கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 21, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

21-01-2026. புதன் 

திருக்குறள் :

பால் : அறத்துப் பால் ;

இயல்: துறவறவியல் ;

அதிகாரம் : வாய்மை : 

குறள் எண் : 292.

குறள் :

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

உரை :

குற்றமற்ற நன்மையைக் கொடுக்கவல்லதாக இருக்குமானால், பொய்யான சொற்களும் வாய்மை என்று சொல்லப்படும் இடத்தைப் பெற்றுவிடும்.

பழமொழி :

பெரிதாக கனவு காணு, சிறியதாக தொடங்கு.

Dream big, Start small.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

புத்தகத்தைப் போல விசுவாசமான நண்பர் இல்லை.

எர்னெஸ்ட் ஹெமிங்வே.

பொது அறிவு :

01.நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -Albert Einstein

02. தமிழ்நாட்டின் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

காஞ்சிபுரம்-Kanchipuram

English words

Prankster - joker

Expedition - mission

தமிழ் இலக்கணம்:

இன்று எடு என்பதற்கான வினை முற்றுச் சொற்களைப் பார்ப்போம்.

1. சிறிது நேரம் ஓய்வு எடு - தவறு 
சிறிது நேரம் இளைப்பாறு

2. ஆசிரியர் பாடம் எடுத்தார் தவறு

ஆசிரியர் பாடம் கற்பித்தார்

3. உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் - தவறு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்

4. முடிந்த வரை முயற்சி எடுக்க வேண்டும் தவறு

முடிந்த வரை முயற்சி மேற்கொள்ள வேண்டும்

இனி சரியான வினை மரபுச் சொற்களை பயன்படுத்துவீர்கள் தானே மாணவர்களே.

அறிவியல் களஞ்சியம் :

பிரபஞ்சத்தின் 96 சதவிகிதம் ஆனது மனிதர்களால் கண்டறிய முடியாத இருண்ட விஷயம் (டார்க் மேட்டர்) மற்றும் இருண்ட ஆற்றலால் நிரம்பி உள்ளது. இந்த பொருள்களை உருவாக்கும் துகள்கள் ஆனது வழக்கமான விண்வெளி விடயங்கள் அல்லது ஒளியுடன் தொடர்பு கொள்ளாது என்பதால், அவைகள் என்னவென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஜனவரி 21

1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

நீதிக்கதை - கழுதையின் தந்திரம்

வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவதற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது. அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்டபோது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. ஓடையில் விழுந்ததால் கழுதையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று.

ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந்தான். ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.

வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத்தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.

நீதி : தெரிந்தே தவறு செய்யக் கூடாது

இன்றைய செய்திகள் -21.01.2026

*தமிழ்நாடு முழுவதும் நோய் தடுப்பு துறை மூலம் "தொழுநோயை தடுப்பது" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

*தமிழகத்தில் 121 தடுப்பணைகள் மற்றும் 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்

* மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பையில் நடந்தன. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Today's Headlines 21.01.2026

* The Tamil Nadu government has launched an awareness campaign on "Prevention of Leprosy" through the Department of Disease Prevention across Tamil Nadu.

* The Chief Minister of Tamil Nadu has predicted that work is underway to construct 121 check dams and 63 embankments in Tamil Nadu.

* The Tamil Nadu government's public health department has advised against eating fruits bitten by birds and animals due to the increasing spread of the Nipah virus in West Bengal.

SPORTS NEWS

The first leg of the 4th Women's Premier League (WPL) T20 cricket tournament, featuring 5 teams, was held in Mumbai. And first, Bengaluru scored 178 runs for the loss of 6 wickets. The Gujarat team scored only 117 runs for the loss of 8 wickets in 20 overs and lost.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 20, 2026

Road transport vehicles name with pictures kids learning video ai சாலைப் போக்குவரத்து வாகனங்கள்


 

10th English first revision exam question paper virudhunagar 10 ஆம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள்


10th English first revision exam question paper virudhunagar

10th ENGLISH QUESTION PAPER pdf FIRST REVISION EXAM VIRUDHUNAGAR DISTRICT 2026 பத்தாம் வகுப்பு ஆங்கிலம்

 பதிவிறக்கு/DOWNLOAD


பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம்



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.2026 செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.2026 செவ்வாய் 

திருக்குறள்: 

குறள் 291: 

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.         

விளக்க உரை: 

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

பழமொழி :

Today's effort is tomorrow's success.  
இன்றைய முயற்சியே  நாளைய வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 
உங்களை சிறப்பாக செயல்பட வைக்கவே பிரச்சினைகள் ஒரு வாய்ப்பாக வருகிறது.
     டியூக் எலிங்டன்

பொது அறிவு : 
01.உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட மலர் இனம் எது?
ரஃப்லேசியா அர்னால்டி 
            Rafflesia  arnoldii

02.இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு கடல் பாலம் எது?
புதிய பாம்பன் பாலம் -
ராமேஸ்வரம், தமிழ்நாடு 
New Pamban Bridge -Rameshwaram Tamil Nadu.

English words :
shriveled-shrinked due to age
 fatigue-weariness

தமிழ் இலக்கணம்: 

 இன்று செய்வதற்கான வினை மரபுச் சொற்களை பார்ப்போம்

1. மாறன் சிலை செய்தான் – தவறு

    மாறன் சிலை வடித்தான்

2.குமரன் பானை செய்தார் –தவறு

குமரன் பானை வனைந்தான் 

3.வீரன் போர் செய்தான் –வீரன் போர் புரிந்தான்

4.மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாதே – தவறு 

மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காதே


அறிவியல் களஞ்சியம் :
வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

ஜனவரி 20

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

நீதிக்கதை
ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்

ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது. 
தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன. 
நீதி :
எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது 

இன்றைய செய்திகள்

20.01.2026

⭐குடியரசு தின விழா - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார். குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

⭐தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு. நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

⭐ஸ்பெயினில் 2 அதிவிரைவு ரெயில்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு. மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐Regarding Republic Day Celebrations - 1 lakh policemen on security duty across Tamilnadu. The respective state governments are making arrangements for the Republic Day celebrations.

⭐Time is extended  to add names to voter list in Tamilnadu.  As of yesterday, 13.03 lakh people have applied to include their names. The final voter list will be published on February 17, Officers of Election  Commission of India  said.

⭐ 21 killed in Spain high-speed train collision. Train carrying 300 passengers derails between Malaga and Madrid.

 *SPORTS NEWS* 

🏀T20 series against Pakistan: Australia team announced under Marsh. Pakistan and Australia teams will compete in a 3-match T20 series. The T20 World Cup is scheduled to be held next month.

Monday, January 19, 2026

TREES NAME WITH PICTURES KIDS LEARNING VIDEO AI மரங்கள் கற்றல் காணொலி


 

பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் முக்கிய வினாவிடை


10th class Tamil song reading and answering questions is the main quiz

sslc Tenth Tamil public Question 12 - 15 seyyul paadal important question and answer pdf

பத்தாம் வகுப்பு தமிழ் பாடலடி வினா விடை


PDF LINK

2026 பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் முக்கிய வினாவிடை pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


10th class Tamil song reading and answering questions is the main quiz

sslc Tenth Tamil public Question 12 - 15 seyyul paadal important question and answer pdf

பத்தாம் வகுப்பு தமிழ் பாடலடி வினா விடை 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-01-2026. திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

19-01-2026. திங்கள் 

திருக்குறள் :

பால் : அறத்துப் பால்

; இயல்: துறவறவியல் ;

அதிகாரம் : அருளுடைமை

; குறள் எண் : 241.

குறள் :

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள.

உரை :

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

பழமொழி :

நல்லவை நடக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.

Good things take time.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

பொது அறிவு :

01. இந்திய தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?

சேவைத் துறை - Tertiary Sector

2. உலக அளவில் தொழிற்புரட்சி முதல் முதலில் நடைபெற்ற நாடு எது?

இங்கிலாந்து -England

English words :

 swoop-dive

bifurcated-split

தமிழ் இலக்கணம் :

போடு, செய், எடு இவை நம் வினை மரபுச் சொற்களை எவ்வாறு மங்கி அழிந்து போகச் செய்கிறது என்பதைக் குறித்து இன்று காண்போம்.

*போடு*

1. பசு கன்று போட்டது -தவறு பசு கன்று ஈன்றது

2. வீட்டின் மேல் கூரை போட்டனர் - தவறு வீட்டின் மேல் கூரை வேய்ந்தனர்

3. நீதி மன்றத்தில் வழக்கு போட்டார் -தவறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்

4.புதிதாக சாலை போட்டனர் தவறு புதிதாக சாலை அமைத்தனர்

இன்று சில சரியான வினை முற்றுச் சொற்களைப் பார்த்தோம். நாளையும்
தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

திடப்பொருட்களையும், நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.

ஜனவரி 19

1986 - முதற் கணினி நச்சு நிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.

நீதிக்கதை

கரடியும் இரண்டு நண்பர்களும்

ஒரு ஊரில் இரண்டு இணை பிரியாத நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராகவன் மற்றொருவன் சுந்தரன். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராகவன், சுந்தரனிடம் நீ எதைப்பற்றியும் பயபடாமல் என்னுடன் வா. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கரடி ஒன்றின் உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதுமே இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. சில வினாடிகள் ஓடிய பிறகு ராகவன் ஒரு மரம் இருப்பதை கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராகவன் ஏறி அமர்ந்து கொண்டான்.

சுந்தரனுக்கோ மரம் ஏறத் தெரியாது என்று ராகவன் நன்கு அறிந்திருந்தும் அவனைக் கீழே விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற சுய நலத்தோடு ராகவன் நடந்து கொண்டான். சுந்தரனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் இறந்தவனைப்போல் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான்.

அப்போது அங்கு வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. சுந்தரன் இறந்துவிட்டான் என்று நினைத்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. சுந்தரனின் காதருகே சென்று கரடி முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராகவன் கரடி சுந்தரனிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராகவன், கீழே இறங்கி வந்து சுந்தரனை எழுப்பினான். சுந்தரா எழுந்திரி நாம் தப்பி விட்டோம். அந்த கரடி சென்று விட்டது என்று கூறிச் சுந்தரனை எழுப்பினான். சுந்தரனும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

ராகவன், சுந்தரனிடம், கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது? என்று கேட்டான். அதற்குப் சுந்தரன், ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது என்றான். சுந்தரனின் பதிலைக் கேட்டு, ராகவன் தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சுந்தரனோ இனி மேல் நம் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறி விட்டுத் தனியே நடந்து சென்றான்.

நீதி : ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்.

இன்றைய செய்திகள் 19.01.2026

* வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை செய்யும் Vehicle-to-Vehicle (V2V) 6 5 அனைத்து வாகனத்திலும் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

*2024-ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

* தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் வகையில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 9 புதிய அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கின.

* 242 சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்களின் இணைப்புகளை இந்திய அரசு முடக்கியுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

இந்திய ஓபன் பேட்மிண்டன்: தென் கொரிய வீராங்கனை

அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:

முதல் சுற்றில் சுவரேவ், ஜாஸ்மின் பாலினி வெற்றி. உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்.

Today's Headlines 19.01.2026

* The central government is planning to make it mandatory to install Vehicle-to-Vehicle (V2V) communication technology in all vehicles, which will immediately alert you when vehicles come too close.

* Tamil Nadu has ranked 2nd in the NITI Aayog's export ranking list for the year 2024.

*9 new Amrit Bharat trains, including three new Amrit Bharat trains connecting Tamil Nadu and West Bengal, have started service.

* The Indian government has blocked links to 242 illegal betting and gambling websites.

SPORTS NEWS

Indian Open Badminton: South Korean player Ahn Se-young has already won the championship title in 2023 and 2025. Now she has won the championship title for the 3rd time.

In Australian Open Tennis series, Suvarev and Jasmine Paolini won in first round Alexander Suvarev is ranked 3rd in the world.

Prepared by

Covai women ICT_ போதிமரம் 

Sunday, January 18, 2026

AQUATIC ANIMALS KIDS LEARNING VIDEO AI நீர் வாழ் உயிரினங்கள் கற்றல் காணொலி


 

ராம்கோ சூழலியல் பூங்கா பந்தல்குடி விருதுநகர் RAMCO ECO PARK PANDALGUDI VIRUDHUNAGAR


RAMCO ECO PARK PANDALGUDI VIRUDHUNAGAR

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வேலுநாச்சியார், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் ஜனவரி 27

6th tamil model notes of lesson

lesson plan January 27

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-01-2026 முதல் 30-01-2026

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

புதுமைகள் செய்யும் தேசமிது – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

வேலுநாச்சியார், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின் மீதான கருத்துரைகளைப் பகிர்தல், தங்களின் விருப்புவெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

8.கற்றல் நோக்கங்கள்

விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்.

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகளைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

வேலுநாச்சியார், குயிலி, உடையாள் குறித்து அறியும் திறன்.

செய்தி, விளம்பரம், அறிவிப்பு, நிகழ்ச்சித்தொகுப்பு போன்றவற்றை உருவாக்குதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_1.html

https://tamilthugal.blogspot.com/2023/01/velu-nachiyar-drama-by-govt-school-6th.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-6th-tamil-mindmap-term-3-unit-1_8.html

https://tamilthugal.blogspot.com/2022/08/velu-nachiyar-independence-day-speech.html

https://tamilthugal.blogspot.com/2022/08/pdf-velu-nachiyar-tamil-essay-speech.html

https://tamilthugal.blogspot.com/2021/05/velu-nachiyar-tamil-katturai.html

https://tamilthugal.blogspot.com/2020/07/velu-nachiyar-6th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_11.html

https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video.html

https://tamilthugal.blogspot.com/2019/01/6-velunachiyaar.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_36.html

https://tamilthugal.blogspot.com/2021/10/2-tamil-ilakkanam-suttu.html

https://tamilthugal.blogspot.com/2020/06/6-2-3-suttu-ezhuthugal-vina-eluthukal.html

https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_27.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post.html

11.ஆயத்தப்படுத்துதல்

தேசத்தலைவர்கள் குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழ்நாட்டின் பெருமையைக் கூறுதல்.

வேலுநாச்சியார் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

வினாச் சொற்களைக் கூறச்செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வேலுநாச்சியாரின் வீரம் குறித்துக் கூறுதல். குயிலி, உடையாளின் தியாகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          நடுகல் குறித்து விளக்குதல்.

          சிவகங்கைப் போராட்டம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் விடுதலைப் போராட்டம் குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் குறித்து விளக்குதல்.

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் பயன்பாடு குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறுதல்.






          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் வீரத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். வேலுநாச்சியார் பற்றி அறியச் செய்தல். சிவகங்கை குறித்து அறிதல். சுட்டு, வினா எழுத்துகளைப் பயன்படுத்தித் தொடர்களை அமைத்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – மைசூரிலிருந்து படையை அனுப்பியவர் ...........................

சுட்டு எழுத்துகள் என்றால் என்ன?

          ந.சி.வி – வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.

                   அகவினா, புறவினா – வேறுபடுத்துக

          உ.சி.வி – தமிழக விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு எளிமையாக பாடப்பொருளை மீண்டும் விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

சிவகங்கை குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

வேலுநாச்சியார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

நீங்கள் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வழக்கு ஜனவரி 27

7th tamil model notes of lesson

lesson plan January 27

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-01-2026 முதல் 30-01-2026

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

நயத்தகு நாகரிகம் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

வழக்கு

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-720 பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும்பொழுது, பொருத்தமான சொற்கள், தொடரமைவுகள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக்கூறுகளைப் (காலம், பெயரடை, இணைச்சொற்கள்) பொருத்தமாகப் பயன்படுத்துதல்.

8.திறன்கள்

சொற்கள் மற்றும்  தொடர்களில் பயின்றுவரும் வினைமுற்றுகளை அறிந்து பயன்படுத்தும் திறன்.

9.நுண்திறன்கள்

வழக்குச் சொற்கள், போலி போன்றவற்றைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-7th-tamil-mindmap-term-1-unit-3_31.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-3-valakku-7th-tamil-ilakkanam-vazhaku.html

https://tamilthugal.blogspot.com/2020/06/7-1-3-vazhakku-poli-7th-tamil-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_74.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த ஊர்களின் சுருக்கப் பெயர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வழக்குச் சொற்களைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தகுதி வழக்கு, இயல்பு வழக்கு இவற்றின் வகைகளைக் கூறி உதாரணங்களுடன் விளக்குதல். போலியையும் அதன் வகைகளையும் எடுத்துக்காட்டுகள் மூலம் புரிய வைத்தல்.

          மாணவர்கள் அறிந்த குழூஉக்குறிச் சொற்களைக் கூறச்செய்தல். ஐந்து – அஞ்சு முற்றுப்போலியாக நாம் பயன்படுத்தும் பிற சொற்களை அறிந்து வரச் செய்தல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் இடக்கரடக்கல், மங்கலம், மரூஉச் சொற்களைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வழக்கு .............................. வகைப்படும்.

          ந.சி.வி – தகுதி வழக்கின் வகைகளை எழுதுக.

உ.சி.வி –      நன்காடு என்பது எவ்வாறு மங்கல வழக்குச் சொல்லுக்கு உதாரணமாகும் என விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

குழூஉக்குறிச் சொற்கள் எங்கெங்கெல்லாம் பயன்படும் என்று சிந்தித்து எழுதுக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இடைச்சொல், உரிச்சொல் ஜனவரி 27

8th tamil model notes of lesson

lesson plan January 27

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-01-2026 முதல் 30-01-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

பாருக்குள்ளே நல்ல நாடு – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

இடைச்சொல், உரிச்சொல்

6.பக்கஎண்

127 - 128

7.கற்றல் விளைவுகள்

T-810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

நால்வகைச் சொற்களை அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2026/01/6_86.html

https://tamilthugal.blogspot.com/2026/01/6_17.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-idaichol.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-5-9th-tamil-ilakanam-unit-5-sol.html

11.ஆயத்தப்படுத்துதல்

பல்வேறு சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

நால்வகைச் சொற்களை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சொல் குறித்துக் கூறுதல். இடை, உரிச்சொற்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          உதாரணங்களுடன் விளக்குதல்.

          சொற்களைக் கொடுத்து வகைகளை அறியச் செய்தல்.

          நால்வகைச் சொற்களை அறிந்து பயன்படுத்துதல்.

உரிச்சொற்களில் ஒரு சொல் பல பொருள், பல சொற்கள் ஒரு பொருள் குறித்து விளக்குதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சொற்களின் வகைகளை மாணவர்களிடம் உணர்த்துதல். சொல் பற்றி அறிந்து இனங்காணச் செய்தல். சொந்தமாகச் சொற்களை எழுதுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – உரிச்சொல் என்றால் என்ன?

          ந.சி.வி – சொற்களின் வகைகளை எழுதுக.

          உ.சி.வி – நீ அறிந்த உரிச்சொற்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு எளிமையாக பாடப்பொருளை மீண்டும் விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உரிச்சொல் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெரியாரின் சிந்தனைகள் ஜனவரி 27

9th tamil model notes of lesson

lesson plan January 27

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-01-2026 முதல் 30-01-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

என்தலைக் கடனே – உரைநடை உலகம்.

5.உட்பாடத்தலைப்பு

பெரியாரின் சிந்தனைகள்

6.பக்கஎண்

154 - 157

7.கற்றல் விளைவுகள்

T-9030 தமிழரின் சிந்தனை மரபுகளைப் படித்துணர்ந்து பகுத்தறிவுச் சிந்தனையை வாழ்வில் பின்பற்றுதல். 

8.கற்றல் நோக்கங்கள்

தமிழரின் சிந்தனை மரபுகள் குறித்து அறிதல்.

9.நுண்திறன்கள்

சிக்கனத்தைக் கடைப்பிடித்தல், எளிய வாழ்க்கை, விழாக்கள் எளிமையாக நடத்துதல் பற்றிய பாடப்பகுதியினைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_75.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-periyar.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-periyarin.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-1-qr-code-video.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-2-qr-code-video.html

https://tamilthugal.blogspot.com/2025/09/blog-post_8.html

11.ஆயத்தப்படுத்துதல்

          தமிழக சீர்திருத்தச் சிந்தனைவாதிகள் குறித்துக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தந்தை பெரியார் பற்றிக் கூறி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பெரியார் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          பகுத்தறிவு, சமூகம், கல்வி, மொழி இலக்கியம் குறித்து விளக்குதல்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக பெண்கள் நலம், சிக்கனம் குறித்து உரைத்தல்.

சிந்தனைச் சிறப்புகள் குறித்து அறிதல். பிடித்த சிந்தனைகள் குறித்துப் பேசுதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பெரியாரை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பகுத்தறிவு பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

          தமிழர்களின் சிந்தனையையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பெரியார் தோற்றுவித்த இயக்கம் ...............................

          ந.சி.வி – பகுத்தறிவு - விளக்குக.

உ.சி.வி –      எழுத்துச் சீர்திருத்தம் குறித்து சுருக்கமாக எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          பெரியாரை நேர்காணல் செய்வதாகக் கருதி வினாக்களை எழுதுக.

பெரியார் குறித்த தகவல்களைத் திரட்டுக.

தமிழ்த்துகள்

Blog Archive