கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, March 29, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-03-2026 . திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-03-2026 . திங்கள் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: நட்பியல் ;

அதிகாரம் : வரைவின் மகளிர் ;

குறள் எண் : 912.

குறள் :

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்

உரை :

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

பழமொழி :

ஒரு செயலைச் செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.

Measure thrice before you cut once.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

+ மனிதர்களின் முழு திறமையின் வெளிப்பாடே உண்மையான கல்வி. மகாத்மா காந்தி அடிகள்.

பொது அறிவு:

01. காந்திஜியின் 125 வது பிறந்தநாளை ஒட்டி இந்தியா உருவாக்கிய மிக உயர்ந்த விருதின் பெயர் என்ன?

காந்தி அமைதி பரிசு Gandhi Peace Prize.

02. விண்கலங்கள் அதிக முறை சென்று ஆராய்ச்சி செய்த முதல் வால் நட்சத்திரம் எது?

ஹாலி வால் நட்சத்திரம் 

Halley's Comet

English words :

Attentive- taking heed. 

உன்னிப்பாக கவனித்தல்

exotic unusual or interesting

வழக்கத்திற்கு மாறாக இருக்கிற. விசித்திரமான.

தமிழ் இலக்கணம்: கற்போம் தமிழ்

கருப்பு, கறுப்பு எது சரி?

இடையின ர கரமா வல்லின ற கரமா?

இது அநேகருக்கு குழப்பத்தை உண்டாக்கும் ஒரு வார்த்தை.

ஆனால் இரண்டுமே சரி தான்.

எப்படி என்று பார்ப்போம்.

→ நிலையான நிறத்தை குறிக்கும் போது கருப்பு என்று எழுத வேண்டும்

எ.கா - காகம் கருப்பு

கருப்பு குயில்

தாரின் நிறம் கருப்பு.

மாறும் நிறம் வரும் போது கறுப்பு என்று எழுத வேண்டும்.

வெள்ளி கறுத்து விட்டது.

மேகம் கறுத்து வருகிறது.

வெள்ளி, மேகம் இரண்டின் நிறமும் வேறு வேறு ஆனால் வெள்ளி கறுப்பாக மாறும்

மேகம் நிறமும் கறுப்பு அல்ல அது மழை வரும் போது மாறும்.

அறிவியல் களஞ்சியம் :

சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம் பாயாது, காரணம் சுத்தமான நீரில் தாதுக்கள் (Impurities and Minerals) இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மார்ச் 30

வின்செண்ட் வான்கா அவர்களின் பிறந்தநாள்

வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா Vincent Van Gogh, பிறப்பு மார்ச் 30, 1853 - இறப்பு சூலை 29, 1890) ஒரு டச்சு -உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

நீதிக்கதை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டை கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும் தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாராக யோசித்து பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். போட்டியில் "தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்? என்றார்கள். அவன் சொன்னான்," ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே " என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.

என்ன ஆச்சரியம் ! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டை கதவுகளில் தாழ்ப்பாள் போடவில்லை. திறந்து தான் இருந்தது.

பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ, என்று எதற்கும் முயற்சிக்காமலே விட்டுவிடுகிறார்கள்.

அனைவரும் அறிந்த " முயல்- ஆமை "கதையில் முயலின் தோல்விக்கு "முயலாமையே" காரணம்.

இன்றைய செய்திகள் 30.03.2026

* வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை மாநிலங்களுக்கு 70% ஆக உயர்த்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

*தற்போது ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் 'சிக்காடா' கொரோனா வைரஸ் ஐரோப்பா & அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது.

* பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை இந்திய அரசு குறைத்துள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த 13 சீசன்களாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. மொத்தம் 18 சீசன்களில் 14 முறை தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

*பாகிஸ்தான் வீரருடன் இணைந்து ஆடப் போகும் அஸ்வின். அமெரிக்காவின் MLC டி20 தொடரில் பங்கேற்க ஒப்பந்தம்.

Today's Headlines - 30.03.2026

* The Government of India has announced that the distribution of commercial LPG cylinders to states will be increased to 70%.

* A new Omicron variant called BA.3.2, nicknamed "Cicada," is reportedly spreading rapidly in Europe and the United States.

* To control the rising prices of petrol, diesel, and other fuels, the Government of India has reduced the excise duty imposed on oil companies.

SPORTS NEWS

The Mumbai team, which has won the championship 5 times, has been struggling to win its opening match for the past 13 seasons. Out of 18 seasons, it has lost the first match 14 times.

Ravichandran Ashwin is set to play alongside a Pakistani player, having signed up to participate in the USA's Major League Cricket (MLC) T20 tournament.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive