10th tamil second mid term exam answer key 2026 virudhunagar district
பத்தாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2026
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. ஈ) இளவேனில் 1
2. அ.திருப்பதியும் திருத்தணியும் 1
3. இ.பழுப்பு 1
4. இ.வஞ்சி 1
5. ஆ.பழநியப்பன் 1
6. இ.சேர நாடு, சோழ நாடு 1
7. ஈ.முத்தொள்ளாயிரம் 1 தமிழ்த்துகள்
8. அ.நந்தின் - பந்தர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. அ. கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது? 1
ஆ. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதிய நூல் எது? 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
10. மகரந்தம் சிந்துகின்ற சோலைகள்,
மரம் செறிந்த செண்பகக் காடுகள்,
அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்,
புது மணல் தடாகங்கள்,
குருக்கத்திக் கொடியால் ஆன வேலியை உடைய கமுகந் தோட்டங்கள்,
நெல் வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயு ஆறு. 2
11. ம.பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.
மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். 2
12. அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை. ஏதேனும் 2 2
13. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. 2
கட்டாய வினா
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14. கோல்டு பிஸ்கட் - தங்கக் கட்டி
யூஸ் - பயன்படுத்தி
வெயிட் - எடை 2
15. வெட்சித்திணை, கரந்தைத்திணை ஆநிரைகள் சார்பானது.
(கவர்தல், மீட்டல்)
வஞ்சித்திணை, காஞ்சித்திணை படைகள் சார்பானது
(போருக்குச் செல்லுதல்,
எதிர்த்துப் போரிடல்)
நொச்சித்திணை, உழிஞைத்திணை கோட்டை மதில் சார்பானது.
(கோட்டையைக் காத்தல், கோட்டையைச் சுற்றி வளைத்தல்). 2
16. பேராசிரியர் அன்பழகனார் கலைஞரை, பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் கூறினார். 2
17. கொண்ட – கொள்(ண்) + ட் + அ
கொள் – பகுதி(ண் ஆனது விகாரம்)
ட் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி 2
18.படிப்போம் பயன்படுத்துவோம்
அ. திரைக்கதை 1
ஆ. ஒப்பந்தம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. வஞ்சப்புகழ்ச்சி அணி
ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.
அணிப் பொருத்தம்
தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல கயவர்களும் தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர்.
இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. 1) மனோன்மணியம் சுந்தரனாரின் 'நீராருங் கடலுடுத்த' பாடலை அரசு விழாக்கள் அனைத்திலும் தொடக்கப் பாடலாக பாடுவதற்கு வழி வகுத்தார்.
2) 2010 ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி, செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலை இயற்றி வெளியிட்டு தமிழுக்குச் சிறப்பு செய்தார். 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
21. சேர நாட்டு வளம்
பகைவர் அஞ்சும் வேலினைக் கொண்ட சேரனின் நாட்டில் செவ்வாம்பல் மலர்கள் அரக்கு நிறத்தில் விரிந்தன. நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்து விட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன.
சோழ நாட்டு வளம்
யானைப்படைகளை உடைய சோழனது நாடு நெல் வளமும் வீரமும் மிக்கது. அறுவடை செய்த உழவர்கள் நெற்போர் மீது ஏறி நின்று 'நாவலோ' என்று கூவி மற்ற உழவர்களை அழைப்பர். போர்க்களத்தில் கொல் யானை மீது ஏறி நின்று மற்ற வீரர்களை' நாவலோ' என்று அழைப்பது போல இது இருந்தது.
பாண்டிய நாட்டு வளம்
முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியநாடு முத்து வளம் மிக்கது. சங்கு மணலில் ஈனுகின்ற முட்டைகளும் தரையில் உதிர்ந்து கிடக்கும் புன்னை மொட்டுகளும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் அங்கு முத்துகள் போல் இருக்கின்றன. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
22. பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை ஆகும். 3
23. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்
இடம் –
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.
பொருள் -
தலையைக் கொடுத்தேனும் (உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)
விளக்கம் –
1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.
3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட தொடர். 3
24. கட்டாய வினா.
அ. தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ.
அல்லது
ஆ. தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; . 3
விடை அளிக்க 2x5=10
25. அ. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்
அல்லது
ஆ.நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
26. கவினுற எழுதுக.
பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
விடை அளிக்க 1x8=8
27. அ. மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. பாய்ச்சல்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
