கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, April 01, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் விடைக் குறிப்பு முழுஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026 விருதுநகர் மாவட்டம்

 8th tamil annual exam answer key 2026

எட்டாம் வகுப்பு  தமிழ்

முழுஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 10x1=10 தமிழ்த்துகள்

1. ஆ.கல்லாதவர்                                                              1

2. இ. பனையோலைகள்                                                     1

3. அ. படித்தான்                                                                1

4. ஆ.என்று+என்றும்                                                         1

5. இ.பிணி                                                                       1

6. இ.தன்வினை                                                                1

7. இ. முழவதிர                                                                  1        தமிழ்த்துகள்

8. இ. நல்வாழ்வுக்காக                                                        1

9. ஈ. இலவசக் காலணித் திட்டம்                                           1

10. ஆ.காவல்மிக்க நகர்                                                       1

கோடிட்ட இடத்தை நிரப்புக.                                           5x1=5  தமிழ்த்துகள்

11. ஒருபைசாத்தமிழன்                                                       1

12. வீரமாமுனிவர்                                                               1

13. அறிவியல்                                                                     1

14. ஏந்தல்                                                                         1

15. சேலம்                                                                         1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

பொருத்துக.                                                           5x1=5  தமிழ்த்துகள்

16. வினையெச்சம்                                                             1

17. பெயரெச்சம்                                                                1

18. முற்றெச்சம்                                                                 1

19. குறிப்புப் பெயரெச்சம்                                                     1

20. குறிப்பு வினையெச்சம்                                                  1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

 

21.      தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.                              2

தமிழ்த்துகள்

22. மருந்தினால் நீங்கும் நோய்கள்.

எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.

அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.                                                      2

தமிழ்த்துகள்

23.   சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் தமிழ் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்.                                                                       2

தமிழ்த்துகள்

24.     புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.                                   2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

 

25.     காட்டுமுயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது       பெருமையைத் தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்).                                                                                                        2

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க.                          4x2=8

26.     இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி.                                                                                                  2

தமிழ்த்துகள்

27. 1. உழவர்களின் கடன் தள்ளுபடி

          2. ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்

          3. ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம்

          4. தாய்சேய் நல இல்லங்கள்.                                                                     2

தமிழ்த்துகள்

28. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.

இவ்வரி வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர்.                                                     2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

 

29. சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

 1930 ஆம் ஆண்டு நாசிக்கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.                                                                                                      2

தமிழ்த்துகள்

30. அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலைகளையெல்லாம்    கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்.    2

தமிழ்த்துகள்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க.                                 2x2=4

31.       எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை ஆகும்.

       இதில் செயலின் பயன் செய்பவரைச் சேரும்.

எடுத்துக்காட்டு

       செல்வி கடலைக் கண்டாள்.

       இத்தொடரில் செல்வி என்னும் எழுவாய், கடலைத் தானே கண்டதனால், இது தன் வினைத் தொடராகும்.                                                                     2

தமிழ்த்துகள்

32.                ண, ன, ந, ல, ழ, ள, ர, ற.                                                      2

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

33.        நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

          எ.கா- தாய் + மொழி = தாய்மொழி                                                  2

வினாக்களுக்கு விடை அளிக்க                                                 3x4=12

34. அ. பாடும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி பட்டமரத்திற்காகப் பாடல் பாடியது.

பனி மூடிய உலகிற்கு பட்டமரம் அழகு கொடுத்தது.

பட்ட  மரத்தின் ஆடும் கிளைகளில் சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது.

இவை ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்துவிட்டன.                    4

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

அல்லது

          ஆ. கலிங்க நாட்டார் முறுக்குகள் நிறைந்த தண்டையைச் சிங்கிக்குப் பரிசாக வழங்கினர்.

 கண்டிய நாட்டார் கால் மோதிரத்தையும் பீலியையும் சிங்கிக்குப் பரிசாக வழங்கினர்.    4

தமிழ்த்துகள்

35. அ. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுக்கொம்பு போன்றது.

நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.

இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.

ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.     4

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

அல்லது

ஆ. ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்; சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார்.

அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றி பெற்றனர்.

இதுவே அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி ஆகும்.                        4

தமிழ்த்துகள்

36.     அ.  பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலோ பின்னாலோ இணைந்து நின்று அச்சொற்களின் பொருளைத் தெளிவுபடுத்துவது இடைச்சொற்கள்.

பெரும்பாலும் இரு சொற்களுக்கு இடையே வருவதால் இவை இடைச் சொற்கள் எனப்படுகின்றன.

இடைச் சொற்களின் வகைகள்

1.        வேற்றுமை உருபுகள்

2.       விகுதிகள்

3.       சாரியைகள்

4.       உவம உருபுகள்

5.       சொல்லுருபுகள்..                                                                         4

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

 

அல்லது

ஆ.      ழகர மெய், மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதாலும்,

லகர மெய் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள்    தடித்து நெருங்குவதாலும்,

ளகர மெய், மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலாலும் பிறக்கின்றன.                                                                                             4

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x5=10

 

37. 🔆பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து, தமிழிலேயே வெளியிட வேண்டும்.

🔆கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்.

🔆தமிழர்கள் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.

🔆இலக்கண, இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வு கண்ணோட்டத்துடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.                                                            5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

38. பெரியோரை மதித்தல்.

பொறுத்துக் கொள்ளுதல்.

பொறாமை கொள்ளாமை.

சினம் கொள்ளாமை.

மனிதநேயத்துடன் விளங்குதல்.                                                              5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

39. இன்றைய  காலகட்டத்தில் உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தைப் பற்றி பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் உழவுத்தொழில் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உழவுத்தொழில் மேற்கொள்ளும் இளைஞர்களை அரசு  ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் உழவுத் தொழில் சிறக்கும்.                                          5

தமிழ்த்துகள்

அடி பிறழாமல் எழுது.                                                 4+2=6

40. தமிழ்மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!             

                                                  - பாரதியார்.                                    4

தமிழ்த்துகள்

அல்லது

ஒன்றே குலம்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே.                                            4

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

 

41. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.                                                                   2

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                   4x2=8

42.அ. நட                                                                                  1

ஆ. வா                                                                                       1

தமிழ்த்துகள்

43. அ. பருகு                                                                              1

ஆ. நிரை                                                                                   1

தமிழ்த்துகள்

44. அ. தமிழ் அம்பு விடும் கலையை ஏகலை என்றது.                       1

ஆ. குப்புசாமி நோய் காரணமாக வேலையை இழந்து இருந்தார்.           1

தமிழ்த்துகள்

45. அ. பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர்.                  1

ஆ. காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன்                        1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

46. அ. முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.                                          1

ஆ. எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.                                                              1

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

 

47. அ. 2.       புல்லாங்குழல்.                                                                   1

ஆ. 3. பால்பண்ணை.                                                                           1

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

 

48. அ. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகள்       8

அல்லது                           தமிழ்த்துகள்

ஆ. பூனா ஒப்பந்தம்.                                                                                        

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

49. அ. குப்புசாமியை நினைத்துக் கண்ணீர் விட்ட நிகழ்வு.                 8

அல்லது                           தமிழ்த்துகள்

ஆ. தமிழகக் கைவினைக் கலைகள்.

 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

50. அ. கடிதம்                                                                             8

அல்லது                           தமிழ்த்துகள்

ஆ. நூலகம் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 6

 



NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 6 link touch below👇



TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 6

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2026 புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2026 புதன் 

திருக்குறள்: 

குறள் 914: 

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் 
ஆயும் அறிவி னவர் 

உரை: 

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

பழமொழி :
Many hands make light work. 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.

பொன்மொழி : 

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு தான் ஆனந்தம் பிறக்கிறது -தங்கரசால்

பொது அறிவு : 

01. பாபநாசம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? 

தாமிரபரணி_ Thamirabarani River

English words :

Analyze – to examine in detail to understand or interpret.

Crisis – a time of intense difficulty or danger.

தமிழ் இலக்கணம்: 

பதற்றம், பதட்டம் எது சரி?

பதறு என்ற சொல்லில் இருந்து தான் 

பதறி, பதறிய, பதற்றம் என்ற சொற்கள் பிறந்தது. 

எனவே பதற்றம் என்பதே சரி.

எழுதும் போது பதற்றம் என்றே எழுத வேண்டும் 

மதன் பதற்றத்தோடு பரீட்சை எழுத வந்தான்.

அறிவியல் களஞ்சியம் :

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மாறி மாறி வரும். அதனால் மாதத்தில் ஒரு முறையாவது அமாவாசையும் பௌர்ணமியும் வந்துவிடும். 1865ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் தான் பௌர்ணமியே வராத மாதம்.


ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்



வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார். ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
நீதிக்கதை

 யார் வள்ளல்?



முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன். 

அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.



திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.



அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.

நீதி :

தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.04.2026

⭐சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

⭐ இந்தியாவில் LPG க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பெட்ரோல் பங்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

⭐ஏமனின் ஹூத்தி தீவிரவாதிகள் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களைத் தகர்ப்போம் என்று அச்சுறுத்துவதால் உலக நாடுகள் கலக்கமடைந்து ள்ளன. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஷிம்கென்ட் கஜகஸ்தான் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் சாம்பியன் ஆனார்.

🏀 ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

⭐ In cities including Chennai, the prices of daily food items such as tea, snacks, and meals in restaurants and tea shops have increased significantly.

⭐ There is a shortage of LPG in India. As an alternative to LPG cylinders, the central government has announced that kerosene will be sold at two petrol bunks in each district.

⭐ Global nations are concerned as the Houthis in Yemen have threatened to damage undersea communication cables.

 SPORTS NEWS 

🏀 In the Shymkent, Kazakhstan chess tournament, India’s Pranav emerged as the champion.

🏀 In the third league match of the Indian Premier League 2026, Rajasthan Royals defeated Chennai Super Kings by 8 wickets.

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 31, 2026

NEW TNTET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 5

 


NEW TNTET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 5 link touch below👇


TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 5

tet tamil free online quiz தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு

தமிழ்த்துகள் பொதுத்தமிழ் - மாதிரித் தேர்வு (20 வினாக்கள்)

NEW TNTET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 4

 


NEW TNTET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 4 link touch below👇

TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 4

 

Monday, March 30, 2026

பொது அறிவு வினா விடைகள் 50 GK QUESTIONS WITH ANSWERS

50 பொது அறிவு வினா-விடைகள்

50 GK QUESTIONS WITH ANSWERS 

1. **இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?**
   அ) டாக்டர் சி.வி.ராமன்
   ஆ) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
   இ) விக்ரம் சாராபாய்
   ஈ) ஹோமி பாபா
   **விடை: ஆ) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்**

2. **தமிழகத்தின் மாநில விலங்கு எது?**
   அ) புலி
   ஆ) யானை
   இ) வரையாடு
   ஈ) சிங்கம்
   **விடை: இ) வரையாடு**

3. **உலகின் மிகச்சிறிய கண்டம் எது?**
   அ) ஆப்பிரிக்கா
   ஆ) ஐரோப்பா
   இ) ஆஸ்திரேலியா
   ஈ) அண்டார்டிகா
   **விடை: இ) ஆஸ்திரேலியா**

4. **தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?**
   அ) தாமஸ் ஆல்வா எடிசன்
   ஆ) அலெக்சாண்டர் கிரஹாம்பெல்
   இ) ஐசக் நியூட்டன்
   ஈ) ஜேம்ஸ் வாட்
   **விடை: ஆ) அலெக்சாண்டர் கிரஹாம்பெல்**

5. **மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?**
   அ) 200
   ஆ) 210
   இ) 206
   ஈ) 208
   **விடை: இ) 206**

 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

6. **சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?**
   அ) 5 நிமிடம்
   ஆ) 8 நிமிடம் 20 விநாடி
   இ) 10 நிமிடம்
   ஈ) 2 நிமிடம்
   **விடை: ஆ) 8 நிமிடம் 20 விநாடி**

7. **தனிம வரிசை அட்டவணையில் உள்ள முதல் தனிமம் எது?**
   அ) ஹீலியம்
   ஆ) ஆக்சிஜன்
   இ) ஹைட்ரஜன்
   ஈ) நைட்ரஜன்
   **விடை: இ) ஹைட்ரஜன்**

8. **வைட்டமின் 'சி' குறைபாட்டினால் வரும் நோய் எது?**
   அ) பெரிபெரி
   ஆ) ஸ்கர்வி
   இ) ரிகெட்ஸ்
   ஈ) மாலைக்கண் நோய்
   **விடை: ஆ) ஸ்கர்வி**

9. **கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?**
   அ) பில் கேட்ஸ்
   ஆ) சார்லஸ் பேபேஜ்
   இ) ஸ்டீவ் ஜாப்ஸ்
   ஈ) மார்க் ஜுக்கர்பெர்க்
   **விடை: ஆ) சார்லஸ் பேபேஜ்**

10. **இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் என்ன?**
    அ) மெலனின்
    ஆ) ஹீமோகுளோபின்
    இ) பிளாஸ்மா
    ஈ) குளோரோபில்
    **விடை: ஆ) ஹீமோகுளோபின்**


புவியியல் மற்றும் வரலாறு

11. **உலகின் மிக உயர்ந்த சிகரம் எது?**
    அ) நந்தா தேவி
    ஆ) எவரெஸ்ட்
    இ) கஞ்சன்ஜங்கா
    ஈ) தொட்டபெட்டா
    **விடை: ஆ) எவரெஸ்ட்**

12. **இந்தியாவின் தலைநகரம் எது?**
    அ) மும்பை
    ஆ) சென்னை
    இ) புது டெல்லி
    ஈ) கொல்கத்தா
    **விடை: இ) புது டெல்லி**

13. **வெள்ளை யானைகளின் தேசம் என்று அழைக்கப்படுவது எது?**
    அ) இந்தியா
    ஆ) ஜப்பான்
    இ) தாய்லாந்து
    ஈ) சீனா
    **விடை: இ) தாய்லாந்து**

14. **சிந்து சமவெளி நாகரிகத்தில் கப்பல் கட்டும் தளம் எங்கு கண்டறியப்பட்டது?**
    அ) ஹரப்பா
    ஆ) முகஞ்சதாரோ
    இ) லோத்தல்
    ஈ) காலிபங்கன்
    **விடை: இ) லோத்தல்**

15. **சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்?**
    அ) மகாத்மா காந்தி
    ஆ) ஜவஹர்லால் நேரு
    இ) சர்தார் வல்லபாய் படேல்
    ஈ) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
    **விடை: ஆ) ஜவஹர்லால் நேரு**

தமிழ் மற்றும் இலக்கியம்

16. **திருக்குறளை இயற்றியவர் யார்?**
    அ) கம்பர்
    ஆ) பாரதியார்
    இ) திருவள்ளுவர்
    ஈ) அவ்வையார்
    **விடை: இ) திருவள்ளுவர்**

17. **தமிழின் முதல் காப்பியம் எது?**
    அ) மணிமேகலை
    ஆ) சிலப்பதிகாரம்
    இ) சீவக சிந்தாமணி
    ஈ) குண்டலகேசி
    **விடை: ஆ) சிலப்பதிகாரம்**

18. **"புரட்சிக்கவிஞர்" என்று போற்றப்படுபவர் யார்?**
    அ) பாரதியார்
    ஆ) பாரதிதாசன்
    இ) நாமக்கல் கவிஞர்
    ஈ) கண்ணதாசன்
    **விடை: ஆ) பாரதிதாசன்**

19. **திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?**
    அ) 130
    ஆ) 133
    இ) 1330
    ஈ) 100
    **விடை: ஆ) 133**

20. **தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?**
    அ) சேலம்
    ஆ) மதுரை
    இ) தஞ்சாவூர்
    ஈ) திருநெல்வேலி
    **விடை: இ) தஞ்சாவூர்**

21. **பூமியின் துணைக்கோள் எது?** - விடை: நிலவு
22. **இந்தியாவின் தேசிய நதி எது?** - விடை: கங்கை
23. **மின்சார விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?** - 
விடை: தாமஸ் ஆல்வா எடிசன்
24. **ஒலிம்பிக் கொடியில் எத்தனை வளையங்கள் உள்ளன?** - 
விடை: 5
25. **செஸ் விளையாட்டின் தாயகம் எது?** - விடை: இந்தியா
26. **மனித உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு எது?** - 
விடை: தோல்
27. **காந்தியின் பிறந்த நாள் எப்போது?** - விடை: அக்டோபர் 2
28. **இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?** - விடை: சர்தார் வல்லபாய் படேல்
29. **சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை?** 
- விடை: 8
30. **தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது?** 
- விடை: காவிரி

31. **பறக்க முடியாத பறவை எது?** - விடை: நெருப்புக்கோழி
32. **நீலக் கோள் என்று அழைக்கப்படுவது எது?** 
- விடை: பூமி
33. **காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி?** 
- விடை: அனிமோமீட்டர்
34. **எந்த விலங்கு நின்று கொண்டே தூங்கும்?** 
- விடை: குதிரை
35. **இந்திய ரூபாயின் குறியீட்டை (₹) வடிவமைத்தவர் யார்?** 
- விடை: உதயகுமார் தர்மலிங்கம்
36. **விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்?**
 - விடை: ரைட் சகோதரர்கள்
37. **தங்கக் கோவில் எங்குள்ளது?** - விடை: அமிர்தசரஸ்
38. **கென்யாவின் தலைநகரம் எது?** - விடை: நைரோபி
39. **இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?** - விடை: ஹாக்கி
40. **பூமியில் அதிகப்படியாக உள்ள வாயு எது?**
 - விடை: நைட்ரஜன்

41. **கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?**
 - விடை: பீட்டர் ஹென்லின்
42. **மனித மூளையின் சராசரி எடை எவ்வளவு?** 
- விடை: 1.3 - 1.4 கிலோ
43. **நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது?** 
- விடை: நார்வே
44. **அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் யார்?**
 - விடை: அன்னை தெரசா
45. **காகிதத்தைக் கண்டுபிடித்த நாடு எது?**
 - விடை: சீனா
46. **ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?** 
- விடை: பானு அதையா
47. **யுனெஸ்கோவின் தலைமையகம் எங்குள்ளது?** 
- விடை: பாரிஸ்
48. **சர்வதேச யோகா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?** 
- விடை: ஜூன் 21
49. **தமிழ்நாட்டின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?** - விடை: தொட்டபெட்டா
50. **விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?** 
- விடை: ராகேஷ் சர்மா

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 3 NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ

 


NEW TNTET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 3 link touch below👇



TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 3

 

Sunday, March 29, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-03-2026 . திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-03-2026 . திங்கள் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: நட்பியல் ;

அதிகாரம் : வரைவின் மகளிர் ;

குறள் எண் : 912.

குறள் :

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்

உரை :

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

பழமொழி :

ஒரு செயலைச் செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.

Measure thrice before you cut once.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

+ மனிதர்களின் முழு திறமையின் வெளிப்பாடே உண்மையான கல்வி. மகாத்மா காந்தி அடிகள்.

பொது அறிவு:

01. காந்திஜியின் 125 வது பிறந்தநாளை ஒட்டி இந்தியா உருவாக்கிய மிக உயர்ந்த விருதின் பெயர் என்ன?

காந்தி அமைதி பரிசு Gandhi Peace Prize.

02. விண்கலங்கள் அதிக முறை சென்று ஆராய்ச்சி செய்த முதல் வால் நட்சத்திரம் எது?

ஹாலி வால் நட்சத்திரம் 

Halley's Comet

English words :

Attentive- taking heed. 

உன்னிப்பாக கவனித்தல்

exotic unusual or interesting

வழக்கத்திற்கு மாறாக இருக்கிற. விசித்திரமான.

தமிழ் இலக்கணம்: கற்போம் தமிழ்

கருப்பு, கறுப்பு எது சரி?

இடையின ர கரமா வல்லின ற கரமா?

இது அநேகருக்கு குழப்பத்தை உண்டாக்கும் ஒரு வார்த்தை.

ஆனால் இரண்டுமே சரி தான்.

எப்படி என்று பார்ப்போம்.

→ நிலையான நிறத்தை குறிக்கும் போது கருப்பு என்று எழுத வேண்டும்

எ.கா - காகம் கருப்பு

கருப்பு குயில்

தாரின் நிறம் கருப்பு.

மாறும் நிறம் வரும் போது கறுப்பு என்று எழுத வேண்டும்.

வெள்ளி கறுத்து விட்டது.

மேகம் கறுத்து வருகிறது.

வெள்ளி, மேகம் இரண்டின் நிறமும் வேறு வேறு ஆனால் வெள்ளி கறுப்பாக மாறும்

மேகம் நிறமும் கறுப்பு அல்ல அது மழை வரும் போது மாறும்.

அறிவியல் களஞ்சியம் :

சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம் பாயாது, காரணம் சுத்தமான நீரில் தாதுக்கள் (Impurities and Minerals) இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மார்ச் 30

வின்செண்ட் வான்கா அவர்களின் பிறந்தநாள்

வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா Vincent Van Gogh, பிறப்பு மார்ச் 30, 1853 - இறப்பு சூலை 29, 1890) ஒரு டச்சு -உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

நீதிக்கதை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டை கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும் தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாராக யோசித்து பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். போட்டியில் "தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்? என்றார்கள். அவன் சொன்னான்," ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே " என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.

என்ன ஆச்சரியம் ! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டை கதவுகளில் தாழ்ப்பாள் போடவில்லை. திறந்து தான் இருந்தது.

பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ, என்று எதற்கும் முயற்சிக்காமலே விட்டுவிடுகிறார்கள்.

அனைவரும் அறிந்த " முயல்- ஆமை "கதையில் முயலின் தோல்விக்கு "முயலாமையே" காரணம்.

இன்றைய செய்திகள் 30.03.2026

* வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை மாநிலங்களுக்கு 70% ஆக உயர்த்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

*தற்போது ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் 'சிக்காடா' கொரோனா வைரஸ் ஐரோப்பா & அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது.

* பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை இந்திய அரசு குறைத்துள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த 13 சீசன்களாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. மொத்தம் 18 சீசன்களில் 14 முறை தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

*பாகிஸ்தான் வீரருடன் இணைந்து ஆடப் போகும் அஸ்வின். அமெரிக்காவின் MLC டி20 தொடரில் பங்கேற்க ஒப்பந்தம்.

Today's Headlines - 30.03.2026

* The Government of India has announced that the distribution of commercial LPG cylinders to states will be increased to 70%.

* A new Omicron variant called BA.3.2, nicknamed "Cicada," is reportedly spreading rapidly in Europe and the United States.

* To control the rising prices of petrol, diesel, and other fuels, the Government of India has reduced the excise duty imposed on oil companies.

SPORTS NEWS

The Mumbai team, which has won the championship 5 times, has been struggling to win its opening match for the past 13 seasons. Out of 18 seasons, it has lost the first match 14 times.

Ravichandran Ashwin is set to play alongside a Pakistani player, having signed up to participate in the USA's Major League Cricket (MLC) T20 tournament.

Prepared by

Covai women ICT_போதிமரம்

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 2 NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ

 


NEW TNTET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 2 link touch below👇


TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 2

 

Saturday, March 28, 2026

தேர்தல் பணிக்குச் செல்பவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள் PO, P1, P2, P3 பணிகள்

 *தேர்தல் பணிக்குச் செல்பவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்.*

                  *PRO duty*

*1-Pro dairy*
*2-form17c.*
*3- 16 points abserver report sheet.*
*4- visiter sheet.*
*5- pledge commencement of poll and after close the poll.*
 *6- Mock poll certificate. மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்*   

          *PO 1 duty* . 
 
 *1- elector identify is very important.*
*2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால் வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* *3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்*              

       *PO 2 duty-* 

*1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்*
*3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்*
*4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.*       

        *PO 3 duty*

 *வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit ல் உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.*

     *General instructions* .   

  ⚙️ *49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின் பெயருக்கு நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் refused the Vote என்று எழுத வேண்டும்.

   ⚙️ *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.*

 ⚙️ *49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும் வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும்* *இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்*

⚙️ *Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்*. ( ஒருவரின் பெயரில் உள்ள ஓட்டை.. தவறுதலாக அல்லது வேண்டுமென்றே இன்னொருவர் வாக்களித்துச் சென்று விட்டதாக உறுதியாக அறிய வரும்போது)

⚙️ *Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்*

⚙️ *Test votes* - ( ஒருவர் தான் வாக்களித்த சின்னத்திற்கு மாறாக VVPAT ல் வேறு சின்னம் காண்பிக்கிறது என்று உறுதியாக சொல்லும் நிகழ்வின் போது)

⚙️ *Proxy votes* ( ராணுவம் உள்ளிட்ட உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு பதிலாக அவரது குடும்பத்தினர் அழிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாக்கு) 

       *மேற்கண்ட நிகழ்வுகள் Maximum* *நடக்கவாய்ப்பில்லை. இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.* 

       *குறிப்பு*

     *தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்*

       *தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றிச் செய்ய வாழ்த்துகள்*

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 1 TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST link 8TH TAMIL 30 MARKS

 


FREE ONLINE TEST 1 link touch below👇


TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 1

தமிழ்த்துகள்

Blog Archive