10th tamil model notes of lesson
lesson plan February 2
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.அலகு
1 - 7
3.பாடத்தலைப்பு
7 இயல்கள்
திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்
https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html
https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html
https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html
https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html
https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html
https://tamilthugal.blogspot.com/2025/11/1.html
4.திருப்புதல் வினாக்கள்
அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக. தமிழ்த்துகள்
பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக. தமிழ்த்துகள்
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். ஆ) வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
வழுவமைதி என்றால் என்ன?
குறிப்பு வரைக - அவையம். தமிழ்த்துகள்
உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. தமிழ்த்துகள்
இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
அ) "தூசும்"- எனத் தொடங்கும் சிலப்பதிகாரம் பாடலை எழுதுக.
வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்" - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க. தமிழ்த்துகள்
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.
