8th tamil quarterly exam question answer key 2026
எட்டாம் வகுப்பு தமிழ்
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2026
விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10x1=10 தமிழ்த்துகள்
1. அ.இளமை 1
2. ஆ.என்று+என்றும் 1
3. அ.இகழ்வாரைப் 1
4. ஆ.ஆழி 1
5. இ. நல்வாழ்வுக்காக 1
6. ஆ.ஞாயிறு 1
7. ஆ.ஓடு 1 தமிழ்த்துகள்
8. இ. நெடுந்தேர் 1
9. ஈ.கந்தம் 1
10. ஆ.கல்வி 1
கோடிட்ட இடத்தை நிரப்புக. 5x1=5 தமிழ்த்துகள்
11. பெரியபுராணம் 1
12. கண்ணெழுத்துகள் 1
13. உணவின் 1
14. அறிவியல் 1
15. பிறிது மொழிதல் அணி 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்துக. 5x1=5 தமிழ்த்துகள்
16. நாவின் முதல், அண்ணத்தின் அடி 1
17. நாவின் இடை, அண்ணத்தின் இடை 1
18. நாவின் நுனி, அண்ணத்தின் நுனி 1
19. நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி 1
20. மேல் உதடும், கீழ் உதடும் பொருந்துவதால் 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
21. நிலவு, கதிரவன், மழை. 2
22. நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே. 2
23. தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது. 2
24. ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணி ஆகும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
25. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது. 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க. 4x2=8
26. குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. 2
27. தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்,
15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி,
7 மணிநேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல். 2
28. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
இவ்வரி வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
29. உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம். வேர், தழை, தாவரங்கள், உலோகங்கள், பாஷாணங்கள். 2
30. எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாக உருவாக்கினார்.
ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாக உருவாக்கினார். 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க. 2x2=4
31. உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுவதே எழுத்துகளின் பிறப்பு ஆகும். 2
32. க, இய, இயர், அல். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும்.
ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் பிறக்கும்.
ந - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும். 2
வினாக்களுக்கு விடை அளிக்க 3x4=12
34. அ. வறியவர்களுக்கு உதவி செய்தல்.
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. எக்காலத்தும் நிலைபெற்று வாழும் தமிழ் மொழி.
ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி.
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ்கொண்ட தமிழ் மொழி.
எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க.
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ் மொழி வாழ்க!
வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லா பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க! 4
35. அ. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுக்கொம்பு போன்றது.
நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.
இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.
ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்து விடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
புள்ளியிடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியது ஆயிற்று. 4
36. அ. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும்.
நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது.
கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது என்பது உவமை.
இதன்மூலம் எவரும் தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெற இயலாது என்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
எனவே, இக்குறளில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்
ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
முன்னிலையில் வரும். இருதிணை, ஐம்பால்,
மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல்,
வேண்டல் ஆகிய பொருள்களை
உணர்த்தும்.
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி பெற்றே வரும். 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x5=10
37. தமிழ் நூல்கள் கற்பதற்கு அறிவாழமிக்கது.
பெருங்கடல்கள் மிகுந்த ஆழம் உடையவை.
பல்வேறு உயிரினங்களைக் கொண்ட உலகம் கடல்.
பல்வேறு இலக்கியங்களைக் கொண்ட அறிவுக்கடல் தமிழ்.
தங்கள் படைப்புகளைத் தமிழ்க் கடலில் ஆறுகளாகக் கலக்க விடுகிறார்கள் படைப்பாளர்கள்.
பல்வேறு வணிகக்கலன்களைச் செய்து அவற்றைக் கடல்களில் மிதக்க விடுகிறார்கள் வணிகர்கள்.
படைப்புகள் வற்றிப் போனால் தமிழ் வீழும்.
கடல் வற்றிப் போனால் புவி வீழும்.
உலகெங்கும் பரந்து விரிந்துள்ளது கடல்.
தமிழும் தமிழ் இலக்கியங்களும் உலகெங்கும் பரந்து விரிந்துள்ளன. 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
38. இயற்கையோடு இணைந்து உண்ணல்.
உண்ணும் முறையறிந்து உண்ணல்.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்.
தீய பழக்கங்களைத் தவிர்த்தல்.
இரவில் நல்ல தூக்கம். 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39. என் மீது வெறுப்பு வரக் காரணம் என்ன? என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
அவர்களுடன் அன்பாகப் பழகுவேன்.
அவர்கள் மனம் புண்படும்படியாக நடந்து கொள்ள மாட்டேன்.
அவர்களிடம் நான் விட்டுக் கொடுத்து நடப்பேன்.
என் அன்பை அவர்களுக்குப் புரிய வைப்பேன். 5
அடி பிறழாமல் எழுது. 4+2=6
40. அ. பாடறிந்து ஒழுகுதல்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.இயற்கையைப் போற்றுவோம்
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான். - இளங்கோவடிகள் 4
41. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
42.அ. சித்திர எழுத்து 1
ஆ. 2. நோய் 1
43. அ. பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர். 1
ஆ. சித்திரைத் திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன். 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று. 2
45. அ. தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர். 1
ஆ. என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின. 1
46. அ. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும். 1
ஆ. திரு.வி.க எழுதிய 'பெண்ணின் பெருமை' என்னும் நூல் புகழ்பெற்றது. 1
47. அ. நட. 1
ஆ. வா. 1
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
48. அ. சகாதேவன் கதை அல்லது
ஆ. ஓரெழுத்து ஒருமொழிகளின் பெருக்கம் 8
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
49. அ. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகள் அல்லது தமிழ்த்துகள்
ஆ. எழுத்துகளின் தோற்றம்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 8
50. அ. கலைத்திருவிழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழிக்குப் பாராட்டுக் கடிதம்
8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. நூலகம்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்