கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 30, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2025. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-01-2025. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : குடிமை; 

குறள் எண் : 959.

குறள் :

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் ; காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்:

நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.

பழமொழி :

> தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.

Defeat the defeat before the defeat defeats you.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

2) எனது பெற்றோரும் ஆசிரியர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வாழ்க்கை அவரவர் வாழ்வதற்கு மட்டும் என்று கருதக்கூடாது.

அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

தந்தை பெரியார்.

பொது அறிவு :

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் .

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

English words & meanings :

Hill

மலை

Island

தீவு

வேளாண்மையும் வாழ்வும் :

நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

ஜனவரி 30 - மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்களின் நினைவுநாள்

மோகன்தாசு கரம்சந்த் காந்தி - Mohandas Karamchand

Gandhi,

பிறப்பு அக்டோபர் 2, 1869 - இறப்பு ஜனவரி 30, 1948.

ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நீதிக்கதை

தலைமை அமைச்சர்

ஒரு அரசன் தன் முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை தலைமை அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார். அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார். தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர். மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை.

இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.

நீதி : முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.01.2025

தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைகின்றன.

சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோ 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.

ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.

Today's Headlines 30.01.2025

The Tamil Nadu government has permitted a new mini-bus project in Tamil Nadu. Accordingly, minibuses can be operated in expanded areas in Chennai. Also, minibus fares have been raised.

Chennai Metro made a historical achievement...for the first time in the world, they are building 5 rails in a single pillar.

The High Court has ordered an interim injunction to the state for excluding the physically challenged people from applying for the cooking assistant job in schools.

ISRO 100th Rocket GSLV F-15- successfully launched with NVS-02 satellite.

ISL Callball Tournament: Jamshedpur won the Punjab team.

ICC Test ranking: Indian player Varun Emperor Progressed to 5th place

தமிழ்த்துகள்

Blog Archive