கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, January 10, 2025

திருவெம்பாவை பாடல் 27 மார்கழி 27 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 27 Margazhi day 27


Tiruvembavai Song 27 Margazhi day 27

திருப்பாவை பாடல் 27 மார்கழி 27 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 27 Margazhi day 27


 Tirupavai Song 27 Margazhi day 27

திருக்குறள் 10 பிறவிப்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 10 Explanation tamil and english piravi perunkadal

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

Thursday, January 09, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2025. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

09-01-2025. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : நட்பியல் ;

அதிகாரம் : மருந்து ; 

குறள் எண் : 947.

குறள் :

தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோயளவு இன்றிப் படும்.

பொருள்:

செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும்.

பழமொழி :

►அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.

Authority shows the man.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.

2) பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

+ இளமையில் கல்வியை புறக்கனித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இழந்தவன் ஆகிறான்

பொது அறிவு :

1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது?

ஆர்க்டிக் என்னும் கடற்பறவை.

2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது?

சொர்க்கப் பறவை.

English words & meanings :

Martial arts.

தற்காப்புக் கலை

Running.

ஓடுதல்

வேளாண்மையும் வாழ்வும் :

நிலத்தடி நீரை எடுத்து உபயோகப் படுத்திய அளவுக்கு நீரை சேமிக்க அல்லது சிக்கனமாக செலவழிக்க முன்வரவில்லை. விளைவு உலக அளவில் பரவலாக நீர் தட்டுப் பாரடு ஏற்பட்டது

ஜனவரி 09

NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

NON-RESIDENT INDIAN DAY

✓வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

✓ மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை

ஒரு ரூபாய்

முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு ரூபாய் காசு கீழே கிடந்தது. அவர் அந்த ரூபாயை ஒரு ஏழைக்கு கொடுக்க நினைத்தார். அவர் போகும் வழியில் அவரால் எந்த ஏழையையுமே பார்க்க முடியவில்லை. அதனால் அந்த ரூபாயை அவரே பத்திரமாக வைத்துக்கொண்டார். அப்படியே இரண்டு நாட்கள் கடந்தன. ஒருநாள் முனிவர், அவரது வீட்டை விட்டு வெளியே வரும் போது ஒரு ராஜா பேராசையோடு ராணுவத்துடன் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த ராஜா முனிவரை பார்த்ததும் தான் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட போவதாகக் கூறி அவரிடம் தான் வெற்றி பெற ஆசீர்வாதம் கேட்டார். ராஜா அவ்வாறு கேட்ட பின் முனிவர் சிறிது நேரம் யோசித்து, ராஜாவுக்கு அந்த ஒரு ரூபாயை கொடுத்தார்.

உடனே ராஜாவுக்குக் கோபம் வந்தது. ராஜா முனிவரை பார்த்து "எனக்கு எதுக்கு ஒரு ரூபாய் கொடுத்தீர்கள்?" என்று கேட்டார். முனிவர் "நான் நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் இந்த ஒரு ரூபாயை பார்த்தேன். இதை ஒரு ஏழைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன்.ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் ஒரு ஏழையைக் கூட இதுவரைக்கும் கண்டு பிடிக்க கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். முடியவில்லை.கடைசியாக

அதற்கு ராஜா "நான் பணக்காரன் என்னிடம் நிறைய பணமும், நிலங்களும் இருக்கிறது ஆனால் நீங்கள் என்னை ஏன் ஏழை என்று கூறினீர்?" என்று கேட்டார். அப்போது முனிவர் "உன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், பேராசையுடன் இன்னொரு நாட்டை கைப்பற்ற போகிறாய். உன்னை விட ஒரு ஏழையை என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் உனக்கு இந்த ஒரு ரூபாயை கொடுத்தேன்" என்றார்.

ராஜா தன்னுடைய தவறை உணர்ந்து தான் பேராசை மனதை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு முனிவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இன்றைய செய்திகள்

09.01.2025

* பொங்கல் பரிசுத்தொகுப்பு ரெடி... நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்.

ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

* டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு.

இஸ்ரோ தலைவராக திரு. நாராயணன். தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து அரசு பள்ளியில் படித்து உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் சேர்ந்தவர் இன்று அதன் தலைவராகி உள்ளார்.

*ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா - ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'.

Today's Headlines 09.01.2025

Pongal gift set ready... Distribution in ration shops from tomorrow.

Sriharikota: ISRO has announced that tomorrow's event to connect two 220 kg spacecraft launched on December 30 has been postponed.

Improvement in Delhi air pollution levels: Relaxation in vehicle ban.

ISRO Chairman Mr. Narayanan. Born in a humble background in Kumari district of Tamil Nadu, he studied in a government school and joined ISRO as an assistant and has become its chairman today.

ISL Football Series: FC Goa Hyderabad FC match 'Draw'.

திருவெம்பாவை பாடல் 26 மார்கழி 26 பாடலும் உரையும் Tiruvembavai Song 26 Margazhi Song and Explanation


Tiruvembavai Song 26 Margazhi Song and Explanation

திருப்பாவை பாசுரம் பாடல் 26 மார்கழி 26 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 26


Tirupavai Song and Poem lyrics Song 26

திருவெம்பாவை பாடல் 26 மார்கழி 26 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 26 Margazhi day 26


 Tiruvembavai Song 26 Margazhi day 26

திருப்பாவை பாடல் 26 மார்கழி 26 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 26 Margazhi day 26


Tirupavai Song 26 Margazhi day 26

திருக்குறள் 9 கோளில்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukkural 9 Explanation tamil and english

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.   (௯ - 9)

Wednesday, January 08, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf திண்டுக்கல் மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil first revision exam question paper pdf Dindigul district 2025

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf ராணிப்பேட்டை மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil first revision exam question paper pdf ranipet district 2025

தமிழோடு விளையாடு 6 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


Play with Tamil Find the Tamil word Tamil game

தமிழ் எழுத வாசிக்கக் கற்றல் சென்னை பயிற்சிக் கையேடு pdf Focused learners guide

பதிவிறக்கு/DOWNLOAD 

Focused learners guide material pdf Chennai district reading writing practice 

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு 2025 PDF செங்கல்பட்டு மாவட்டம் 10th tamil slow learner material

பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth X sslc 10th tamil slow learner material pdf 2025 chengalpattu district 

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025. புதன்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

08-01-2025. புதன் 

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : நட்பியல் ;

அதிகாரம் : மருந்து; 

குறள் எண் : 946.

குறள் :

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய்.

பொருள்:

செரிக்கும் அளவு அறிந்து உண்பவனிடம் உடல் நலம் இருப்பது போல் அளவில்லாமல் உண்பவனிடம் நோய் இருக்கும்.

பழமொழி :

செய்வதை திருந்தச் செய்.

Whatever you do, do it properly.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.

2) பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

* மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி மகாத்மா காந்தி.

பொது அறிவு :

1. ஜம்மு காஷ்மீரின் ஆட்சி மொழி எது?

விடை : உருது.

2. உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது?

விடை: ஜப்பான்

English words & meanings :

High jumping

உயரம் தாண்டுதல்

Horse riding

குதிரை சவாரி

வேளாண்மையும் வாழ்வும் :

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை பெருகி மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும் விவசாயத்திற்கும் தேவையான நீரை நிலத்தடியில் இருந்து எடுக்க ஆரம்பித்தனர்.

ஜனவரி 08

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்

✓ (Stephen William Hawking,

✓பிறப்பு ஜனவரி 8, 1942 -இறப்பு 14 மார்ச்சு 2018

ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

✓இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.

✓இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.

நீதிக்கதை - தெனாலிராமன் பூனை வளர்த்தது

விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார். தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான்.

குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள். கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் "ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?" என்று கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன், "அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?" என்றான். அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் "ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!" என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார். பாலைக் கண்டதுமே அந்தப் பூனை பயத்துடன் ஓட்டமெடுத்தது.

தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், "அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!" என்றான்.

இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.

இன்றைய செய்திகள்

08.01.2025

தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி வைரஸ் (HMPV) தானாகவே சரியாக கூடியது, எனவே பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை," என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம், மிகவும் பழமையான ஜாரவா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 19 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி காயத்ரி இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines 08.01.2025

As far as Tamil Nadu is concerned, the HMPV virus and its effect can be (HMPV) recovered by itself, so there is no need to panic," said M. Subramanian, Minister of Health and Public Welfare.

On behalf of the tourism department, the 10th International Balloon Festival will begin on January 10th in Chennai, Madurai, and Pollachi.

The Andaman Nicobar Island administration department has recorded a special historical activity by adding the names of 19 people in the electoral roll who belong to the very ancient Jarawa tribal community and issuing them identity cards.

A powerful earthquake struck Tibet, situated at the Himalayan foothills. The Death toll rose. The quake was recorded as 7.1 on the Richter scale.

Malaysia Open Badminton: Trisha Jolly - Gayatri duo advance to 2nd round.

திருவெம்பாவை பாடல் 25 மார்கழி 25 பாடலும் உரையும் Tiruvembavai Song 25 Margazhi Song and Explanation


Tiruvembavai Song 25 Margazhi Song and Explanation

திருப்பாவை பாசுரம் பாடல் 25 மார்கழி 25 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 25


Tirupavai Song and Poem lyrics Song 25

திருவெம்பாவை பாடல் 25 மார்கழி 25 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 25 Margazhi day 25


Tiruvembavai Song 25 Margazhi day 25

திருப்பாவை பாடல் 25 மார்கழி 25 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 25 Margazhi day 25


Tirupavai Song 25 Margazhi day 25

திருக்குறள் 8 அறவாழி... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்



thirukkural 8 Explanation tamil and english aravali...

Tuesday, January 07, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf 2025 புதுக்கோட்டை மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil first revision exam question paper pdf 2025 Pudukkottai district 

வணக்கம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Vaṇakkam hello


tamil short story Vaṇakkam hello

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்07-01-2025. செவ்வாய்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

07-01-2025. செவ்வாய்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல்: நட்பியல் ;

அதிகாரம் : மருந்து; 
குறள் எண் : 945.

குறள் :

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

பொருள்:

உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவையே என்றும் அளவோடு உண்டால் உயிர்க்கு நோய் ஏதுமில்லை.

பழமொழி :

அதிகம் கேள், குறைவாகப் பேசு.

Hear more, but talk less.

இரண்டொழுக்கப் பண்புகள்:

1) எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.

2) பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை,வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை . காமராஜர்.

பொது அறிவு:

1. உலக பரப்பளவில் இந்தியா எத்தனையாவது நாடாகும்?

விடை: ஏழாவது.

2. அம்புலிமாமா என்ற சிறுவர் பத்திரிக்கை முதன்முதலில் எந்த ஆண்டு வெளிவந்தது?

விடை : 1947

English words & meanings:

Cycling.

மிதிவண்டி

Football

கால்பந்து

வேளாண்மையும் வாழ்வும் :

உலகின் துருவப் பகுதியில் உறைந்த பனிக்கட்டியாக உள்ள நீர் போக மிஞ்சியுள்ள உறையாத சுத்த நீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.

நீதிக்கதை - பூனையும் நரியும்

ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தன. "இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானவை எனக்கு அவைகளைப் பிடிக்காது", என்று நரி சொல்லியது. "ஆமா ஆமா அவைகளை எனக்கும் சுத்தமா பிடிக்காது" என்று பூனையும் சொன்னது. அவை ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அவைகளால் என்னை பிடிக்க முடியாது. ஏனென்றால், அவைகளிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்" என்று நரி சொன்னது. "வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்", என்று அந்தப் பூனை கேட்டது.

அதற்கு நரிசொல்லியது, "என்னிடம் ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ளே சென்று ஒளிந்து விடுவேன்". என்று எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி. "நிஜமாகவா"? என்று அந்தப் பூனை கேட்டது. அதற்கு அந்த நரி சொன்னது, "ஆமா அதில் ஒன்று கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏனென்றால் அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க செய்யக் கூடியது" என்று அந்த நரி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தது. அதற்கு பூனை " "எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்" என்று சோகமாக சொன்னது. இவ்வாறு நரியும் பூனையும் பேசிக் கொண்டிருக்கும் போது வேட்டை நாய்கள் ஓடி வரும் சத்தம் கேட்டது.

உடனே பூனை "என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாற்றி கொள்ள போகிறேன்" என்று கூறி விட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்தில் ஏறியது. அதன்பின் "நீ எப்படி உன்னை காப்பாற்றி கொள்ளப் போகிறாய் என்று நானும் பார்க்கிறேன்" என்று அந்த நரியிடம் பூனை சொன்னது. அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தியும் நரியால் அந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

நீதி : தேவையில்லாத பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே நல்லது.

இன்றைய செய்திகள் 07.01.2025

உதகையை உறைய வைக்கும் உறைபனி பொழிந்துவரும் நிலையில் அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரிக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.

ஹாக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி.

மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

Today's Headlines 07.01.2025

Avalanche recorded a minus 1 degree Celsius temperature as Ooty was gripped by a freezing cold.

Chief Minister M.K. Stalin has announced that an individual or organization will be awarded one million US dollars (about Rs. 8.57 crore) if they help in understanding the Indus Valley Civilization script.

Asia's 15th largest air show - Aero India 2025 - will be held in Bengaluru, Karnataka from February 10 to 14, the Defense Ministry has said.

China has said that the world's largest dam to be built across the Brahmaputra river will not affect India and Bangladesh.

Hockey India League: Tamil Nadu Dragons defeat UP Rudras.

Women's Cricket: India's team announced for the ODI series against Ireland.

திருவெம்பாவை பாடல் 24 மார்கழி 24 பாடலும் உரையும் Tiruvembavai Song 24 Margazhi Song and Explanation


Tiruvembavai Song 24 Margazhi Song and Explanation

திருப்பாவை பாசுரம் பாடல் 24 மார்கழி 24 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 24


Tirupavai Song and Poem lyrics Song 24

தமிழ்த்துகள்

Blog Archive