கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, January 31, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 2 விருதுநகர்


10th tamil public exam model question paper 2

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 2 pdf விருதுநகர் மாவட்டம் tenth tamil govt public exam 2025 model question

  பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil govt public exam 2025 model question paper 2 pdf virudhunagar district

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-01-2025. வெள்ளி.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

31-01-2025. வெள்ளி.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம்: குடிமை ;

குறள் எண் : 960.

குறள் :

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு

பொருள்:

புகழ் போன்ற நன்மை வேண்டின், தீயது செய்ய அஞ்ச வேண்டும். குலப்பெருமை வேண்டின், எவர்க்கும் பணிந்து செல்ல வேண்டும்.

பழமொழி :

சொல்லில் வல்லானை வெல்வது அரிது.

➤ It is difficult to overcome the eloquent.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

2) எனது பெற்றோரும் ஆசிரியர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

பணிவு என்ற பண்பு இல்லாதவன் வேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே . நபிகள் நாயகம் .

பொது அறிவு :

1. ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை இடும்?

விடை : 228 முட்டைகள்.

2. அணிலின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்?

விடை : 7 ஆண்டுகள்

English words & meanings:

+ Jungle.

காடு

+ Land.

நிலம்

வேளாண்மையும் வாழ்வும் :

நிலையான நீர் மேலாண்மையானது, மக்கள், சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும் அதே வேளையில், நீரின் நன்மையான பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது.

நீதிக்கதை

ஆமை

சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றை கண்டான்.அதனை மெதுவாக தொட்டவுடன் ஆமை தனது தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது. சிறுவன் என்னென்னவோ செய்து பார்த்தும் ஆமை தனது தலையையும், கால்களையும் வெளியில் நீட்டவே இல்லை.

அதை பார்த்த சிறுவன் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ஆமையை நெருங்கினான். அப்பொழுது சிறுவனுடைய மாமா, "தம்பி நீ என்னதான் தொந்தரவு செய்தாலும் ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே நீட்டவே நீட்டாது" என்று கூறினார்.

சிறுவன், "ஆமையை பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. அதனை எவ்வாறு வெளியில் கொண்டு வருவது என்று கூறுங்கள்" என்று கேட்டான். உடனே மாமா, " தம்பி ஆமையை மெதுவாக எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்று கதகதப்பான ஒரு இடத்தில் வை. எந்த தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் இருந்தால், ஆமை தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்ல தொடங்கும்"என்று கூறினார்.

சிறுவனும் அதே போல் செய்ய ஆமையும் ஓட்டை விட்டு வெளியே வந்து ஊர்ந்ததை பார்த்து சிறுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஆச்சரியம் அடைந்த சிறுவன் இது எப்படி என்று தனது மாமாவிடம் கேட்டான். அதற்கு அவனுடைய மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் இப்படித்தான்" என்றாராம்.

மேலும்,"உன்னை சுற்றி இருப்பவர்களை மாற்ற விரும்பினால், நீ உன்னுடைய இன்முகத்தை அவர்களிடம் காட்ட வேண்டும். உன் கனிவான இரக்கம் கொண்ட இதயத்தால் மட்டுமே மற்றவர்களை மாற்ற இயலும்" என்றும் கூறினார்.

இன்றைய செய்திகள்

31.01.2025

தென் அமெரிக்காவில் உள்ள 'சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலையில் இருந்து ஆடைகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்.

ரூ.16,300 கோடி மதிப்பிலான முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்.

ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி.

Today's Headlines 31.01.2025

For the country' Surinam' which is in South America Army Uniform has been manufactured and sent from Avadi Army Uniform manufacturing unit.

Weather forecast: Thoothukudi, Nellai and Kumari there is a chance of heavy rain.

Target to launch 100 rockets over the next 5 years: Information by ISRO chief V Narayanan.

The central government approves the scheme for main minerals worth of Rs 16,300 crore.

Hockey India League: Tamil Nadu Dragons qualified for the semifinals.

திருக்குறள் 31 சிறப்புஈனும்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 31 sirappu eenum... Explanation tamil and english

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Thursday, January 30, 2025

வகுப்பு 10 சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 ஆங்கில வழி


Tenth Social science slow learners EM guide

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 ஆங்கில வழி pdf

   பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Social Science slow learners guide pdf 2025 chengalpattu district English medium material

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2025. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-01-2025. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : குடிமை; 

குறள் எண் : 959.

குறள் :

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் ; காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்:

நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.

பழமொழி :

> தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.

Defeat the defeat before the defeat defeats you.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

2) எனது பெற்றோரும் ஆசிரியர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வாழ்க்கை அவரவர் வாழ்வதற்கு மட்டும் என்று கருதக்கூடாது.

அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

தந்தை பெரியார்.

பொது அறிவு :

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் .

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

English words & meanings :

Hill

மலை

Island

தீவு

வேளாண்மையும் வாழ்வும் :

நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

ஜனவரி 30 - மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்களின் நினைவுநாள்

மோகன்தாசு கரம்சந்த் காந்தி - Mohandas Karamchand

Gandhi,

பிறப்பு அக்டோபர் 2, 1869 - இறப்பு ஜனவரி 30, 1948.

ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நீதிக்கதை

தலைமை அமைச்சர்

ஒரு அரசன் தன் முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை தலைமை அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார். அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார். தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர். மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை.

இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.

நீதி : முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.01.2025

தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைகின்றன.

சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோ 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.

ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.

Today's Headlines 30.01.2025

The Tamil Nadu government has permitted a new mini-bus project in Tamil Nadu. Accordingly, minibuses can be operated in expanded areas in Chennai. Also, minibus fares have been raised.

Chennai Metro made a historical achievement...for the first time in the world, they are building 5 rails in a single pillar.

The High Court has ordered an interim injunction to the state for excluding the physically challenged people from applying for the cooking assistant job in schools.

ISRO 100th Rocket GSLV F-15- successfully launched with NVS-02 satellite.

ISL Callball Tournament: Jamshedpur won the Punjab team.

ICC Test ranking: Indian player Varun Emperor Progressed to 5th place

திருக்குறள் 30 அந்தணர்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 30 anthanar... Explanation tamil and english

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

Wednesday, January 29, 2025

வகுப்பு 10 சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 தமிழ் வழி


Tenth Social slow learners TM guide

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 தமிழ் வழி pdf

  பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Social Science slow learners guide pdf 2025 chengalpattu district tamil medium material

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-01-2025. புதன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

29-01-2025. புதன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : குடிமை; 

குறள் எண் : 958.

குறள் :

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்:

குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின், அவன் குலப் பிறப்பைப்

பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.

பழமொழி :

►சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.

Learning the future by looking at things past.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

2) எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

+ கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். சுபாஷ் சந்திரபோஸ்.

பொது அறிவு :

1. முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது?

விடை : உருகுவே

2. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

விடை : உதடு

English words & meanings :

Field.

வயல்

Forest.

காடு

வேளாண்மையும் வாழ்வும் :

நீர் பற்றாக்குறை தீர நீர் வளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் முறையான நீர் மேலாண்மை, முக்கியமாக அனைத்து பயன்பாடுகளுக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

நீதிக்கதை -அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது. ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை.

வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர்.உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது. யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குபின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

இன்றைய செய்திகள்

29.01.2025

* பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ராக்கெட்டை செலுத்த தயாராக இருக்கிறது. இது மேப் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் NavIC-ன் 2வது தலைமுறை செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும், முக்கியத்துவமான பணியை நாளை மேற்கொள்ள உள்ளது.

இந்திய அயலகப் பணி அலுவலர்கள் ஏழு பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்து கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் எனப் பல்வேறு பெருமைக்குரிய சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

ஊட்டி: பாரம்பரிய படுகர் இன மக்களின் வண்ணக் குடை ஊர்வலத்துடன் களைகட்டிய ஈஸ்வரன் கோவில் திருவிழா. 600 படிக்கட்டுகள் நடந்து பக்தர்கள் திருவிழா கொண்டாடினர்.

நம் நாட்டின் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, வின்ஃபாஸ்ட் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கார் தொழிற்சாலையை தூத்துக்குடியில் நிர்மாணிக்க வருகிறது.

* மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.சதம் விளாசி வரலாறு படைத்த கொங்கடி த்ரிஷா.

Today's Headlines 29.01.2025

The Tamil Nadu government has announced that the law providing strict punishment for crimes against women will come into effect from January 25.

ISRO is ready to launch its 100th rocket from Sriharikota in Andhra Pradesh. It will carry out the important mission of launching NavIC's 2nd generation satellite, which will provide services including maps, tomorrow.

A seven-member team of Indian Foreign Service officers will visit Tamil Nadu and visit various landmarks including archaeological sites and archaeological sites.

Ooty: The traditional Padukar people's colorful umbrella procession during the Easwaran temple festival. Devotees celebrated the festival by walking 600 steps.

To meet the demand for electric vehicles in our country, Winfast is building a state-of-the-art car factory in Thoothukudi.

India beat Scotland by 150 runs in Women's T20 World Cup. Trisha creates history with century

வாய்மையே வெல்லும் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Truth will prevail


tamil short story Truth will prevail

திருக்குறள் 29 குணமென்னும்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 29 kunamennum Explanation tamil and english

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

Tuesday, January 28, 2025

தமிழோடு விளையாடு 11 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


Play with Tamil Find the Tamil word Tamil game

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-01-2025. செவ்வாய்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

28-01-2025.செவ்வாய்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம்: குடிமை; 

குறள் எண் : 957.

குறள் :

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண மறுப்போல் உயர்ந்து.

பொருள்:

விண்நிலவு களங்கம் போல், உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்.

பழமொழி :

செய்வன திருந்தச் செய்.

Do well what you have to do.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

2) எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

* வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும்.- அரிஸ்டாட்டில்.

பொது அறிவு :

1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?

விடை: நெருஞ்சிப் பழம்.

2. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் __

விடை: அனிச்சம், குவளை

English words & meanings :

+ Dam.

அணை

+ Desert.

பாலைவனம்

வேளாண்மையும் வாழ்வும் :

பல நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் உணவு தேவையை அதிகப் படுத்தி உள்ளது. விளைவு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்க வேண்டும்: அதற்கு நீர் தேவையும் அதிகரிக்கும்.

ஜனவரி 28

லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்.

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். லாலா லஜபத் ராய் "பஞ்சாப் தேசிய வங்கி " மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி " ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

நீதிக்கதை

-கிணற்றைத்தானே விற்றேன்

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.  அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான். விவசாயிக்குக் கோபம் வந்தது."எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான். விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான். நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

இன்றைய செய்திகள் 28.01.2025

தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு.

'திறன்மிகு வகுப்பறை திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக் கல்வித்துறை சாதனை.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால் உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் ஹாக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்.

பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்.

Today's Headlines 28.01.2025

Court order to remove party flag poles from public places and roads in Tamil Nadu within 12 weeks.

Under the 'Efficient Classroom' program, 22,931 smart boards were set up in 7 months, a great achievement in record time in the school education department.

Roadside barriers made of bamboo cuttings are being erected on national highways to avoid casualties during accidents.

The General Civil Code came into force in the state of Uttarakhand from yesterday.

President Donald Trump ordered to lift the embargo on the supply of explosives to Israel by Former US President Joe Biden.

Women's Hockey India League: Odisha Warriors are champions.

Big Bash Final: Hobart Hurricanes beat Sydney Thunder to become champions.

வள்ளுவரை எண்ணிப் பார்த்தேன் தமிழ்க் கவிதை திருக்குறள் I thought of Valluvar Tamil poetry thirukkural


 I thought of Valluvar Tamil poetry thirukkural

திருக்குறள் 28 நிறைமொழி... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 28 niraimoli Explanation tamil and english

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 

Monday, January 27, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2025 வினாத்தாள்


sslc II revision exam question paper

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2025 வினாத்தாள் pdf Tenth Tamil Second Revision Exam Question

பதிவிறக்கு/DOWNLOAD


Theni Tenth Tamil Second Revision Exam Question Paper 2025 Pdf

வகுப்பு 10 அறிவியல் ஆங்கில வழி மெல்லக் கற்போர் கையேடு 2025 Tenth Science slow learners EM guide



Tenth Science slow learners EM guide

வகுப்பு 10 அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 தமிழ் வழி Tenth Science slow learners TM guide


Tenth Science slow learners TM guide

பத்தாம் வகுப்பு அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 ஆங்கில வழி pdf Tenth Science slow learners guide

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Science slow learners guide pdf 2025 chengalpattu district english medium material

பத்தாம் வகுப்பு அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 தமிழ் வழி pdf Tenth Science slow learners guide

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Science slow learners guide pdf 2025 chengalpattu district tamil medium material

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025. திங்கள்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

27-01-2025. திங்கள்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : குடிமை ; 

குறள் எண் : 956.

குறள் :

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாக அற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார்.

பொருள்:

நற்குடி ஒழுக்கத்திற்கேற்ப வாழ்வோம் என்போர், பகை அல்லது வஞ்சனையின் பொருட்டு இழி செயல் செய்யார்.

பழமொழி :

சூரியன் எழு முன் காரியம் ஆடு.

Form your plans before sunrise.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

2) எனது பெற்றோரும் ஆசிரியர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

பிரியமான வேலை எதுவும் கஷ்டமானதே அல்ல. - ஹென்றி போர்ட்.

பொது அறிவு :

1. இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

பஞ்சாப்.

2. குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனைநாட்கள் ஆகும்?

21 நாட்கள்.

English words & meanings:

Cave.

குகை

Coast.

கடற்கரை

ஜனவரி 27

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள்

(International Holocaust Remembrance Day)

நீதிக்கதை விருப்பப் பட்டியல்

பேரரசன் நெப்போலியன் பெருங்களிப்பில் இருந்தார். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவரது நான்கு தளபதிகளையும் அழைத்து "உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினார் .முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! எனக்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான். "உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றார் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான். மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் "தனக்கு திராட்சை தோட்டம்வேண்டும்" என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னார் கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்றுகேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றார்.

அவன் வெளியே வந்தவுடன், தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள். அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறார். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவர் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல்படுத்த அவருக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவரது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறார். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ்வேலை செய்பவர்களுக்குததான் இந்த வேலைகளைக்கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம் தானே" என்றார்கள். யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவர் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவர் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில் "இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

நீதி: அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

இன்றைய செய்திகள்

27.01.2025

சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines 27.01.2025

23 people from the Tamil Nadu Police Department, including 2 IGs, have been awarded the President's Medal for their outstanding service.

Tamil Nadu has emerged as the second-largest economic state in India, says Tamil Nadu Chief Minister M.K. Stalin.

Indonesian President meets Prime Minister Modi: Various agreements including maritime security signed.

The US government has decided to suspend funding for global aid programs.

Australian Open Tennis: Italy's Gianni Cener wins the championship.

திருக்குறள் 27 சுவைஒளி.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 27 suvaioli Explanation tamil and english

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

Sunday, January 26, 2025

தேன்சிட்டு சனவரி மாத இதழ் 2 வினாடி வினா வினாவிடை then chittu January 16-31 paper quiz questions & answers 2025


then chittu January 16-31 paper quiz questions & answers 2025

தேன்சிட்டு 2025 ஜனவரி இதழ் 2 வினாடி வினா வினா விடை pdf then chittu january 16-31 paper quiz questions and answers

 2025 then chittu january 16-31 paper quiz questions and answers 

பதிவிறக்கு/DOWNLOAD

ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் தமிழ்ப் பேச்சு கட்டுரை Sri Ramakrishna's Domestic Disciples Tamil Speech


Sri Ramakrishna's Domestic Disciples Tamil Speech

ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf Sri Ramakrishna's Domestic Disciples Tamil Speech Essay

 Tamil Speech katurai sri ramakrishna's asst

பதிவிறக்கு/DOWNLOAD


Sri Ramakrishna's Domestic Disciples Tamil Speech Essay

திருக்குறள் 26 செயற்கரிய.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 26 seyarkariya Explanation tamil and english

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

Saturday, January 25, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-01-2025. சனிக்கிழமை

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

25-01-2025. சனிக்கிழமை 

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : குடிமை; 

குறள் எண் : 955.

குறள் :

வழங்குவது உள்விழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.

பொருள்:

கொடுப்பதற்கு செல்வம் வற்றிய காலத்தும் நற்குடியில் பிறந்த பழங்குடி மக்கள் கொடைத்தன்மையை விடார்.

பழமொழி :

> சுமப்பவனுக்குத் தெரியும் பாரம்.

The bearer knows the burden.

இரண்டொழுக்க பண்புகள்:

1) உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே, எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.

2) விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

* கல்வியின் வேர்களோ கசப்பானவை, ஆனால் கனியோ இனிப்பானது. அரிஸ்டாட்டில்.

பொது அறிவு:

1. பறவை தீவு என அழைக்கப்படுவது எது?

விடை: நியூசிலாந்து.

2. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது?

விடை: மீன்

English words & meanings :

Air

காற்று

+ Bay

விரிகுடா

ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்

NATIONAL VOTERS DAY

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

நீதிக்கதை

மகிழ்ச்சியான பணி

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர். குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான்.
குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக்கொண்டு கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சொள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப்படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்.." என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான். எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும் தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.

அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் பதில் கூறினார்கள். "உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய  வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார். "எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள். "அப்படியானால், உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறைவு செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியின்மையும் மகிழ்ச்சியும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை" என்று முடித்தார்.   

இன்றைய செய்திகள் 25.01.2025

குடியரசு தின விழா: சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்றும் நீட்டிக்கப்பட உள்ளது.

*இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது. மத்திய தேர்தல் ஆணையம் தகவல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஹாக்கி இந்தியா லீக்: ஐதராபாத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர் ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines - 25.01.2025

Republic Day: Drones banned in Chennai for 2 days.

For the convenience of the spectators coming to watch the India-England cricket match, the metro train service in Chennai will also be extended today.

The number of voters in India is nearing 100 crores. Central Election Commission Information.

Russian President Vladimir Putin is ready to talk to US President Donald Trump on the phone, the country's government has said.

Hockey India League: Tamil Nadu Dragons beat Hyderabad.

Australian Open Tennis: Italian Janic Ciner advances to final.

பத்தாம் வகுப்பு கணக்கு மெல்லக் கற்போர் கையேடு 2025 ஆங்கில வழி Tenth Maths slow learners guide english medium


Tenth Maths slow learners guide english medium chengai

பத்தாம் வகுப்பு கணக்கு மெல்லக் கற்போர் கையேடு 2025 தமிழ் வழி Tenth Maths slow learners guide chengai


Tenth Maths slow learners guide chengai

Tenth Maths slow learners guide pdf 2025 chengalpattu district tamil medium material

பத்தாம் வகுப்பு கணக்கு மெல்லக் கற்போர் கையேடு 2025 ஆங்கில வழி pdf Tenth Maths slow learners guide

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Maths slow learners guide pdf 2025 chengalpattu district english medium material

பத்தாம் வகுப்பு கணக்கு மெல்லக் கற்போர் கையேடு 2025 தமிழ் வழி pdf Tenth Maths slow learners guide

பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Maths slow learners guide pdf 2025 chengalpattu district tamil medium material

திருக்குறள் 25 ஐந்தவித்தான்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 25 ainthavithan Explanation tamil and english

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

Friday, January 24, 2025

திருக்குறளின் சிறப்புகள் தமிழ்ப்பேச்சு, கட்டுரை Specialties of Thirukkural Tamil Speech, Essay Competition


Specialties of Thirukkural Tamil Speech, Essay Competition 

Thirukkuralin Sirappukal pechu potti


PDF LINK

உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தமிழ்ப் பேச்சு, கட்டுரை World Drug Awareness Tamil Speech, Essay


World Drug Awareness Tamil Speech, Essay

Ulaga Pothai Porul Vilipunarvu


Pdf Link

திருக்குறளின் சிறப்புகள் தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf Specialties of Thirukkural Tamil Speech, Essay Competition

 பதிவிறக்கு/DOWNLOAD


Specialties of Thirukkural Tamil Speech, Essay Competition 

Thirukkuralin Sirappukal pechu potti

உலக போதைப் பொருள் விழிப்புணர்வு தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf World Drug Awareness Tamil Speech, Essay

 பதிவிறக்கு/DOWNLOAD


World Drug Awareness Tamil Speech, Essay

Ulaga Pothai Porul Vilipunarvu

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.01.2025 வெள்ளி

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.01.2025 வெள்ளி 

திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம் :குடிமை 

குறள் எண்:954


 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

 குன்றுவ செய்தல் இலர்.


பொருள்:

கோடி கோடி பொருளைப் பெற்றாலும் நற்குடியில் பிறந்தவர் இழிவான சிறுசெயல்களை செய்யார்.


பழமொழி :

சிறு வயதில் கல்வி, சிலையில் எழுத்து. 
  Learning acquired in youth , is an inscription on stone.

இரண்டொழுக்க பண்புகள் :   
*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    
*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :
என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்; என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும் நான் வெற்றியடைய-- நெப்போலியன்

பொது அறிவு : 
1. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?
 விடை:  அரேபியா.       
  2. எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? 
விடை:  பிளாட்டினம் 

English words & meanings :

 Voice.     -    குரல்

 Whistle.      -    சீட்டி

வேளாண்மையும் வாழ்வும் : 
வேளாண் துறைக்கும் தொழில் மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான நீர்வள ஆதாரங்களுக்கான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.  

ஜனவரி 24

தேசிய பெண் குழந்தை தினம்

தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

நீதிக்கதை
 வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டு இருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்கண்டான். மரத்தின் மேல் சரசரவென்றுஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப்பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லைஅவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான்."ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.உன் மூளை வேலை செய்யவில்லை. நான்கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

அவனும் அவர் செய்த வித்தியாசமான உதவியை நினைத்து, ஆச்சரியப்பட்டான்.

இன்றைய செய்திகள்

24.01.2025

* மயிலாடும்பாறை அகழ்வாய்வில் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு என்பது 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்ட ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்


* பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அறிவிப்பு.


* பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.


* தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது.


* உலகப் பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம்: ஏஐ சீர்திருத்தங்களுக்கு நாடுகளின் தலைவர்கள் அழைப்பு.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: லட்சயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Chief Minister Stalin released a research report that found that the use of iron in Tamil Nadu dates back 4,200 years in the Mayiladumbarai excavations


* Considering the importance of the biodiversity heritage site and the commitment of the Central Government under the leadership of Prime Minister Modi to protect traditional rights, the Union Ministry of Mines announced the cancellation of the tungsten mining auction.


* Strict punishment for sexual offences: Governor Ravi approves the amendment bill.


* The Union Cabinet meeting yesterday approved the continuation of the National Health Scheme for another 5 years and an increase in the minimum support price for jute.


* World Economic Forum Annual Meeting: Leaders call for AI reforms.


* Australian Open Tennis Tournament: Aryna Sabalenka advances to the final.


* Indonesia Masters Badminton Tournament: Lakshya Sen wins and advances to the next round.

குடியரசு நாள் தமிழ்ப் பேச்சு கட்டுரை குடியரசு தினம் சிறப்புரை Republic Day Tamil Speech Essay


Republic Day Tamil Speech Essay 

இந்தியக் குடியரசு நாள் தமிழ்ப் பேச்சு, கட்டுரை குடியரசு தினம் pdf REPUBLIC DAY 2025 TAMIL SPEECH AND ESSAY

 பதிவிறக்கு/DOWNLOAD


REPUBLIC DAY 2025 TAMIL SPEECH AND ESSAY IN PDF 

திருக்குறள் 24 உரனென்னும்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 24 uranennum Explanation tamil and english

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

Thursday, January 23, 2025

தமிழோடு விளையாடு 10 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


Play with Tamil Find the Tamil word Tamil game

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-01-2025. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

23-01-2025. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம்: குடிமை; 

குறள் எண் : 953

குறள் :

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்:

முகமலர்ச்சி, கொடைத்தன்மை, இனியசொல், பிறரை இகழாமை, இந்நான்கும் நல்குடியின் இயல்புகள்.

பழமொழி :

►சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.

All that are little are not inferiors.

இரண்டொழுக்க பண்புகள்:

1) உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.

2) விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படும்.

நபிகள் நாயகம்.

பொது அறிவு :

1. Vermiculture என்பது 

விடை: மண்புழு வளர்த்தல்.

2. தேநீரில் அடங்கியுள்ள கரிம அமிலம் எது?

விடை : டானிக் அமிலம்

English words & meanings :

+ Poet.

கவிஞர்

+ Singer.

பாடகர்

வேளாண்மையும் வாழ்வும் :

வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக் கொண்டுள்ளான்.

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தது சனவரி 23, 1897- இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்! என்பதே அவ்வறிக்கை ஆகும்.

நீதிக்கதை - வல்லவர் யார்?

தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. "நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?" என்று எறும்பிடம் கேட்டது. எறும்பு "பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே" என்று ஊர்ந்து கொண்டே சொன்னது. "அப்படியென்ன முக்கியமான கடமை?" என்று பூரான் கேட்டது.

எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல் "மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது" என்று கூறிச் சென்று விட்டது. பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. "எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது! உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்" என்று கேட்டது. அதற்கு எறும்பு "வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்" என்று பணிவாகக் கேட்டது. பூரான் "தப்பித்து ஓடப் பார்க்காதே!" என்று கேலி செய்தது.

அதற்கு எறும்பு மிக அமைதியுடன்" பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய் ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சைஎல்லாம் வேண்டாம்" என்று திரும்பவும் கூறியது. பூரானோ "அப்படி என்ன சாகசத்தை நீ செய்து விடப் போகிறாய். சாதூரியமாகப் பேச மட்டும் கற்று வைத்திருக்கிறாய்" என்று கூறியது.

எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணீரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து "உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?" என்று கேட்டது.

பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு என்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது. அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

இன்றைய செய்திகள்

23.01.2025

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 22- முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் வாயிலாக பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல் திருப்பியனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு.

ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னை - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines - 23.01.2025

A rare event where 6 planets line up in the sky at the same time can be seen with the naked eye. Special arrangements have been made at the Birla Planetarium in Chennai from January 22 to 25 for this.

Dinesh Ponraj Oliver, Head of the Registration Department, has advised the sub-registrars not to return the documents received for registration online without proper reason.

Air services affected due to heavy fog in Delhi.

If Russian President Putin does not come for talks, economic sanctions on Russia - US President Trump takes action.

Australian Open Tennis Series: Polish player Ika Swiatek advances to the semi-finals.

ISL. Football Series: Chennai Mohun Bagan match 'draw'.

திருக்குறள் 23 இருமை... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 23 irumai Explanation tamil and english

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

Wednesday, January 22, 2025

வகுப்பு 10 தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2025 விடைக்குறிப்பு விருதுநகர் Tenth tamil first revision exam answer key virudhunagar district


 Tenth tamil first revision exam 2025 answer key virudhunagar district





பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2025 விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


 Tenth tamil first revision exam 2025 answer key virudhunagr district

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மெல்லக்கற்போர் கையேடு Tenth English slow learners material chengalpat guide


Tenth English slow learners material chengalpat guide 

Tenth English slow learners materia பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மெல்லக்கற்போர் கையேடு pdf செங்கல்பட்டு மாவட்டம் 2025

 Tenth English slow learners material pdf chengalpattu district


பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2025 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 Tenth tamil first revision exam 2025 answer key virudhunagr district

பத்தாம் வகுப்பு      தமிழ்

முதல் திருப்புதல் தேர்வு சனவரி 2025

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஈ.சருகும் சண்டும்                                                          1

2. அ.கடல் நீர் ஆவியாகி மேகமாதல்                                     1

3. இ.காஞ்சித்திணை                                                          1

4. ஆ.மலைபடுகடாம்                                                          1

5. இ.கல்வி                                                                      1

6. ஆ.சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்      1

7. ஈ.இலா                                                                        1        தமிழ்த்துகள்

8. இ.உருவகம்                                                                 1

9. அ.8                                                                             1

10. ஆ.புறநானூறு                                                               1

11. ஆ.மோனை, எதுகை                                                     1

12. இ.வழுவின்றி - வழித்திறம்                                            1

13. ஈ.இளங்கோவடிகள்                                                       1

14. அ.சிலப்பதிகாரம்                                                           1

15. இ.குற்றம்                                                                     1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      அ. "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்றவர் யார்?                                                                    1

ஆ. கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?                                1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      1.அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது.

2.இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

3.உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

4.மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது.                                                  2

தமிழ்த்துகள்

18.   1.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று இல்லை. 

2.விருந்தோம்பலுக்கு மனம் மட்டும் போதும்.

3.தம்மிடம் உள்ளது கொண்டு அகம் மகிழ்ந்து அளித்தலே சிறந்த விருந்தோம்பலாகும்.   2

தமிழ்த்துகள்

19.      1.மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி அவரை நேசிக்கின்றார்.

2.அத்துடன் அம்மருத்துவர் நோயை குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

3.இங்கு மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்துகிறது.         2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

20.     1.ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. 

2.அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.                 2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.                                                                       2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     இன்னிசை அளபெடை                                            .                             1

ஆ.     செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்தாக அளபெடுப்பது.                                                                             1

தமிழ்த்துகள்

23. அ. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.                 1

ஆ. அழியாத செல்வமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.                              1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

24. ஒலித்து - ஒலி + த் + த் + உ

ஒலி -  பகுதி

த் -  சந்தி

த் -  இறந்தகால இடைநிலை

  -  வினையெச்ச விகுதி                                                                             2

தமிழ்த்துகள்

25. வெட்சித்திணை, கரந்தைத்திணை

வஞ்சித்திணை, காஞ்சித்திணை

நொச்சித்திணை, உழிஞைத்திணை                                                                  2

தமிழ்த்துகள்

26. அ. மலையைச் சுற்றி மாலை நேரத்தில் நடந்தேன்.                                          1

ஆ.     தான் என்ற எண்ணம் நீங்கி தாம் என்ற எண்ணம் வர வேண்டும்.                  1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

27. 1.ஆரல்வாய்மொழிக்குச் “செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.

2.ஆனால் செல்வதன் உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.                      1

தமிழ்த்துகள்

28. அ. சூறாவளி                                                                                           1

ஆ. நம்பிக்கை                                                                                               1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்

அறத்தில் வணிக நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மை.

இன்றைக்கும் தேவையே –

1.இப்பிறப்பில் அறம் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனைப் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று புறநானூற்றில் முடமோசியார் கூறுகிறார்.

2.கைம்மாறு கருதிச் செய்வது அறமாகாது.

3.அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு, மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.                                                                                                        3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     1.        நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

2.       தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.

3.       மாங்கன்று தளிர்விட்டது.

4.       வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

5.       பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.                                       3

தமிழ்த்துகள்

31. அ. மதுரை இளநாகனார்                                                                             1

ஆ. வளி மிகின் வலி இல்லை                                                                           1

இ. வடகிழக்குப் பருவகாலங்களில் தாழ்வு மண்டலமாய்த் தவழ்ந்து                          1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. 1.முதல் மழை விழுந்ததும், மேல்மண் பதம் ஆகி விட்டது, அதிகாலை வெள்ளி முளைத்துவிட்டது; விடியற்காலை ஆகி விட்டது, நண்பா, விரைந்து காளைகளை ஓட்டிச் செல்.

2.ஏரைத் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி, காட்டை உழுவோம் .

3.ஏர் புதிதல்ல, ஏறும் நுகத்தடி கண்டது; காடும் புதிதல்ல; கரையும் பிடித்தது தான்; கை புதிதல்ல; கார்மழையும் புதிதல்ல; நாள் புதிது; நட்சத்திரம் புதிது; ஊக்கம் புதிது ; வலிமை புதிது.

4.மாட்டைத் தூண்டி எழுப்பி, கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு, மழை பொழியும், நிலமும் சிலிர்த்துப் பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும்.

5.எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையே இல்லை கிழக்கு வெளுக்குது; பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில் நல்ல வேளையில் கொழுவை நாட்டுவோம்.      3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

33. 1.எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்!

2.சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்!

3.மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்!

4.மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

5.அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!

6.அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.

7.உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள், என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. திருவிளையாடற்புராணம்

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.

                                                     - பரஞ்சோதி முனிவர்.                                     3

அல்லது

ஆ. தேம்பாவணி

நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.             - வீரமாமுனிவர்.                                   3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. நிறைத்திருந்தது                         நிறைந்திருந்தது

வாழைத்தோப்பில்                        வாழைத்தோட்டத்தில்

குட்டியுடன் நின்றிருந்த மாடு         கன்று

இலச்சுமி கூப்பிடுகிறாள்               பசு கத்துகிறது

இதோ சென்றுவிட்டேன்              இதோ செல்கிறேன்

துள்ளிய குட்டியை                       துள்ளிய கன்றை

என்னடா விளையாட வேண்டுமா   என்ன

அவனை அவிழ்த்துவிட்டேன்       அதனை

நீயும் இவனும் விளையாடுங்கள்     இதுவும்

நீரைக் குடித்தாள்                        குடித்தது                                                       3

தமிழ்த்துகள்

36. உவமை அணி

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி.

உவமேயம் - தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது.

உவமை - மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது.

உவமஉருபு - அற்று                                                                                       3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

37. சீர்                    அசை                    வாய்பாடு

நாள்/தொறும்           - நேர் நிரை             - கூவிளம்

நா/டி                      - நேர் நேர்               - தேமா

முறை/செய்/யா       - நிரை நேர் நேர்    - புளிமாங்காய்

மன்/னவன்             - நேர் நிரை             - கூவிளம்

நாள்/தொறும்           - நேர் நிரை             - கூவிளம்

நா/டு                      - நேர் நேர்               - தேமா

கெடும்                     - நிரை                   - மலர்

இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது.                         3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது.

நிமிர்ந்த மாஅல் போல

விரிச்சி

நற்சொல் கேட்டல்

முது பெண்டிர் ஆற்றுப்படுத்தல்.    

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

தமிழ்த்துகள்

ஆ. 1.தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

2.உழவர் ஒருவர் உழவுத் தொழிலுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, கூடை, கடப்பாரை முதலிய கருவிகளைத் தயார் நிலையில் வைப்பார்.

3.ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் இருக்கும், அகல உழுவதைவிட ஆழ உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் நடுவார், பராமரிப்பார், அதிக விளைச்சல் காண்பார்.

4.இது பல்வேறு தொழில்களுக்கும் நம் செயல்களுக்கும் பொருந்தும்.

5.மனவலிமை, குடிகாத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

6.இவ்வைந்தும் பெற்றவர் ஒரு சிறந்த குடும்பத்தலைவராக வாழ முடியும்.       5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

39.அ அல்லது

முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர்                                                     ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல்முகவரி                                         ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                       5       

தமிழ்த்துகள்

42. அ. பழமையான நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்.

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     1.பள்ளியில் பயின்றதை மறந்த பிறகு மீதமுள்ளதே கல்வி – ஆல்பட் ஐன்ஸ்டீன்

2.நாளை தான் ஒவ்வொரு வாரத்தின் சுறுசுறுப்பான நாள். – ஸ்பானியப் பழமொழி

3.நம் வாழ்வின் இருண்ட காலத்தில்தான் நாம் ஒளியைக் காண ஒருமுகமாகக் கவனம் செலுத்த வேண்டும். – அரிஸ்டாடில்  

4.வெற்றி முடிவும் அல்ல, தோல்வி அழிவும் அல்ல, தொடர்ந்து நம்பிக்கையுடன் செயலாற்றுவதே முக்கியமான ஒன்று. – வின்ஸ்டன் சர்ச்சில்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை'                  8

அல்லது                           தமிழ்த்துகள்

. தமிழ்ச்சொல் வளம்                                   

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. புயலிலே ஒரு தோணி                                                                            8

அல்லது                           தமிழ்த்துகள்

. மகளிர்நாள் விழா அறிக்கை

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. கல்பனா சாவ்லா                                                                                  8

அல்லது                           தமிழ்த்துகள்

. தொடக்கவிழா வாழ்த்துரை      பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive