8th tamil. half yearly exam answer key virudhunagar district 2025
எட்டாம்
வகுப்பு தமிழ்
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2025
விடைக் குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10x1=10 தமிழ்த்துகள்
1. ஆ.செயப்பாட்டுவினை
1
2. அ.என்றாய்ந்து 1
3. ஈ.மேய்ந்தது 1
4. ஈ.நிறை 1
5. ஆ.கல்லாதவர்
1
6. இ. நல்வாழ்வுக்காக 1
7. இ.வானம்+அளந்தது 1 தமிழ்த்துகள்
8. இ.தலை 1
9. இ. பனையோலைகள் 1
10. இ.வாரி 1
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5x1=5 தமிழ்த்துகள்
11. அறிவியல் 1
12. சின்னாளபட்டி 1
13. வீரமாமுனிவர் 1
14. ஆழி 1
15. முகில் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்துக. 5x1=5 தமிழ்த்துகள்
16. தன் வினை 1
17. பிற வினை 1
18. நாவின்
முதல், அண்ணத்தின் அடி 1
19. நாவின்
இடை, அண்ணத்தின் இடை 1
20. நாவின் நுனி, அண்ணத்தின் நுனி 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
21. உழவர்கள் போரினை அடித்து
நெல்லினைக் கொள்ளும் காலத்தில் ஆரவார ஒலி எழுப்புவர். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. புல்லாங்குழல். முழவு.
2
23. பண்பு - சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
அன்பு - உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். 2
24. கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும்
கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு. 2
25. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த
சங்கப் புலவர்களால் தமிழ் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க. 4x2=8
26.
ஒவ்வொரு எழுத்து
வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறித்தது.
பின் ஒவ்வொரு
வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.
இவ்வாறு ஓர்
ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர். 2
27. தினமும்
45 நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்,
15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி,
7 மணிநேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர்
அருந்துதல். 2
28. இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
29. கிலுகிலுப்பை, பொம்மைகள்.
பொருள்களை வைத்துக்கொள்ள
உதவும் சிறிய கொட்டான்.
பெரிய கூடை, சுளகு, விசிறி.
தொப்பி, ஓலைப்பாய். 2
30. பண்டைய சேர
நாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின்
பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது என்பர்.
சேலம், கோவைப் பகுதிகள்
கொங்கு நாடு என்று பெயர் பெற்றன. 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க. 2x2=4
31. ஏற்றினான்
என்பது பிறவினை.
இதில் எந்த எழுவாயைச் சேர்த்தாலும், ஏற்றுதல் என்ற
வினையை எழுவாய் பிறருக்குச் செய்வதாகவே இருக்கும்.
எனவே இது பிறவினைத் தொடராகும். 2
32. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்கள்
முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்.
எ.கா - மலர்விழி எழுதினாள்.
கண்ணன் பாடுகிறான்.
மாடு மேயும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது
பிறிதுமொழிதல் அணி எனப்படும். 2
வினாக்களுக்கு விடை அளிக்க 3x4=12
34. திருக்கேதாரத்தில் பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும்
போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து
ஒலிக்கும்.
கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர் நிலைகள்
வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.
நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும்.
இவற்றால் இடையறாது எழும் 'கிண்' என்னும் ஒலியானது இசையாக முழங்கும். 4
அல்லது
எக்காலத்தும் நிலைபெற்று
வாழும் தமிழ் மொழி.
ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்
மொழி.
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப்
பரவச் செய்து புகழ்கொண்ட தமிழ் மொழி.
எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க. 4
35. தமிழ் மொழியில்
அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித்
தாய்மொழிக்கு ஆக்கந் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்
கொள்கிறேன்.
கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப் பெறுங் காலமே தமிழ்த்தாய்
மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும். 4
அல்லது
கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு 'வஞ்சி மாநகரம்' என்னும் பெயரும் உண்டு.
கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளார்.
நெல், சோளம் கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.
கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. 4
36. சொற்பொருள் பின்வருநிலை அணி
ஒரு செய்யுளில் ஒரே
சொல் மீண்டும் மீண்டும் வந்து, ஒரே பொருளைத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.
எ.கா –
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
விளக்கம்
இக்குறளில் சொல் என்னும்
சொல் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
தெரிநிலை வினைமுற்று செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.
எ.கா - எழுதினாள்.
செய்பவர் – மாணவி, கருவி – தாளும் எழுதுகோலும்,
நிலம் – பள்ளி, செயல் – எழுதுதல்,
காலம் – இறந்தகாலம், செய்பொருள் – கட்டுரை. 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x5=10
37. கைவினைப்
பொருள்கள் அனைத்தும் இயற்கைப் பொருளால் தயாரிக்கப்படுபவை.
இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களால் கைவினைப் பொருள்கள் செய்யப்படுவதால்
சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
கைவினைப் பொருள்களில் எவ்விதமான செயற்கைப் பொருளோ, இரசாயனமோ பயன்படுத்தப்படுவது இல்லை.
இயற்கையாகக் கிடைக்கும் களிமண், பனை ஓலை, மூங்கில், பிரம்பு முதலான பொருள்களைக் கொண்டு கைவினைப்
பொருள்கள் செய்யப்படுகின்றன. 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
38. பெரியோரை
மதித்தல்.
பொறுத்துக் கொள்ளுதல்.
பொறாமை கொள்ளாமை.
சினம் கொள்ளாமை.
மனிதநேயத்துடன் விளங்குதல். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39. பிறமொழி இலக்கியங்களை
மொழிபெயர்த்து, தமிழிலேயே வெளியிட வேண்டும்.
கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
இலக்கண, இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வு
கண்ணோட்டத்துடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அடி பிறழாமல்
எழுது. 4+2=6
40. இயற்கையைப் போற்றுவோம்
மாமழை போற்றுதும்!
மாமழை போற்றுதும்!
நாம நீர் வேலி
உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான்
சுரத்தலான்.
- இளங்கோவடிகள். 4
அல்லது
பாடறிந்து ஒழுகுதல்
ஆற்றுதல் என்பது
ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது
புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது
பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது
தன்கிளை செறாஅமை. - நல்லந்துவனார் 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. கேட்டார்ப்
பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
42.அ. கொம்பு 1
ஆ. சீர்திருத்தம் 1
43. அ. ஆசிரியரிடம்
மாட்டிக் கொண்ட மாணவன் தான் பார்த்து எழுதவில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்தான். 1
ஆ. எங்கள் குடும்பம் உதவி செய்வதை வாழையடி வாழையாகப் பின்பற்றி வருகிறது.1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44. அ.விழைவுத்
தொடர். 1
ஆ. உணர்ச்சித் தொடர் 1
45. அ. தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர். 1
ஆ. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது. 1
46. அ. கபிலன், "தன் தந்தையிடம் இன்று மாலை விளையாட போகட்டுமா?" என்று கேட்டான். 1
ஆ. திரு.வி.க எழுதிய 'பெண்ணின் பெருமை' என்னும் நூல் புகழ்பெற்றது. 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
47. அ. காளை. 1
ஆ. மணம். 1
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
48. அ. காலம் உடன் வரும் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. ஆன்ற குடிப்பிறத்தல்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
49. அ. கைவினைக் கலைகள். 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
50. அ. எனது தாய்மொழி 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. இருப்பிடச் சான்றிதழ் வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
