8th tamil model notes of lesson
lesson plan December 1
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
01-12-2025 முதல் 05-12-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
வையம்
புகழ் வணிகம் – கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
வினையால்
அமையும் தொடர்கள்
6.பக்கஎண்
108 -
109
7.கற்றல் விளைவுகள்
T-810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப்
புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
8. கற்றல்
நோக்கங்கள்
தொடர்களில்
வினைவகைகளைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
தன்வினை,
பிறவினை பற்றி அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய
வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2025/11/5_22.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
வினைச் சொற்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
வினை
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை குறித்து
விளக்குதல். வினைத் தொடர்களுக்கான எடுத்துக்காட்டுகளைக் கூறுதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
வினைத்தொடர்களை
அறிந்து கொளல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – செய்வினையைச்
செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
ந.சி.வி – ஏற்றினான் என்பது எவ்வகை வினை என்பதை விளக்குக.
உ.சி.வி – தன்வினை, பிறவினை
- எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும்
மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை
எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
வினை
குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

