கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 06, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-03-2025. வியாழன்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

06-03-2025. வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : சான்றாண்மை ; 

குறள் எண் : 983.

குறள் :

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

பொருள்:

அன்புடைமை. நாணம், பொதுநலம், இரக்கம், வாய்மை ஐந்தும் சான்றாண்மை என்ற கட்டடத்தின் தூண்களாகும்.

பழமொழி :

செயல்கள் தேவை; சொற்களல்ல.

Wanted deeds only, not words.

இரண்டொழுக்க பண்புகள்:

1) பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.

2) பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்

பொன்மொழி :

எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல, எவரும் எவருக்கும் மேலானவனும் அல்ல, மனிதர்கள் அனைவரும் சமம். தந்தை பெரியார்.

பொது அறிவு :

1. உலகின் முதல் கணினி வைரஸை உருவாக்கிய நாடு எது?

விடை: பாகிஸ்தான்.

2. இந்தியாவின் இளைய பிரதமர் யார்?

விடை: ராஜீவ் காந்தி

English words & meanings :

Railway station.

தொடர்வண்டி நிலையம்

Zoo.

விலங்குகள் பூங்கா

வேளாண்மையும் வாழ்வும் : விவசாய உற்பத்தியில் அதிகப்படியான நீர்,

கனமழை முதல் அதிகப்படியான நீர்ப்பாசனம் வரை, பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கும், அத்துடன் கட்டிடங்கள்/கட்டமைப்புகளை சேதப்படுத்தும்.

மார்ச் 06 வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின்

பிறந்தநாள்

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்'சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை என்ற பதக்கத்துடன் இலெனின் விருது என பல்வேறு விருதுகள் குவிந்தன.

நீதிக்கதை

நாளைய உணவு

சில வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள்.இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்" என்றது.

அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்" என்றது காட்டமாய். இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள் என நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.

சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.

'அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?' என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன.

இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்' என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.

இன்றைய செய்திகள்

06.03.2025

வரும் கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.

* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது.

இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார்.

* ICC சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.

Today's Headlines 06.03.2025

India's daily electricity demand is expected to increase to 22,000 megawatts this summer, a 10% rise from last year.

The Tamil Nadu government has allocated ₹265 crores as a short-term loan to transport corporations to provide pension benefits to retired transport employees.

India has seen a significant surge in visa applications, with over 67.5 lakh applications received in 2024 alone.

The United States has announced plans to impose reciprocal tax rates on several countries, including India, China, Brazil, Mexico, and Canada, starting from April 2.

ICC Champions Trophy: New Zealand, defeated South Africa by 50 runs, will play with India in the final.

திருக்குறள் 65 மக்கள்மெய்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 65 makkalmey... Explanation tamil and english

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

Wednesday, March 05, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு 2025 தஞ்சாவூர் மாவட்டம்


 tenth tamil slow learner material guide focused learner late bloomer mella karpor

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு 2025 தஞ்சாவூர் pdf

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil slow learner material pdf mlm guide 2025

திருக்குறள் 64 அமிழ்தினும்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 64 amizhthinum... Explanation tamil and english

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-03-2025. புதன்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

05-03-2025. புதன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம்: சான்றாண்மை ; 

குறள் எண் : 982.

குறள் :

குணநலம் சான்றோர் நலனே; பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

பொருள்:

சான்றோர்கள் சிறப்பு குணநலமே ; மற்ற சிறப்பு எவ்வகை நன்மையும் தராது.

பழமொழி :

சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது. 

A man is affected by his environment.

இரண்டொழுக்க பண்புகள்:

1) பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.

2) பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

· என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன், வேறு யாரும் இல்லை கோபம் தான் என்னைத் தோற்கடித்தது. - ஹிட்லர்.

பொது அறிவு :

1. பொட்டாஷ் படிகாரம் ஒரு

விடை: இரட்டை உப்புகள்

2. குளிர் தொழில்நுட்பம் மூலம் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?

விடை: 123 K (-150.15°C)

English words & meanings :

+ Temple.

கோவில்

+ Theater.

திரையரங்கம்

வேளாண்மையும் வாழ்வும்:

அதிகப்படியான நீர் தாவர வேர்கள் மற்றும் மண்ணில் நச்சு சேர்மங்கள் குவிவதற்கும் வழிவகுக்கும்.

நீதிக்கதை

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன. பண்ணையாரிடம் வந்த அவன், "ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான். என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம்" என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீடு திரும்பினான் அவன்.

தன் மனைவியிடம், "நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி" என்று வருத்தத்துடன் கூறினான். அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது. இதைப் பார்த்த அவன் மனைவி "நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்" என்று கணவனிடம் சொன்னாள்." பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்" என்றான் அவன். கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின. அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது. அதை அன்போடு எடுத்தான். அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.

இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" என்றாள் மனைவி. அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.

அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. "இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு" என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது. குருவி சொன்னபடியே விதையை நட்டான் அவன். மறுநாள் காலையில் அங்கே பெரிய பூசணிக் காய் காய்த்து இருந்தது .இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன். தோட்டத்தில் இருந்த பூசணிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான். என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசணிக் காய் ஆனது.

மகிழ்ச்சி அடைந்த அவன், "இது மந்திரப் பூசணிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை என்றான். அதன் பிறகு அவனும் மனைவியும், குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். அவர்களது உழைப்பால் நல்ல ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.

நீதி : பிறருக்கு நீங்கள் உதவ முன் வந்தால், கடவுள் உங்களுக்கு உதவ முன் வருவார்.

இன்றைய செய்திகள்

05.03.2025

* விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு எதிராக வழக்கு: நடவடிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவு.

ரயில்கள், ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் காவலர்கள் நியமனம், சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக ரயில்வே காவல் துறை திட்டம்.

* பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள் தான் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு: 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

*பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர்கள் முதலிடம்.

இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகளில் 20 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

ICC சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியை அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Today's Headlines 05.03.2025

Case filed against converting agricultural lands into residential plots: High Court orders action.

To ensure women's safety in trains and stations, Tamil Nadu Railway Police plans to deploy additional personnel and install CCTV cameras.

Supreme Court rules that visually impaired individuals are eligible to become judges.

China discovers 1 million tons of thorium, which can generate electricity for 60,000 years.

Indian chess players lead in the Braintree Masters International Chess Tournament after 5 rounds.

The World Para Athletics Grand Prix, to be held in India for the first time, will feature athletes from 20 countries.

In the semi finals of ICC Champions Trophy, Indian cricket team had a great victory against Australia and entered onto finals.

Tuesday, March 04, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு 2025 வினாத்தாள் sslc tamil III revision exam question


sslc tamil III revision exam question

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-03-2025.செவ்வாய்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

04-03-2025.செவ்வாய்.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : சான்றாண்மை ; 

குறள் எண் : 981.

குறள் :

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

பொருள்:

தம் கடமைகள் அறிந்து, குண நிறைவு கொண்டவர்க்கு நல்ல முயற்சிகள் எல்லாம் கடமைகள் என்பர்.

பழமொழி :

சுறுசுறுப்பு வெற்றி தரும்.

Briskness will bring success.

இரண்டொழுக்க பண்புகள்:

1) பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.

2) பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை சிற்பமாக்கும் என்று கல்லுக்கு தெரியாது. - ஐன்ஸ்டீன்.

பொது அறிவு :

1. மனிதனின் நுரையீரலில் எவ்வளவு காற்று பைகள் உள்ளன?

விடை: 300 மில்லியன்

2. மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் எவ்வளவு நீர் உள்ளது?

விடை: 85%

English words & meanings :

 Street

தெரு

Swimming pool

நீச்சல் குளம்

வேளாண்மையும் வாழ்வும்:

அதிகப்படியான நீர் தாவரங்களின் வேர்களுக்கு இடையே ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைத் தடுக்கிறது மற்றும் இயற்கையில் உள்ள பிற முக்கிய செயல்முறைகளைத் தடுக்கிறது

மார்ச் 04

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை ஒற்றுமையே வலிமை

ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சினை உண்டாயிற்று. கட்டை விரல், "நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை" என்று பெருமையுடன் கூறியது. அடுத்த விரல், "என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்கட்டி விரல் என்று பெருமை உண்டு" என்று கூறியது. நடுவிரலுக்கு மிகவும் கோபம், "எல்லோரையும் விட நானே உயரமானவன்" என்று இறுமாப்புடன் கூறியது. நான்காவது விரல் அமைதியாக, "உங்களில் எவருக்கும் இல்லாத பெருமை எனக்கு மட்டுமே உண்டு. தங்க மோதிரத்தையோ வைரமோதிரத்தையோ என்மீது போடுவதால், மோதிர விரல்" என்ற மதிப்பு எனக்கே உண்டு" என்று அமைதியாகக் கூறியது.

ஐந்தாவது விரலான சுண்டு விரல், "வணக்கம் என்று சொல்லி ஒருவரை வணங்கினாலும், அல்லது கடவுளை வணங்கினாலும், எப்போதும் நான்தான் முதலில் நிற்கிறேன். நீங்கள் நால்வரும் எனக்குப் பின்னே அல்லவா நிற்கிறீர்கள்?" என்று கூறியது. பிரச்சினை முடிவாகவில்லை. அப்பொழுது, ஒருவன், லட்டு லட்டு என்று கூறிக் கொண்டு வந்தான். எல்லா விரல்களும் ஒன்று சேர்ந்து அவனிடம் லட்டை வாங்கிக் கொண்டன.

அப்பொழுது கை, "ஒரு லட்டை பெறவே நீங்கள் ஐந்து பேரும் ஒன்று சேர வேண்டியுள்ளது. உங்களுக்குள் சண்டையிட்டு உங்கள் பலத்தை இழந்து விடாதீர்கள்"என்று கூறியது.

நீதி : ஒற்றுமையே பலம்

இன்றைய செய்திகள்

04.03.2025

3

தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் இனி கிளாம்பக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் வரும் 14-ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

* மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.

ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பில் ஐ.டி. ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 80 சதவீதம் பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் புளு கோஸ்ட் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.

* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.

சிலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இந்தியாவின் ரித்விக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines 04.03.2025

Buses coming from southern Tamil Nadu will now operate only up to Koyambedu, as announced by the Transport Department.

The Economic Survey Report will be presented for the first time on February 14, along with the budget, in the Tamil Nadu Legislative Assembly.

The CUET exam for undergraduate admissions in central universities will be held from May 8 to June 1.

A study by Hyderabad University found that 80% of IT employees suffer from fatty liver disease.

The US Blue Ghost lunar lander successfully landed on the moon.

Indian chess players Praggnanandhaa and Aravindh are performing well in the Braintree Masters International Chess Tournament.

India's Ritwik pair won the championship title in the Chile Open International Tennis Tournament.

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு 2025 வினாத்தாள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


10th tamil third revision exam question paper pdf free download 2025

திருக்குறள் 63 தம்பொருள்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 63 thamporul... Explanation tamil and english

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

Monday, March 03, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-03-2025. திங்கள்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

03-03-2025. திங்கள்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண் : 980.

குறள் :

அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

பொருள்:

பெருந்தன்மையுடையோர் பிறர் குற்றம் மறைத்து பேசுவர், குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு.

பழமொழி :

சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.

The spinning world makes everything rotate.

இரண்டொழுக்க பண்புகள்:

1) பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.

2) பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவுமே இல்லை.

பொது அறிவு :

1. போபாப் மரம் எத்தனை லிட்டர் தண்ணீர் சேமிக்கும்?

விடை: 1,20,000 லிட்டர்.

2. உலகின் முதல் 6G சாதனத்தை வெளியிட்ட நாடு எது?

விடை: ஜப்பான்

English words & meanings :

+ Restaurant.

உணவகம்

+ School.

பள்ளி

வேளாண்மையும் வாழ்வும்:

நீர் குறைவது மட்டும் அல்ல தவறான இடங்களில் அதிகப்படியான நீர் இருப்பதும் சுற்றுச்சூழல் அமைப்புகள், மக்கள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

மார்ச் 03 - உலகக் காட்டுயிர் நாள்

WORLD WILDLIFE DAY

03 MARCH

உலக வனவிலங்கு தினம்

அழிந்து வரும் வளயிலங்குகளை பாதுகாக்கவும். அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும். மார்ச் 3 உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது

உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் "காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்" (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருத்தரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.

நீதிக்கதை

ஒருநாள் காலையில் நாட்டின் ராஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது குதிரையில் சவாரி செய்தார். பொழுது சாய்ந்தது. இரவு நேரம் என்பதால் குதிரையை விட்டு இறங்கி அருகிலுள்ள ஆப்பிள் மரத்தடியில் உறங்க ஆரம்பித்தார். ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த மரத்திலிருந்த பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் ராஜாவிற்கு நாம் இருப்பது ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள்

தன் பசியைப் போக்க ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார். கீழே விழுந்த ஆப்பிள் பழத்தையும் கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு சாப்பிட்டார். அப்போதும் ராஜாவிற்கு பசி அதிகரிக்க மேலும் சில ஆப்பிள்களை ராஜா மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது பசியைப் போக்கினார். பூதம் ஏதேனும் இங்கு இரவில் வருமோ என்று பயந்தார். உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் காலையில் அரண்மனையை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டார்.

"எண்ணம் போல் வாழ்க்கை"என்பதுபோல் ராஜா உணவு வேண்டும் என்று நல்லதாக நேர்மறையாக நினைத்ததால் இந்த பிரபஞ்சம் பழத்தை தந்து உதவியது. பின்பு அவர் பூதத்தைப் பற்றி எதிர்மறை எண்ணம் கொண்டதால் காய்ச்சல் வந்தது.

நீதி:எண்ணம் போல் வாழ்க்கை நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

இன்றைய செய்திகள்

03.03.2025

*தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 - 3° செல்சியஸ் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

* உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்.

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்.

Today's Headlines 03.03.2025

The 12th grade general election begins today in Tamil Nadu. There are 8,21,057 students going to write the general election.

The maximum temperature in Tamil Nadu is likely to be 2 -3° C more in some places by Chennai Metrological Department

It is mandatory for those who born after October 1, 2023, to connect the birth certificate with the passport application.

The meeting between US President Trump and Ukrainian President Jelanxi ended in a heated argument. The US's attempt to solve the Ukraine issue ended in failure.

Kukesh advanced to 3rd place in the World Chess Ranking.

Dubai Open Tennis Tournament Greece player Sitciboss won the championship title.

திருக்குறள் 62 எழுபிறப்பும்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 62 elupirapum... Explanation tamil and english

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 

Friday, February 28, 2025

திருக்குறள் 61 பெறுமவற்றுள்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 61 perumavatrul... Explanation tamil and english

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

திருக்குறள் 60 மங்கலம்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 60 mangalam... Explanation tamil and english

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

திருக்குறள் 59 புகழ்புரிந்த... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 59 pukal purintha Explanation tamil and english

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-02-2025. வெள்ளி.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

28-02-2025. வெள்ளி.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண் : 979.

குறள் :

பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்:

தற்பெருமையற்றது பெருமையின் குணம், தற்பெருமையுடையது சிறுமையின் குணம்.

பழமொழி :

அதிகம் கேள், குறைவாகப் பேசு.

Hear more, but talk less

இரண்டொழுக்கப் பண்புகள் :

1) வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.

2) மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :

நீ நினைத்ததை அடைய நீ நினைத்துப் பார்த்ததை விட அதிகம் "உழைக்க" வேண்டும்.

பொது அறிவு :

1. பழ மரங்களிலேயே சுமார் 400 ஆண்டுகள் விளைச்சல் தரும் மரம் எது?

விடை : ஆரஞ்சு மரம்.

2. இந்தியாவில் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை: கேரளா

English words & meanings:

 Police station

காவல் நிலையம்

Post office

தபால் நிலையம்

பிப்ரவரி 28

தேசிய அறிவியல் நாள்

 National Science Day.

இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை -அக்பர்-பீர்பால் மனவேறுபாடு

அக்பருக்கும் பீர்பாலுக்கும் அடிக்கடி ஏற்படும் மனவேறுபாடு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார். "இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணை விட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார். "சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார்.

சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்! பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலை உடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார் பீர்பால். "இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர். இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பின்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார். செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர். "எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால். "என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்."மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக. "எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன். "தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள்.

அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால். அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்.. "மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும் கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"

அப்போது பீர்பால், "மன்னர் அவர்களே, என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.

இன்றைய செய்திகள் 28.02.2025

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

* 25 மருத்துவமனைகளில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

* கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு.

பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து போட்டி: தென் கொரியா வெற்றி.

Today's Headlines - 28.02.2025

The Medical Services Recruitment Board has announced that applications are invited for 425 vacant pharmacist positions in government hospitals.

Chief Minister Stalin has inaugurated de-addiction treatment and rehabilitation centers in 25 hospitals.

The Chennai Meteorological Centre has predicted heavy rain in 10 districts, including Kanyakumari and Tirunelveli, today.

The Central government has spent over ₹400 crore on court cases over the past 10 years, according to government data.

Hamas has announced its readiness for the next round of ceasefire talks.

South Korea wins the Pink Women's Cup football tournament.

Thursday, February 27, 2025

மேடை நடனம் ஒத்தக்கல்லு ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழா


school annual day stage dance othakallu

காமராசர் வாழ்வில் நகைச்சுவை ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை


tamil story In the life of Kamaraj

பாம்பும் முனிவரும் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story The snake and the sage


tamil short story The snake and the sage

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2025. வியாழன்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

27-02-2025. வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண் : 978.

குறள் :

பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.

குறள்:

பணிவுடனிருத்தல் பெருமையுடையோர் இயல்வு, சிறியோர் தம் பெருமை தாமே பாராட்டுவர்.

பழமொழி :

அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

It is not wise to talk more.

இரண்டொழுக்க பண்புகள் :

1) வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.

2) மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :

விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை!

விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை....

பொது அறிவு :

1. சீனர்கள் முதன் முதலில் எதன் மீது எழுத்துக்களைப் பொறித்தனர்?

விடை : எலும்புகள் மற்றும் ஆமை ஓடுகள்.

2. ஒரு நெருப்புக் கோழியின் முட்டை எத்தனை கோழி முட்டைகளுக்குச் சமம்?

விடை : 22

English words & meanings:

 Mosque.

பள்ளிவாசல்

Park.

பூங்கா

பிப்ரவரி 27 -

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்

அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரசு பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.

பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 4,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,00,000 (32 இலட்சம்) அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

நீதிக்கதை

சத்திரம்

ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.

அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார். "என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?" என்று அதட்டினார்.

"ஓஹோ... இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!" என்றார் பீர்பால். தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!" என்று கடிந்தார் மன்னர். "மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!" என்றார் பீர்பால்."ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!" என்றார் மன்னர்.

"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?" அரண்மனையில்தான்!" "உமது தந்தையார்?" "இதே அரண்மனையில்தான்!"" உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?" "இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!" "ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!" என்றார் பீர்பால். பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!

"தாங்கள் யார்?" என்று மரியாதையுடன் வினவினார் அரசர். "என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!' என்று பதில் சொன்னார் பீர்பால். "அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார் அரசர். அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்

இன்றைய செய்திகள்

27.02.2025

* மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக 'கோல்டு கார்ட்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* பெண்கள் புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்.

Today's Headlines- 27.02.2025

The Tamil Nadu Electricity Distribution Corporation has secured 48th place with a score of 11.90 in the rankings of power distribution companies released by the Ministry of Power.

Passenger ship services between Nagapattinam and Sri Lanka have been suspended for three days due to rough weather and strong winds in the Bay of Bengal.

A 5.1-magnitude earthquake struck off the coast of Odisha near Puri in the Bay of Bengal.

US President Donald Trump has announced plans to introduce a 'Golden Card' scheme for immigrants, which can be obtained by paying $5 million.

India won a thrilling match against the Netherlands in the Women's Pro Hockey League.

Archer achieved a remarkable feat in the international one-day cricket match, surpassing Anderson's record.

திருக்குறள் 58 பெற்றாற்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 58 petrar... Explanation tamil and english

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

Wednesday, February 26, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக மெல்லக் கற்போர் வினா விடை tenth tamil slow learner one mark


tenth tamil slow learner one mark

பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் காக்கையில்லா சீமையிலே school annual day stage dance kakaiyilla seemai


school annual day stage dance kakaiyilla seemai

தமிழோடு விளையாடு 18 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


 Play with Tamil Find the Tamil word Tamil game

பொறுமை ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story porumai kutti kathai patience


tamil short story porumai kutti kathai patience

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.25 புதன்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.25 புதன் 

திருக்குறள்: 


பால்: பொருட்பால்


அதிகாரம்: பெருமை 


குறள் எண்:977


 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின்.


பொருள்:

கல்வி, செல்வம், சிறப்புகள் சிறுயாரைச் சேருமாயின் தவறான

செயல்களையே செய்விக்கும்.


பழமொழி :

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்
Face the danger boldly than live in fear.

இரண்டொழுக்க பண்புகள் :   
* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.  
  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :
இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.
---பைபிள்---

பொது அறிவு : 
1. இரைப்பையில் சுரக்கப்படும் நொதியங்கள். _______, ___________ 
 விடை: பெப்சின், ரெனின்.       
2. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை எவ்வளவு? 
விடை: 230-280 கிராம் 
English words & meanings :

 Jail.    -        சிறைச்சாலை


Market.     -    சந்தை

வேளாண்மையும் வாழ்வும் : 
 இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நீதிக்கதை
 முதல் வழக்கில் வெற்றி!

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் 
தர்பாரில், வாயிற்காவலன் 
உள்ளே நுழைந்து,“பிரபு! 
ஒரு கிழவரும், இளைஞரும் 
நியாயம் கேட்டு 
வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!”
 என்றார் அக்பர்.

 உடனே, தர்பாரில் ஒரு 
கிழவரும், ஓர் இளைஞனும் 
உள்ளே நுழைந்து 
சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில்
 யாருக்கு என்ன குறை?” 
என்று கேட்டார் அக்பர்.


“பிரபு! என் பெயர் ரகுமான்” 
என்று தன்னை 
அறிமுகப்படுத்திக் 
கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்! 
மாணவர்களுக்கு சட்டத்தின் 
நுணுக்கங்களையும், வழக்கு 
விசாரணைகளைப் பற்றியும் 
கற்பிக்கிறேன்".


இதோ நிற்கிறானே மணி! 
இவன் என் மாணவனாக 
இருந்தவன்! இவன் மீது 
நான் குற்றம் சாட்ட 
வந்துள்ளேன்” என்றார். 
அந்த இளைஞன் செய்த 
குற்றம் குறித்து அக்பர் கேட்டார். 

“பிரபு! இவன் என்னிடம் 
மாணவனாக சேர விரும்பிய 
போது, நான் மாதம் மூன்று 
பொற்காசு வீதம் குரு 
தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க 
வேண்டும் என்றும் கூறினேன்.

ஆனால் இவன் தான் பரம 
ஏழை என்றும், தட்சிணை 
கொடுக்க இயலாது என்றும் 
கூறினான். படிப்பு முடிந்ததும் 
வழக்கறிஞனாகி முதல் 
வழக்கில் வெற்றி பெற்றவுடன், 
முப்பத்தாறு பொற்காசுகள் 
சேர்த்து தருவதாகவும் 
வாக்களித்தான். அதை 
நம்பி இவனுக்கு ஓராண்டு 
காலம் கற்பித்தேன்.

இவன் மிகவும் கெட்டிக்கார 
மாணவன் என்பதால் 
ஓராண்டிலேயே மிகச் 
சிறப்பாக சட்ட 
நுணுக்கங்களைக் கற்றுக் 
கொண்டு விட்டான். நானும் 
இவன் வழக்கறிஞனாகி, 
முதல் வழக்கிலேயே வெற்றி 
பெறுவான் என்றும், 
தட்சிணையை மொத்தமாகக் 
கொடுப்பான் என்றும் 
நம்பினேன்” என்று சொல்லி 
நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் 
ஏமாற்றுகிறானா?” என்று 
அக்பர் கேட்டார்.


“இல்லை பிரபு! இவன் திடீரென
 வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு 
விட்டான். அந்தத் தொழிலில் 
ஈடுபடப் போவதில்லையாம்!” 
என்றார். உடனே அக்பர் 
அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய 
உத்தேசத்தை நீ மாற்றிக்
 கொண்டாய்?” என்று கேட்டார்.


“பிரபு! நான் சட்டம் பயின்று 
முடித்ததும் வழக்கறிஞர் 
தொழிலில் ஈடுபடுவதாகத் தான் இருந்தேன். ஆனால்
 என் சித்தப்பா திடீரென 
இறந்து போனார். அவர் 
தன்னுடைய உயிலில் 
அவருடைய அனைத்து 
சொத்துகளுக்கும் என்னை 
வாரிசாக்கி விட்டார். இப்போது 
நான் லட்சாதிபதி. அதனால் 
எந்த வேலையும் செய்யத் 
தேவையில்லை,” என்றான்.


“அப்படியானால் இவருடைய
 தட்சிணை என்ன ஆவது?”
என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக் 
காப்பாற்றுவேன். எனக்கு 
என்று வழக்கறிஞனாக 
ஆக வேண்டும் என்று 
தோன்றுகிறதோ, அப்போது
தான் தட்சிணையும் தர முடியும்” 
என்றான்.


மணி கூறுவது சரியே 
என்று நினைத்த அக்பர். 
 இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். 
என்னைப் பொறுத்தவரை 
இந்த வழக்கில் மணியின்  பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் 
காப்பாற்றுவேன் என்று 
இந்த தர்பாரில் அவன் 
உறுதி அளித்துள்ளான்.


அவன் சொல்லை ஏற்றுக்
கொண்டு, அவனுக்கு என்று 
வழக்கறிஞராக வேண்டும் 
என்று தோன்றுகிறதோ, அன்று 
அந்தத் தொழிலில் ஈடுபட்டு 
குருவின் தட்சிணையைத் 
திருப்பித் தரலாம். அதுவரை 
குரு காத்திருக்க வேண்டும். 
இதுவே என் தீர்ப்பு!” என்றார் 
அக்பர். தர்பாரில் அனைவரும் 
இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர்.
 இதை எதிர்பார்க்காத கிழவர் 
ஏமாற்றத்தினாலும், 
வருத்தத்தினாலும் உடல் 
குறுகிப் போனார்.

ஆனால் பீர்பால் மட்டும் 
தீர்ப்பைப் பாராட்டாமல் 
மிகவும் மௌனமாக 
இருந்ததை கவனித்த அக்பர், 
இந்தத் தீர்ப்பை மறுஆய்வு 
செய்யுமாறு பீர்பாலிடம் 
கூறினார்.அதைக்கேட்டதுமே 
கிழவரின் முகம் மலர்ந்தது. 
மிகவும் புத்திசாலியான
 பீர்பால் சரியான தீர்ப்பு 
வழங்குவார் என்று அவர்
உறுதியாக  நம்பினார்.


பீர்பால் இளைஞனை 
நோக்கி,“நீ கொடுத்த வாக்கில்
 உறுதியாக இருக்கிறாய் 
அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்? 
கண்டிப்பாக அப்போது 
அதில் கிடைக்கும் 
வருமானத்திலிருந்து என் 
குருநாதருக்கு சேர வேண்டிய 
தட்சிணையைக் கட்டாயம் 
தந்து விடுவேன்” என்றான் 
இளைஞன்.


பிறகு கிழவரை நோக்கி, “மணியின் நிபந்தனையை 
நீங்கள் ஆரம்பத்திலேயே 
ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பால் 
“ஆம் ஐயா!” என்றார் கிழவர்.


“அப்படியானால் சட்டப்படி 
இளைஞனின் தரப்பில்தான் 
நியாயம் உள்ளது. அவன் 
வழக்கில் வெற்றி பெற்று 
தட்சிணை தரும் வரை நீங்கள் 
காத்திருக்க வேண்டியதுதான்”
என்றார் பீர்பால். பீர்பாலையும், 
அக்பரையும் வணங்கிவிட்டு 
அவர் தள்ளாடித் தள்ளாடி 
வெளியேற, இளைஞன் 
 வெற்றிப் பெருமிதத்துடன் 
வெளியேறினான்.


திடீரென மணியை அழைத்து, “மணி ! இதுதான் 
சக்கரவர்த்தியின் 
நீதிமன்றத்தில் உன்னுடைய 
முதல் வழக்கு! உன்னுடைய 
வழக்கை விசாரிக்க வேறு 
வழக்கறிஞரை நியமிக்காமல் 
நீயே உன் தரப்பு நியாயத்தை
வெகு அழகாக எடுத்துக் 
கூறினாய்” என்றார் பீர்பால்.
 மணி  மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.


பீர்பால் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய 
முதல் வழக்கில் நீயே 
வழக்கறிஞராக இருந்து 
வாதாடி அதில் வெற்றி 
பெற்று விட்டாய். இல்லையா?” 
என்று பீர்பால் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான் 
மணி  மகிழ்ச்சியுடன்.

“அப்படியானால் நீ 
வழக்கறிஞராக இருந்து 
வெற்றி பெற்ற முதல் வழக்கு 
இது! நீ வாக்களித்தபடியே, 
குருதட்சிணையை உன் 
குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.

ஒருகணம் திகைத்துப் 
போன அனைவரும், 
மறுகணமே கைதட்டி 
ஆர்ப்பரித்தனர். கிழவர் 
பீர்பாலுக்கு மனமார நன்றி
கூற, அக்பர் பீர்பாலை மிகுந்த 
மகிழ்ச்சியுடன் தழுவிக்
கொண்டார்.

இன்றைய செய்திகள்

26.02.2025

* மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.194.67 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


* பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


* இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


* உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. 193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.


 * ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று தொடக்கம். விதர்பா - கேரளா அணிகள் மோதல்.


Today's Headlines


- *Women's Self-Help Groups*: The Tamil Nadu government has announced that products made by women's self-help groups have been sold for ₹194.67 crore.


- *Chief Minister's Pharmacies*: Chief Minister M.K. Stalin has inaugurated 1,000 pharmacies across Tamil Nadu, providing quality medicines at affordable prices to the public.


- *Cancer Treatment*: According to the Indian Council of Medical Research, three out of five cancer patients in India die due to inadequate treatment.


- *UN Resolution*: India has abstained from voting on a UN resolution demanding Russia's withdrawal from Ukraine. 93 countries voted in favour, 18 against, and 65 abstained.


- *Ranji Trophy Finals*: The Ranji Trophy finals begin today, with Vidarbha facing Kerala.

திருக்குறள் 57 சிறைகாக்குங்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 57 sirai kakkum Explanation tamil and english

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

Tuesday, February 25, 2025

மேடை நடனம் அரசுப் பள்ளி ஆண்டு விழா ஆவுடையாபுரம் MASS MIXING DANCE STAGE PERFORMANCE avudaiyapuram annual day function


MASS MIXING DANCE STAGE  PERFORMANCE avudaiyapuram annual day function

மேடை நடனம் அரசுப் பள்ளி ஆண்டு விழா ஆவுடையாபுரம் ROCK MIXING DANCE STAGE PERFORMANCE avudaiyapuram school annual day function


ROCK MIXING DANCE STAGE PERFORMANCE avudaiyapuram school annual day function

திருக்குறள் 56 தற்காத்துத்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 56 tharkaathu... Explanation tamil and english

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

Monday, February 24, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 3 விருதுநகர் tenth tamil govt public exam 2025 model question paper


tenth tamil govt public exam 2025 model question paper 3 virudhunagar district

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 3 pdf விருதுநகர் மாவட்டம் tenth tamil govt public exam 2025 model question paper

 tenth tamil govt public exam 2025 model question paper 3 pdf virudhunagar district


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 24-02-2025. திங்கள்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

24-02-2025. திங்கள்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண்: 975.

குறள் :

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.

பொருள்:

பெருந்தன்மை உடையவர்,பிறர் ஆற்றுவியலா செயல்களை முறையாகச் செய்து முடிப்பர்.

பழமொழி :

> அகம்பாவம் அழிவைத் தரும்.

Pride goes before a fall.

இரண்டொழுக்க பண்புகள் :

1) வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.

2) மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :

வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும். - திரு. ஹென்றி டேவிட் தேரோ.

பொது அறிவு :

1. நறுமணப் பொருளாக பயன்படக்கூடிய பூ மொட்டு எது?

விடை: கிராம்பு.

2. மல்லிகைப்பூவுக்கு பெயர் பெற்ற ஊர் எது?

விடை: மதுரை

English words & meanings :

+ Farm

பண்ணை

+ Flyover

மேம்பாலம்

வேளாண்மையும் வாழ்வும் :

பனை மரம் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

பிப்ரவரி 24

ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்

✓ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs,

✓ பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011)

✓ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.

நீதிக்கதை

யானையின் அடக்கம்

யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது. அதற்கு அந்த யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: "நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்." என்றது.

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

இன்றைய செய்திகள் 24.02.2025

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

* உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: மனு பாக்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.

புரோ ஹாக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி.

Today's Headlines - 24.02.2025

The Tamil Nadu government has begun the counseling of doctors to select 2,642 doctors tobe appointed in Tamilnadu government hospitals.

The Chennai Meteorological Centre has announced that there is a possibility of rain in one or two places in Tamil Nadu from February 25 to 28.

The Ayushman Bharat Yojana is the world's largest government-run health insurance program, and 75 crore people have received its identity cards, according to External Affairs Minister S. Jaishankar.

Former US President Donald Trump has again alleged that the previous president Joe Biden's administration provided $18 million to aid Indian elections.

The Indian team, led by Manu Bhaker, has been announced for the World Cup shooting competition.

In the Pro Hockey League, India defeated Ireland to achieve their fourth victory.

தமிழோடு விளையாடு 17 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


Play with Tamil Find the Tamil word Tamil game

திருக்குறள் 55 தெய்வம்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 55 theivam... Explanation tamil and english

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

Sunday, February 23, 2025

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPUKOTTAI!

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBRATION fisher man dance

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE DANCE

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY dance

ARUPPUKOTTAI SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBRATION

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE DANCE

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBRATION ARUPPUKOTTAI amma song

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE PERFORMANCE 7th std

ARUPPUKOTTAI SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBRATION 8th std

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPUKOTTAI STAGE PERFORMANCE

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE PERFORMANCE

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBRATION STUDENTS DANCE 7th

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPUKOTTAI STAGE Ring Dance

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE PERFORMANCE 8TH மைம் mime

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE PERFORMANCE 6TH STANDARD

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPUKOTTAI ஏழாம் வகுப்பு

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPUKOTTAI

SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE PERFORMANCE 10TH

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைத்தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு


8th tamil 2025 


ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைத் தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைகள்


9th tamil 


எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் 2025

 8th Tamil Third mid term exam question Answer Key pdf Virudhunagar district 2025


பதிவிறக்கு/DOWNLOAD


ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் 2025

  9th tamil third mid term exan answer key pdf virudhunagart district


பதிவிறக்கு/DOWNLOAD


திருக்குறள் 54 பெண்ணிற்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 54.pennin... Explanation tamil and english

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

Saturday, February 22, 2025

பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் மயிலாடும் பாறையில school annual day stage dance mayiladum paraiyila


school annual day stage dance mayiladum paraiyila

ஆண்டு விழா நகைச்சுவைப் பேச்சு annual day standup comedy in stage govt school talented student


annual day standup comedy in stage govt school talented student

பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் ராதை மனதில் school annual day stage dance radhai manathil


school annual day stage dance radhai manathil

தமிழோடு விளையாடு 16 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


Play with Tamil Find the Tamil word Tamil game

பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 45 மெல்லக் கற்போர் கட்டுரை வினா விடைகள்


Tenth Tamil slow learner essay

பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 45 மெல்லக் கற்போர் கட்டுரை வினா விடைகள் pdf

 Tenth Tamil slow learners katturai question answer 8 marks simple material pdf question number 45 essay


பதிவிறக்கு/DOWNLOAD


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2025 விருதுநகர்


10th social science II revision question 

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2025 விருதுநகர் மாவட்டம் தமிழ், ஆங்கில வழி pdf

 

பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Social Science Question paper second revision exam 2025 virudhunagar district tamil medium and english medium pdf

திருக்குறள் 53 இல்லதென்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 53. illathen... Explanation tamil and english

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

Friday, February 21, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-02-2025. வெள்ளி.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

21-02-2025. வெள்ளி.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண் : 974.

குறள் :

ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

பொருள்:

மகளிர் தங்கள் மன உறுதியால் கற்பை காப்பது போல் ஒருவன் ஒழுக்கம் தவறாதிருப்பின் பெருமை உண்டு.

பழமொழி :

> தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.

If humble thou shalt prosper.

இரண்டொழுக்க பண்புகள்:

1) என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.

2) என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது. - அறிஞர் அண்ணா.

பொது அறிவு :

1. லட்சத்தீவின் மாநில மலர் எது?

விடை : நீலக்குறிஞ்சி.

2. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

விடை: செங்காந்தள் மலர்

English words & meanings:

+ Factory.

தொழிற்சாலை

Farm.

பண்ணை

வேளாண்மையும் வாழ்வும் :

பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

பிப்ரவரி 21 பன்னாட்டுத் தாய்மொழி நாள்

சர்வதேச தாய்மொழி தினம்

(International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) 1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின்மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" ("Mother tongues and books - including digital books and textbooks") தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

நீதிக்கதை -நரியை வென்ற கழுதை

ஒரு நாள் காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதை கவனித்த நரி ஒன்று கழுதையை அடித்து கொல்லும் நோக்கத்துடன் கழுதையின் மேல் பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்துவிட்டது கழுதை. ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது தந்திரம் செய்து தான் தப்பிக்க வேண்டும் என்று கழுதை தீர்மானித்தது.

ஓநாய் பாய்ந்து வரும் போது சற்று விலகிக் கொண்டு, "ஓநாயரே! உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம் மாத்திரம். நான் இன்று உனக்கு இரையாக போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உனக்கு இரையாக தயாராக தான் இருக்கிறேன். அதற்கு முன் நான் சொல்ல வேண்டிய விஷயத்தை தயவுசெய்து கேட்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது கழுதை.

"நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ அதை சீக்கிரம் சொல்" என்று கேட்டது ஓநாய் "ஓநாயரே! என் காலில் முள் ஒன்று குத்திவிட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் தாங்கள் என்னை சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் குத்தி விடும். அது உங்களுக்கு கடுமையான வேதனையை தருவதுடன்,உங்கள் உயிரையே பலி வாங்கி விடும். முதலில் என் காலில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு பின்னர் என்னை நீங்கள் சாப்பிடுவதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை" என்று கூறியது கழுதை.

ஓநாயும் ஒத்துக்கொண்டது கழுதை தன் பின்னங்கால்களை எடுத்து ஓநாயிடம் காண்பித்தது ஓநாயும் முள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கழுதை பின்னங்கால்களால் ஓநாயை பலமாக உதைத்தது.

ஓநாய் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.

நீதி :

எந்தவொரு சூழ்நிலையிலும் சிந்தித்து செயல்பட்டால் இறுதி வெற்றி நமக்கே.

இன்றைய செய்திகள்

21.02.2025

தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

*தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

விண்வெளித்துறையில தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மார்ச் 12-ம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக் ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 8 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்புகின்றனர். அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரோ ஹாக்கி லீக்: நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி.

தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்.

Today's Headlines 21.02.2025

Tamil Nadu's budget is set to be approved on February 25, with Chief Minister M.K. Stalin leading the cabinet meeting at the Secretariat in Chennai. This meeting is crucial as it will finalize the state's budget, outlining its financial plans and allocations for the upcoming year.

In other news, Chennai's temperature is expected to rise by 4 degrees Celsius above normal until February 23, according to the Chennai Meteorological Centre.

ISRO has successfully developed the world's largest vertical rocket stage, weighing 10 tons, marking a significant milestone in India's space program.

The Space X Dragon spacecraft is scheduled to launch on March 12 and will dock at the International Space Station. Astronauts Sunita Williams and Butch Wilmore will return to Earth on March 19 after an eight-month mission.

In sports, India defeated Germany in the Pro Hockey League, while Tamil Nadu won six gold medals in the National Para Athletics Championship.

திருக்குறள் 52 மனைமாட்சி... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 52 manaimatchi... Explanation tamil and english

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

Thursday, February 20, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மன்றத் தேர்வு தேனி 2025 மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள்


Tenth Tamil mandra thervu theni

பத்தாம் வகுப்பு தமிழ் தேனி தமிழகத் தமிழாசிரியர் கழக மன்றத் தேர்வு வினாத்தாள் pdf 2025

 பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil public model exam question paper 2025 Theni district 

tamilaka tamilasiriyar kazhaga mandra thervu vinathal sslc

ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2025

 7th Tamil Third mid term exam question Answer Key Virudhunagar district 2025


ஏழாம் வகுப்பு                          தமிழ்

மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2025

விருதுநகர் மாவட்டம்              தமிழ்த்துகள்

விடைக்குறிப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. ஆ ஓடையெல்லாம்

2. ஈ தாமிரபரணி

3. அ முதுமை

4. ஆ பாரதிதாசன்  

5. அ பிறப்பால்

 

 

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

 

6.       1.பச்சையாறு           2.மணிமுத்தாறு        3.சிற்றாறு

4.காரையாறு           5.சேர்வலாறு           6.கடனாநதி

தமிழ்த்துகள்

7.       1.பொய்கையாழ்வார் பூமியை அகல் விளக்காகவும்

2.பூதத்தாழ்வார் அன்பை அகல் விளக்காகவும் உருவகப்படுத்துகின்றனர்.

தமிழ்த்துகள்

8. 1.பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

2.அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

தமிழ்த்துகள்

9. 1.உவமை வேறு உவமைக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.

2.இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னும் அமையும்.

எடுத்துக்காட்டு - தமிழ்த் தேன்.

தமிழ்த்துகள்

10.      தெளிந்த நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

11.    1.ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.

2.நடவு நட்ட வயலில் மண் குளிருமாறு மடைவழியே நீர் பாய்ச்சினர்.

3.நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.

4.பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் விளைந்தன.

5.அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் தந்தனர்.

6.அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.

7.கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.

8.மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

தமிழ்த்துகள்

12.      1.உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.

2.ஒப்புரவு என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

IV. மனப்பாடப்பகுதி.                                                                                    5

13.

விருந்தோம்பல்

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முன்றிலோ இல்.               - முன்றுறை அரையனார்  

தமிழ்த்துகள்

14. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.    

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

V. எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                            2 X 2 = 4

 

தமிழ்த்துகள்

15. அ. வேளாண்மை.

ஆ. குறிக்கோள்.

தமிழ்த்துகள்

16. அ.கன்னியாகுமரி –கன்னி, குமரி, கனி, கரி, மகன், குகன்.

ஆ.செங்கல்பட்டு –செங்கல், பட்டு, கல், பல், பகல், படு.தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

17. அ. எங்கு.

ஆ. யார்.தமிழ்த்துகள்

 

VI. விடையளி                                                                                1 X 6 = 6

18 அ. ஒற்றுமையே உயர்வு

அல்லது

ஆ. திருநெல்வேலிக் கவிஞர்கள்

 

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive