கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 02, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 9

9th tamil model notes of lesson

lesson plan March 9

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-03-2026 முதல் 13-03-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்கள்

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-1.html

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-2.html

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-3.html

4.திருப்புதல் வினாக்கள்

வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.

மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் வலியுறுத்திய சீரமைப்புகளை விளக்குக.

இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக.                    

தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிச் செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக. 

குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண் கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

வார இதழ் ஒன்றில் படித்த கவிதையைப் / கதையைப் பாராட்டி அந்த இதழாசிரியருக்கு அஞ்சலட்டையில் கடிதம் எழுதுக.

செல்வம் என்பவர் மதுரையில் உள்ள அஞ்சலகத்தில் தன் கணக்கில் இருந்து 7000 பணம் பெற விரும்புகிறார். தேர்வர் தன்னை செல்வமாக எண்ணி படிவத்தை நிரப்பவும்.

மொழிபெயர்க்க

A nation's culture resides in the hearts and in the soul of its people - Mahatma Gandhi

The art of people is a true mirror to their minds - Jawaharlal Nehru

The biggest problem is the lack of love and charity - Mother Teresa

You have to dream before your dreams can come true - APJ Abdul Kalam

Winners don't do different things; they do things differently - Shiv Khera.

தமிழ்த்துகள்

Blog Archive