கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, March 03, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-03-2026. செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

03-03-2026. செவ்வாய்

திருக்குறள் :

பால்: பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம்: ஊக்கம் உடைமை

குறள் எண் : 591.

குறள் :

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்

உடைய துடையரோ மற்று.

உரை :

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

பழமொழி :

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

As you sow, so you reap.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி :

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே.

நீ நடந்தால் அதுவே பாதை. அடால்ஃப் ஹிட்லர்.

பொது அறிவு :

01. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

குஜராத்- Gujarat

02. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?

நீதிபதி.மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா

Hon'ble Mr. Justice Manindra Mohan Shrivastava

English words :

Scrutinize check closely

refrain - stop

தமிழ் இலக்கணம்:

சின்னக்கொடி, சின்ன கொடி எது சரி ?

பிரித்துப் பார்ப்போம்

> சின்னக்கொடி 

சின்னம் + கொடி

இது சரி. கட்சியின் சின்னம் கொண்ட கொடி என்று பொருள் படும்.

சின்ன கொடி =சின்ன + கொடி

சிறிய கொடி என்று பொருள்.

இரண்டும் சரியே.

1. சின்னம் என்ற சொல் நாம் உபயோகப் படுத்தும் போது வல்லினம் மிகுந்து வரும்

2. எது சரியான சொல் என்ற சந்தேகம் இருந்தால் பிரித்துப் பார்த்தால் தெளிந்து விடும்.

அறிவியல் களஞ்சியம் :

சர்வதேச பூமிச் சுழற்சி மற்றும் குறிப்பு முறைமைச் சேவை என்னும் நிறுவனம் அணுக்கடிகாரங்களைப் பயன்படுத்தி, மில்லி வினாடி துல்லியத்துடன் பூமியின் சுழற்சி நீளத்தைக் கண்காணித்து வருகிறது. 1972 முதல் இந்தப் பதிவுகள் வைக்கப்பட்டு வருகின்றன. பூமி அதன் உருவாக்கத்திலிருந்து பெற்ற சுழற்சி உந்தத்தின் காரணமாக சுழல்கிறது. சந்திரனின் ஈர்ப்பு விசை நீண்ட காலமாக அதன் வேகத்தைக் குறைத்து வருகிறது. சமீப காலங்களில், பூமியின் உள்ளகம், புவியின் மேலோடு, கடல் நீரோட்டங்கள், வளிமண்டல மாற்றங்கள் போன்ற சிக்கலான உள் காரணிகள் தினசரி சுழற்சி வேகத்தில் சிறிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன என கணிப்பு.

மார்ச் 03 உலகக் காட்டுயிர் நாள்

உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் "காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்" (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. தாய்லாந்தினால்

இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.

நீதிக்கதை - திருந்திய மகன்

சிவாவின் தந்தை கல் உடைக்கும் கூலித் தொழிலாளி வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை, உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைப் போல் தன்மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிவாவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.

சிவா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். சிவா! கடமைக்காக பள்ளிக்குச் சென்று வந்தானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிது கூட இல்லை. பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு சில மாணவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டும் பொழுதைக் கழித்து வந்தான். தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான்.

அவர், சிவா தனக்கு ஒரே மகன் என்பதாலும், படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும் பொழுதெல்லாம் பணம் கொடுப்பார். சிவா, தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.

அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சிவாவின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சிவா கூடியிருந்தவர்களிடம், அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்? என்று கேட்டான். அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள், என்று கூறினர். பலநாட்களாக அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறினர்.

அதைக் கேட்டதும் சிவாவிற்கு கை, கால்கள் உதறல் எடுத்தது. மற்றவர்கள் வெறுக்கும்படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான். அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று பாடங்களை நன்றாகப் படித்து வந்தான். தன் மகன் சிவா திருந்தியதைக் கண்ட அவன் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இன்றைய செய்திகள் 03.03.2026

* இந்தாண்டின் மார்ச் முதல் மே வரையில், வட இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

* ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காரணமாக உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 850 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

* மத்திய கிழக்கில் போர் சூழல் இந்தியாவின் ரூ.6 ஆயிரம் கோடி அரிசி ஏற்றுமதி கடும் பாதிப்பு

விளையாட்டுச் செய்திகள்

#T20 WC 2026: அரை இறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா!

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: கர்நாடகாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்

Today's Headlines - 03.03.2026

* The India meteorological department has said that North India will experience warmer then usual temperatures from March to May this year.

* As global tensions rise due to the US and Israel's attack on Iran around 850 flights have been cancelled in India in the last 2 days.

* India's rupees 6000 crore rice exports hit hard by the war situation in the middle East.

*Sports news:

* T20 WC 2026 South Africa to face New Zealand in the final.

* Ranji trophy final-Jammu and Kashmir creates history by defeating Karnataka.

தமிழ்த்துகள்

Blog Archive