1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படை நடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படை நடவடிக்கை மலைப்பாம்பு.

இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன.

இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது .இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது.

டிசம்பர் 04 - ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள் இந்திர குமார் குஜ்ரால், பிறப்பு டிசம்பர் 4 1919 - இறப்பு நவம்பர் 30 2012. இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது.

தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.

நீதிக்கதை -மரப்பொறி

எலி சாதாரணமாக இருக்கும் பொழுது மரத்தாலான பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி, அதனை பிடிக்க வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக்கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என்ற பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப் பொருட்களை ஓட்டை போட்டது போல இந்த மரப்பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் தப்பிச் செல்லலாம் என்று நினைக்கவே நினைக்காது.

அப்படி யோசித்தால் ஐந்தே நிமிடத்தில் மரப்பொறியை விட்டு எலியால் வெளியில் வர இயலும். மரப்பொறியில் சிக்கிய எலியை 5 நாட்கள் வைத்திருந்தாலும் அது தன்னால் வெளிவர இயலாத ஏதோ ஒன்றில் அகப்பட்டது போல அங்கும் இங்கும் அலைபாயும். நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா? என்று ஏக்கத்தோடு பார்க்கும் . அதன் உயிர் பிழைக்க அதற்கே வழி தெரிந்தாலும் பதட்டத்தில் அதனுடைய மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரங்களில் இப்படித்தான் பல பிரச்சனைகளில் இருந்து வெளியே வர தெரிந்திருந்தாலும், பொறுமையும் முன்யோசனையும் இல்லாததால் தனது வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்கிறான்.

இன்றைய செய்திகள் 04.12.2024

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவுத்திறன் தேர்வுகள் இன்று நடைபெற உள்ளதையொட்டி சிறப்பு பார்வையாளர்களாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு.

* உயர் கல்வித்துறையில் புதுமைகளை நிகழ்த்தும் தமிழக அரசு: மாநில உயர் கல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற விளைவு அடிப்படையிலான கல்விப்பட்டறையை (Outcome Based Education Workshop Series) இன்று (டிசம்பர் 3) தொடங்கி வைத்த அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்.

கடந்த மூன்றாண்டுகளில் 6,22,373 பெண் தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளதாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.

சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் இ-வர்த்தகம் மூலம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனை.

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா e மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வரும் போட்டியில் நேற்று நடைபெற்ற 7-வது சுற்றும் டிரா ஆனது.

Today's Headlines 04.12.2024

The Secretary of the School Education Department has ordered the appointment of officers as special observers for the National Achievement Tests for 3rd, 6th and 9th grade students studying in government and government-aided schools today.

Tamil Nadu Government is bringing innovations in the higher education sector proudly says Minister kovi. Chezhiyan while inaugurate the Outcome Based Education Workshop Series organized by the State Higher Education Council today (December 3).

Minister Kayalvizhi Selvaraj said that 6,22,373 women entrepreneurs have emerged in the last three years.

Self-help group products sold for Rs. 24 lakhs through e-commerce.

Honda 'Activa e' electric scooter launched in India.

The 7th round of the World Chess Championship, which is being held in Singapore, between the reigning champion of China, Ding Liren, and the Indian player who won the Grand Master title, Kukesh, was drawn yesterday.

நல்ல யோசனை ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை


tamil short story kathai Good idea

தமிழ்த்துகள்

Blog Archive