கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, August 16, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருக்குறள் ஆகஸ்ட் 25 9th tamil model notes of lesson

9th tamil model notes of lesson

lesson plan august 25

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

25-08-2025 முதல் 29-08-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உள்ளத்தின் சீர் – வாழ்வியல் இலக்கியம்

5.உட்பாடத்தலைப்பு

திருக்குறள்.

6.பக்கஎண்

73 - 77

7.கற்றல் விளைவுகள்

T-9015 திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறுதல்.

8. கற்றல் நோக்கங்கள்

திருக்குறள் மூலம் அறக்கருத்துகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

வள்ளுவர் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html

11.ஆயத்தப்படுத்துதல்

          திருக்குறள்களைக் கூறி விளக்கச் செய்தல்.

12.அறிமுகம்

அறக்கருத்துகளைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

திருக்குறள், திருவள்ளுவர் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

தமிழரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          திருக்குறளை வாழ்வில் பின்பற்ற முயலுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – தீரா இடும்பை தருவது ............................

          ந.சி.வி – மிகுதியான் எனத்தொடங்கும் குறளை எழுதுக.

உ.சி.வி – நிலம்போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

உனக்குப் பிடித்த திருக்குறள்களை விளக்கத்துடன் எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive