கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 22, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2025 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 Tenth tamil first revision exam 2025 answer key virudhunagr district

பத்தாம் வகுப்பு      தமிழ்

முதல் திருப்புதல் தேர்வு சனவரி 2025

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஈ.சருகும் சண்டும்                                                          1

2. அ.கடல் நீர் ஆவியாகி மேகமாதல்                                     1

3. இ.காஞ்சித்திணை                                                          1

4. ஆ.மலைபடுகடாம்                                                          1

5. இ.கல்வி                                                                      1

6. ஆ.சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்      1

7. ஈ.இலா                                                                        1        தமிழ்த்துகள்

8. இ.உருவகம்                                                                 1

9. அ.8                                                                             1

10. ஆ.புறநானூறு                                                               1

11. ஆ.மோனை, எதுகை                                                     1

12. இ.வழுவின்றி - வழித்திறம்                                            1

13. ஈ.இளங்கோவடிகள்                                                       1

14. அ.சிலப்பதிகாரம்                                                           1

15. இ.குற்றம்                                                                     1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      அ. "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்றவர் யார்?                                                                    1

ஆ. கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?                                1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      1.அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது.

2.இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

3.உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

4.மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது.                                                  2

தமிழ்த்துகள்

18.   1.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று இல்லை. 

2.விருந்தோம்பலுக்கு மனம் மட்டும் போதும்.

3.தம்மிடம் உள்ளது கொண்டு அகம் மகிழ்ந்து அளித்தலே சிறந்த விருந்தோம்பலாகும்.   2

தமிழ்த்துகள்

19.      1.மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி அவரை நேசிக்கின்றார்.

2.அத்துடன் அம்மருத்துவர் நோயை குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

3.இங்கு மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்துகிறது.         2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

20.     1.ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. 

2.அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.                 2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.                                                                       2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     இன்னிசை அளபெடை                                            .                             1

ஆ.     செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்தாக அளபெடுப்பது.                                                                             1

தமிழ்த்துகள்

23. அ. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.                 1

ஆ. அழியாத செல்வமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.                              1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

24. ஒலித்து - ஒலி + த் + த் + உ

ஒலி -  பகுதி

த் -  சந்தி

த் -  இறந்தகால இடைநிலை

  -  வினையெச்ச விகுதி                                                                             2

தமிழ்த்துகள்

25. வெட்சித்திணை, கரந்தைத்திணை

வஞ்சித்திணை, காஞ்சித்திணை

நொச்சித்திணை, உழிஞைத்திணை                                                                  2

தமிழ்த்துகள்

26. அ. மலையைச் சுற்றி மாலை நேரத்தில் நடந்தேன்.                                          1

ஆ.     தான் என்ற எண்ணம் நீங்கி தாம் என்ற எண்ணம் வர வேண்டும்.                  1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

27. 1.ஆரல்வாய்மொழிக்குச் “செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.

2.ஆனால் செல்வதன் உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.                      1

தமிழ்த்துகள்

28. அ. சூறாவளி                                                                                           1

ஆ. நம்பிக்கை                                                                                               1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்

அறத்தில் வணிக நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மை.

இன்றைக்கும் தேவையே –

1.இப்பிறப்பில் அறம் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனைப் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று புறநானூற்றில் முடமோசியார் கூறுகிறார்.

2.கைம்மாறு கருதிச் செய்வது அறமாகாது.

3.அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு, மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.                                                                                                        3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     1.        நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

2.       தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.

3.       மாங்கன்று தளிர்விட்டது.

4.       வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

5.       பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.                                       3

தமிழ்த்துகள்

31. அ. மதுரை இளநாகனார்                                                                             1

ஆ. வளி மிகின் வலி இல்லை                                                                           1

இ. வடகிழக்குப் பருவகாலங்களில் தாழ்வு மண்டலமாய்த் தவழ்ந்து                          1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. 1.முதல் மழை விழுந்ததும், மேல்மண் பதம் ஆகி விட்டது, அதிகாலை வெள்ளி முளைத்துவிட்டது; விடியற்காலை ஆகி விட்டது, நண்பா, விரைந்து காளைகளை ஓட்டிச் செல்.

2.ஏரைத் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி, காட்டை உழுவோம் .

3.ஏர் புதிதல்ல, ஏறும் நுகத்தடி கண்டது; காடும் புதிதல்ல; கரையும் பிடித்தது தான்; கை புதிதல்ல; கார்மழையும் புதிதல்ல; நாள் புதிது; நட்சத்திரம் புதிது; ஊக்கம் புதிது ; வலிமை புதிது.

4.மாட்டைத் தூண்டி எழுப்பி, கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு, மழை பொழியும், நிலமும் சிலிர்த்துப் பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும்.

5.எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையே இல்லை கிழக்கு வெளுக்குது; பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில் நல்ல வேளையில் கொழுவை நாட்டுவோம்.      3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

33. 1.எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்!

2.சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்!

3.மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்!

4.மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

5.அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!

6.அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.

7.உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள், என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. திருவிளையாடற்புராணம்

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.

                                                     - பரஞ்சோதி முனிவர்.                                     3

அல்லது

ஆ. தேம்பாவணி

நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.             - வீரமாமுனிவர்.                                   3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. நிறைத்திருந்தது                         நிறைந்திருந்தது

வாழைத்தோப்பில்                        வாழைத்தோட்டத்தில்

குட்டியுடன் நின்றிருந்த மாடு         கன்று

இலச்சுமி கூப்பிடுகிறாள்               பசு கத்துகிறது

இதோ சென்றுவிட்டேன்              இதோ செல்கிறேன்

துள்ளிய குட்டியை                       துள்ளிய கன்றை

என்னடா விளையாட வேண்டுமா   என்ன

அவனை அவிழ்த்துவிட்டேன்       அதனை

நீயும் இவனும் விளையாடுங்கள்     இதுவும்

நீரைக் குடித்தாள்                        குடித்தது                                                       3

தமிழ்த்துகள்

36. உவமை அணி

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி.

உவமேயம் - தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது.

உவமை - மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது.

உவமஉருபு - அற்று                                                                                       3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

37. சீர்                    அசை                    வாய்பாடு

நாள்/தொறும்           - நேர் நிரை             - கூவிளம்

நா/டி                      - நேர் நேர்               - தேமா

முறை/செய்/யா       - நிரை நேர் நேர்    - புளிமாங்காய்

மன்/னவன்             - நேர் நிரை             - கூவிளம்

நாள்/தொறும்           - நேர் நிரை             - கூவிளம்

நா/டு                      - நேர் நேர்               - தேமா

கெடும்                     - நிரை                   - மலர்

இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது.                         3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது.

நிமிர்ந்த மாஅல் போல

விரிச்சி

நற்சொல் கேட்டல்

முது பெண்டிர் ஆற்றுப்படுத்தல்.    

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

தமிழ்த்துகள்

ஆ. 1.தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

2.உழவர் ஒருவர் உழவுத் தொழிலுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, கூடை, கடப்பாரை முதலிய கருவிகளைத் தயார் நிலையில் வைப்பார்.

3.ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் இருக்கும், அகல உழுவதைவிட ஆழ உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் நடுவார், பராமரிப்பார், அதிக விளைச்சல் காண்பார்.

4.இது பல்வேறு தொழில்களுக்கும் நம் செயல்களுக்கும் பொருந்தும்.

5.மனவலிமை, குடிகாத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

6.இவ்வைந்தும் பெற்றவர் ஒரு சிறந்த குடும்பத்தலைவராக வாழ முடியும்.       5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

39.அ அல்லது

முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர்                                                     ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல்முகவரி                                         ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                       5       

தமிழ்த்துகள்

42. அ. பழமையான நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்.

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     1.பள்ளியில் பயின்றதை மறந்த பிறகு மீதமுள்ளதே கல்வி – ஆல்பட் ஐன்ஸ்டீன்

2.நாளை தான் ஒவ்வொரு வாரத்தின் சுறுசுறுப்பான நாள். – ஸ்பானியப் பழமொழி

3.நம் வாழ்வின் இருண்ட காலத்தில்தான் நாம் ஒளியைக் காண ஒருமுகமாகக் கவனம் செலுத்த வேண்டும். – அரிஸ்டாடில்  

4.வெற்றி முடிவும் அல்ல, தோல்வி அழிவும் அல்ல, தொடர்ந்து நம்பிக்கையுடன் செயலாற்றுவதே முக்கியமான ஒன்று. – வின்ஸ்டன் சர்ச்சில்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை'                  8

அல்லது                           தமிழ்த்துகள்

. தமிழ்ச்சொல் வளம்                                   

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. புயலிலே ஒரு தோணி                                                                            8

அல்லது                           தமிழ்த்துகள்

. மகளிர்நாள் விழா அறிக்கை

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. கல்பனா சாவ்லா                                                                                  8

அல்லது                           தமிழ்த்துகள்

. தொடக்கவிழா வாழ்த்துரை      பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive