கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 20, 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-03-2025. வியாழன்

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-03-2025.

வியாழன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ;

இயல்: குடியியல்;

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 993.

குறள்:

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்:

மனிதர்கள் ஒத்திருப்பது என்பது உறுப்பால் ஒத்திருப்பது அன்று, இனிது பேசும் பண்பினால் ஒத்திருப்பதேயாகும்.

பழமொழி :

> மாற்றம் என்பது மானிடத்தத்துவம்.

Variety is the spice of life.

இரண்டொழுக்க பண்புகள்:

1. வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2. கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவரும் பயப்படுவர். - பாரதியார் .

பொது அறிவு:

1. இஸ்டோரியா என்பதன் பொருள் என்ன?

விடை : விசாரிப்பதன் மூலம் கற்றல்.

2. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?

விடை: நீலகிரி

English words & meanings:

+Police.

காவலர்

Producer.

தயாரிப்பாளர்

வேளாண்மையும் வாழ்வும் :

நீங்கள் இருக்கும் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றாலும் நாளைக்கே பற்றாக்குறை வரலாம். வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. உங்களின் சிறு கவனமும் சில லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் நாள்

World House Sparrow Day - WHSD

World Sparrow Day


உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவு கூரப்படுகிறது.

நீதிக்கதை

குரங்குகளுக்கு கூறிய புத்தி

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.

பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளித்தனைத்தை கவனித்துக் கொண்டிருந்த கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது, பறவை ஒரு

பிறகு குரங்குகளை நோக்கி "நண்பர்களே! மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள்" என்று புத்திமதி கூறிற்று. "உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார்" என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து தாக்கின.

நீதி : முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண் முயற்சி தான்.

இன்றைய செய்திகள்

20.03.2025

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாநகராட்சிக்கு உட்பட்ட 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மேயர் பிரியா அறிவிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் 87 செ.மீ. ஆழத்தில் பதக்கம், இரும்பு கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் இஷாராணி பரூவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.

Today's Headlines

20.03.2025

Chennai Corporation Budget: Mayor Priya has announced that the book reading zones with a roof facility will be set up at an estimated cost of Rs. Two crore

In the excavation of Vembakkottai at the depth of 87 cm Iron Medal is Discovered: Minister Thangam Thennarasu Informated.

The Chennai Meteorological Department said that there is a chance of mild rains in Tamil Nadu till March 22.

The central government has said that the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme is being implemented in the last 10 years.

US-based Nick Hague, Sunita Williams, Pear Wilmore and Russia Alexander returned to Earth on a Dragon spacecraft of SpaceX.

Swiss Open Badminton Tournament: India's Isharani Barua won and advanced to the next round.

IPL Cricket: Tickets for Chennai Mumbai Tickets have been sold in an hour.

தமிழ்த்துகள்

Blog Archive