பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
27-01-2026. செவ்வாய்
திருக்குறள் :
பால்: பொருட்பால்
; இயல்: அரசியல் ;
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
; குறள் எண் : 441.
குறள்:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.
உரை :
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
பழமொழி :
> முயற்சி இல்லாத இலக்கு வெறும் கனவாகவே இருக்கும்.
A goal without effort stays a dream.
இரண்டொழுக்க பண்புகள்:
1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.
2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
+ புத்தகமும் கதவும் ஒன்றே. இரண்டையும் நீங்கள் திறந்தால் வேறு ஒரு உலகிற்குச் செல்வீர்கள். - ஜீனெட் விண்டர்சன்.
பொது அறிவு :
01.உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த விலங்குகளில் முதன்மையானது எது?
பந்தயக் குதிரை - Race horse
02. பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு எது?
இலங்கை - Srilanka
English words:
Ingenious-clever and inventive
Dreadful-extremely bad
ஜனவரி 27
பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day)
நீதிக்கதை -நட்புக்குத் துரோகம்
ஒரு அடர்ந்த காட்டில் வசித்து வந்த ஒரு நரியும், ஒரு கழுதையும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து நாள்தோறும் இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், அப்படி இரைத் தேடச் செல்லும் போது இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்க போராட வேண்டும் என்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று நரியினை வழி மறித்தது. நரி உடனே சிங்கத்தை நோக்கி, மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னை கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. என்னுடைய நண்பனாகக் கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அந்த கழுதையைத் தின்பதால் உங்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு கிடைக்கும் என்று கூறியது. சிங்கமும் ஒப்புக் கொண்டது. நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.
நண்பனே! இரை தேடச் செல்லலாமா? எனக் கழுதையை அழைத்துக் கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிங்கமானது, கழுதையின் மீது பாய்ந்துக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது. நரி பதறிப் போய், மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் கூட்டி வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே! என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.
நீ உன் நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காதவன். நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்று என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.
நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
இன்றைய செய்திகள் 27.01.2026
* நிலத்தடி நீரை எடுத்தல் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லுதலை ஒழுங்குமுறைப்படுத்தவும், 'தமிழ்நாடு நீர்வளங்கள் மசோதா' தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது.
* அமெரிக்காவின் பெரும் பகுதி (3-ல் 2 பங்கு) பனிப்புயலின் பிடியில் சிக்கியுள்ளது. உறைபனியின் தாக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. 14 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. சுமார் 13,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* உலகின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் 410 கப்பல்களில் 6,223 மாலுமிகளுக்கு ஊதியம் கிடைக்க வில்லை அதில் 1,125 மாலுமிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
விளையாட்டுச் செய்திகள்
கவுகாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வரலாறு படைத்தார் அபிஷேக் ஷர்மா; நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines - 27.01.2026
* The Tamil Nadu Water Resources Bill has been passed in the Tamil Nadu Legislative Assembly to regulate the extraction and expensive of ground water.
* A large part of the United States (2/3) is caught in the grip of a blizzard. Millions of homes have been plunged into darkness due to the
impact of the freezing temperatures. It has completely disrupted the normal lives of 140 million people. More than 13,000 flights have been canceled.
* Out of 410 ships operating in various parts of the world, 6,223 sailors have not received their salaries, out of which 1,125 sailors are from India.
SPORTS NEWS
Guwahati: India won the 3rd T20 cricket match against New Zealand by 8 wickets. Abhishek Sharma created history; India defeated New Zealand easily.
Prepared by
Covai women ICT_போதிமரம்
